நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற மக்களவையில், ஜனாதிபதியின் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், கடந்த பத்தாண்டுகளாக கடுமையான தாக்குதலுக்கு அரசியல் சாசனம் உள்ளானது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே. கடந்த பத்தாண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனது நாடாளுமன்ற உறுப்பினர் . பதவியையும், வீட்டையும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு பறித்தது. அரசமைப்பை நாங்கள் பாதுகாத்துள்ளோம். அதிகாரத்தை விட மேலானது ஒன்று இருக்கிறது. அதிகாரத்தை விட உண்மையை நம்புபவன் நான். ஹிந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை வெறுப்புக் குறித்து மட்டுமே பேசுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியோ, பாரதிய ஜனதா கட்சியோ ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஹிந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதமல்ல என்றார். சிவன் படத்தை காட்டிப் பேசிய
எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது :- ஹிந்துக்களை வன்முறையாளர்களாகக் காட்ட ராகுல் காந்தி முயற்சிக்கிறார். ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயத்தின் மீதான தாக்குதல்" என்றார்.
கருத்துகள்