பாறையைப் பிடித்து உயிருக்குப் போராடியவரைக் காப்பற்ற தீவிரமாக முயற்சி
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள கிராமத்தில், மிகப் பெரிய வெள்ளத்துக்கு மத்தியில் சேற்றில் மூழ்கிய நிலையில் ஒரு பெரிய பாறையை பிடித்தபடி ஒரு நபர் உயிருக்குப் போராடிய காட்சிகள் வெளியாகியது. அவரைக் காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்ததாகத் தகவல்.நிலச்சரிவில் சிக்கிய முண்டக்கை நகர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் . காலை 7.30 மணியளவில் அப்பகுதியின் பரவியது கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ராகவன் கண்ணில் உயிருக்கு போராடிய அந்த நபர் சிக்க, இந்தச் சம்பவம் வெளிவந்தது. ஆற்றில் ஒரு பக்கம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மறுபக்கத்தில் நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்ட பாறைகளுக்கு மத்தியில் ஒரு கால் மண்சரிவில் சிக்கியுள்ள அந்த நபரை யாரும் அணுக முடியவில்லை. அவரது நிலையை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பின , மீட்புக் குழுக்கள் அவரை மீட்க விரைந்தன.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை நகர் மற்றும் சூரல்மலா பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, இதுவரை 64 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன, ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவில் பெரு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்றும் (ஜூலை 30)
கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நிலச்சரிவால் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அட்டமலா - முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் காயமடைந்தோர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் இருக்குமெனக் கூறப்படுகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அட்டமலா, நூல்புழா, முண்டக்கை, அட்டமலா பகுதிகள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்த பகுதிகளாகும். மீட்புக் குழுக்கள் கடுமையான மீட்பு நடவடிக்கை ஈடுபட்டுள்ளன. 999 திரைப்படம் எடுத்தவர்கள், தங்களுடைய காடுகளை அழித்த காரணம் என்ன?
முல்லைப் பெரியாறு அணையைக் குறி வைக்காமல், உங்கள் மலைகளைப் பாதுகாக்கவும். என்பதே கேரளா மக்களுக்கான பொது நீதி
கருத்துகள்