சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை.
சென்னை செம்பியம் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே நின்று கொண்டிருந்த போது அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு 6 நபர்கள் கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.
படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்
ஆம்ஸ்ட்ராங்கை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாகக் கூறப்படுகிறது. ஆம்ஸ்டாங்கை வெட்டி விட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.வருத்தம் தரும் செய்தி. ஆன போதிலும் இவர்கள் திடீர் தலைவர்களாக எப்படி உருவானார்களோ அதே வழியில் உயிரையும் இயற்கை எடுத்து விடுகிறது.
ஜாதிய வழி கட்டப்பஞ்சாயத்துக்கள் சென்னை பகுதியில் கடந்த காலங்களில் நடந்த பல நிகழ்வுகள் இதன் தொடர்ச்சியாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை செல்லும் வாய்ப்பு உள்ளது
சென்னையில் கொளத்தூர் பகுதி சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆம்ஸ்ட்ராங் வயது: 52 வழக்கறிஞர் LLB, ஆண்டு 2009, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதியில் பயின்றார்,
கடந்த 2009 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்த செய்தி வெளியாகியதில், சென்னையில் உள்ள கேங்ஸ்டர்கள் பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அப்போதைய ஆசிரியர் சுனில் நாயர், பத்திரிக்கையாளர் செல்வராஜ், வெளியீட்டாளர் நாராயணன் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் சிவில் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.
அதில் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி ஆனந்தன், எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமலும் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தச் செய்தி வெளியிட்டுள்ளதாக வாதிட்டார். மேலும், இது தொடர்பாக தங்கள் தரப்பில் அனுப்பிய நோட்டீசுக்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 13 வது எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த செய்தி வெளியிட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளதாகக் கூறி, மூன்று பேருக்கும் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும் மூன்று பேருக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். பின்னர், தங்களுக்கு உடனடியாக ஜாமின் வழங்கக் கோரி மூன்று பேர் தாக்கல் செய்த மனுவையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டது. தற்போது தேர்தவில் திமுக கூட்டணியின் நாமக்கல் வேட்பாளர் ஜாதி வெறியர் என சூரியமூர்த்தியின் வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு மற்றும் தேசிய தேர்தல் ஆணையத்திடன் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக புகார் மனுவை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி முன்னாள் சுயேச்சை கவுன்சிலர் (2006)- வழக்கறிஞர் -பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்,
சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை.
"பூர்விக வாழ்விடம் பெரம்பூரில் இருந்து அண்ணாநகருக்கு இடம் பெயர்ந்தவர்,
நண்பர்களை பார்த்துப் போக பெரம்பூர் வந்தபோது இந்த கொடூரச்செயல் நிகழ்ந்து விட்டது" என்கின்றனர் அவர் ஆதரவாளர்கள்.
நண்பர்களை பார்த்துப் போக பெரம்பூர் வந்தபோது இந்த கொடூரச்செயல் நிகழ்ந்து விட்டது" என்கின்றனர் அவர் ஆதரவாளர்கள்.
ஆம்ஸ்ட்ராங் உடல் உடற்கூராய்வுக்காக அப்பல்லோவில் இருந்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு
பட்டத்து யானையாக சென்னையில் வலம்வந்த கே. ஆம்ஸ்ட்ராங்
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை காவல்துறை தரப்பில் :
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது), முன் விரோதம் காரணமாக பெரம்பூர், செம்பியம் PS எல்லையில் உள்ள வேணுகோபால் சாமி கோவில் தெருவில் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 10 காவல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்ற சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை தொடர்கிறது. இங்கு சில முன் சம்பவம் காணவும் :- பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையும், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடிக்கு ஆதரவான ஆற்காடு சுரேஷ் மரணமும்.!
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகிலுள்ள புண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவுடி சுரேஷ். இவர் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காஞ்சி சங்கரராமன், ரவுடி ராதாகிருஷ்ணன், சின்னா மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் கொலை என பல கொலை வழக்குகளும், மேலும் வழிப்பறி வழக்குகளும் இவர் மீதுள்ளன. 8 முறை குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். மேலும், தமிழ்நாடு தாண்டி ஆந்திரப் பிரதேசத்திலும் இவர் மீது பல வழக்குகள் உள்ளன.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக ஆற்காடு சுரேஷ், அவரது வழக்கறிஞருடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு பிறகு புளியந்தோப்பு மாதவன் உட்பட சில நண்பர்களுடன் மெரினா கடற்கரையையடுத்த பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்று மணல்பரப்பில் அமர்ந்து மாதவனுடன் மது குடிக்கும் போது காரில் வந்த மர்மக் கும்பல் ஒன்று ஆற்காடு சுரேஷையும், மாதவனையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆற்காடு சுரேஷ் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த மாதவன் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆற்காடு சுரேஷ் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த மாதவன் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.
ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக ஜோகன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தின் முக்கிய சாட்சியான மாதவனையும் அந்த கும்பல், ஆற்காடு சுரேஷை கொலை செய்த 5 மாதங்களில் அதாவது கடந்த ஜனவரி மாதம் கொலை செய்தது.
ஆற்காடு சுரேஷ் கொலை பின்னணியில் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் இருப்பது அப்போது விசாரணையில் தெரிய வந்தது.
ஆற்காடு சுரேஷ் அந்நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்.
ஆற்காடு சுரேஷ் அந்நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்.
ஆனால், ஆருத்ரா கோல்டு பண மோசடியில் பாதிக்கப்பட்ட சிலருக்கு, தற்போது கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் பணத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது தான் ஹை லைட் செய்தி.
இந்த நிலையில் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதன் பின்னால் ஆம்ஸ்ட்ராங் மீது சந்தேகப்பட்டு சுரேஷ் தரப்பினர் கடும் கோபம் கொண்டனர் எனவும் ஆற்காடு சுரேஷின் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கைத் தொடர்ந்து கண்காணித்தும் வந்துள்ள நிலையில் தான் நேற்று மாலை இருள் சூழ்ந்த நிலையில் பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்.
"பட்டினப்பாக்கம் கொலைக்கு பழி தீர்க்கத்தான் பழிக்குப் பழியாக பெரம்பூரில் வைத்து ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார்கள் காவல்துறை தரப்பில்!
கருத்துகள்