புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் “உலக சுற்றுச்சூழல் தினம்” இன்று காலை (10.07.2024) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியும், இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) புதுச்சேரி மாநில மையமும் இனைந்து நடத்தியது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினமானது “எங்கள் நிலம் எங்கள் எதிர்காலம்” என்ற தலைப்பை மையமாகக்கொண்டு கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மின்சாரத் துறை செயல் பொறியாளர் திரு. K K விமல் குமார், முனைவர். S. திருஞானம், தலைவர், இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) புதுச்சேரி மாநில மையத்தின் தலைவர் முனைவர் திரு எஸ்.திருஞானம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய கழகத்தின் இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர் வருங்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்கள் குறித்தும் பேசினார். மேலும் அவர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதில் ஆரோக்கியமான சூழலின் முக்கியப் பங்கையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் பங்களிப்பதில் இளநிலை,முதுநிலை மாணவர்களின் பொறுப்பையும், இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் என்றும், நிலையான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், பசுமை தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்த வேண்டும், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை பரப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு. K K விமல் குமார் அவர்கள் மின்சார உற்பத்திக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுற்றுச்சூழலுக்கு அதன் தாக்கத்தையும் குறித்துப் பேசினார். கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட முனைவர். S. திருஞானம் அவர்கள் பசுமை கட்டிடங்களின் முக்கியத்துவத்தையும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அவற்றின் பங்கையும் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக உலக சுற்றுச்சுழல் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சுவரொட்டி தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதிநிதிகள் பரிசுகளை வழங்கினார்கள்.
கருத்துகள்