கலாச்சார பாரம்பரிய முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்
கலாசார பாரம்பரிய முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய கலாச்சார அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
கலாச்சார விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், உலக பாரம்பரிய தினம், உலக பாரம்பரிய வாரம், சர்வதேச அருங்காட்சியக தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களையொட்டி, கண்காட்சிகள், விரிவுரைகள், ஸ்லைடு ஷோக்கள், பயிலரங்குகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிற நிகழ்ச்சிகள் மூலம் அமைச்சகம் தொடர்ந்து கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் உள்ள காட்சி விளக்க மையங்களில் காணொலிப் படங்கள் காண்பிக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி, ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள், வாசிப்பு நாள், சர்வதேச அருங்காட்சியக தினம், ஆசிரியர் தினம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் போது, புத்தக கண்காட்சிகள், கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு கலாச்சார அமைச்சகம் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கலைக்கூடங்கள், நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பிரிவு சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி, நூலகங்களின் திருவிழா மற்றும் இந்திய கலை மற்றும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை பயிலரங்குகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், மாஸ்டர் வகுப்புகள், நேரடி பயிற்சி போன்றவற்றின் மூலம் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாக்க மத்திய அரசு நிதியுதவி
கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாக்க பாடுபட்டு வரும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அயராது பாடுபடும் தகுதிவாய்ந்த கலாச்சார அமைப்புகள் / தனிநபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
பால்கர் மாவட்டம் உட்பட மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு கலாச்சார அமைப்புகள் / தனிநபர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ள விவரத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்
60 வயது அதற்கு மேற்பட்ட வயதுடைய, ரூ.72,000-த்திற்கு மிகாத ஆண்டு வருமானம் உடைய கலைஞர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, “வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்” என்ற பெயரிலான ஒரு திட்டத்தை மத்திய கலாச்சார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்களுக்கு, அதிகபட்சமாக மாதம் ரூ.6,000/- நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. துடிப்புடன் பணியாற்றிய காலத்தில், கலை, எழுத்து உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அல்லது இன்னும் வழங்கி கொண்டிருந்தாலும், வயது முதிர்ச்சி காரணமாக நிலையான வருமானம் ஈட்ட முடியாத நிலையில் உள்ள, வயது முதிர்ந்த கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்கு நிதியுதவி அளித்து, அவர்களது சமூக- பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த ஐந்தாண்டுகளில் மாநில வாரியாக வழங்கப்பட்ட தொகை, விவரம் வருமாறு:
(ரூ.லட்சங்களில்)
வ.எண்.
மாநிலங்கள்
2019-20 நிதியாண்டு
2020-21
நிதியாண்டு
2021-22 நிதியாண்டு
2022-23
நிதியாண்டு
2023-24
நிதியாண்டு
வழங்கப்பட்ட தொகை
1
ஆந்திரப் பிரதேசம்
22.16
5.10
72.29
84.66
153.30
2
அசாம்
1.92
0.96
0.48
1.57
2.41
3
பீகார்
-
-
-
-
15.47
4
தில்லி
-
-
-
-
5.87
5
அரியானா
0.04
-
0.93
0.56
3.69
7
ஜார்கண்ட்
1.11
2.28
3.00
3.59
3.88
8
கர்நாடகா
30.29
29.97
59.55
64.32
341.98
9
கேரளா
13.34
8.18
24.49
25.30
64.21
10
மத்தியப் பிரதேசம்
5.41
2.44
5.04
3.86
6.95
11
மகாராஷ்டிரா
85.86
106.61
190.49
273.49
795.97
12
மணிப்பூர்
3.08
3.36
7.84
0.60
14.70
13
நாகாலாந்து
0.04
0.48
0.92
0.12
3.28
14
ஒடிசா
84.04
119.46
276.95
306.77
1063.40
16
ராஜஸ்தான்
0.87
0.07
1.23
0.71
1.36
17
தமிழ்நாடு
9.92
0.87
15.49
14.60
46.96
18
தெலங்கானா
86.18
53.20
217.29
268.16
274.94
19
திரிபுரா
0.06
0.24
0.92
0.12
-
20
உத்தரப் பிரதேசம்
3.20
5.12
13.08
15.46
67.24
21
உத்தராகண்ட்
-
-
-
-
2.43
22
மேற்கு வங்கம்
8.26
5.09
12.31
11.71
28.53
மொத்தம்
355.82
343.46
902.30
1075.60
2896.57
எல்ஐசி
1461.78
527.85
639.87
783.58
-
மொத்தம்
1817.60
871.31
1542.17
1859.18
2896.57
எல்ஐசி வாயிலாக 2022-23 முதல் நிதியுதவி பெறும் பயனாளிகளின் மாநில வாரியான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை.
மேற்கண்ட தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்