முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி அறிக்கை வரும் வரை போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்கள் நிலை

மத்திய அரசு அமல்படுத்தி


உள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைத்துள்ளது  தமிழ்நாடு அரசு. இந்த சட்டங்களில் மாநில அளவில் என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரலாம் என இந்த குழு ஆராய்ந்து ஒரு மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், மத்திய அரசால் அவை "பாரதிய நியாய சன்ஹிதா, 2023", "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023" மற்றும் "பாரதிய சாக்ஷியா சட்டம், 2023" என மாற்றப்பட்டு, 1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (8-7-2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சத்யநாராயணன் அவர்கள் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார்.

இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://bprd.nic.in/page/new_criminal_laws இந்தியாவிலுள்ள நீதிமன்றங்களில் விசாரணை நிலுவையில் தேங்கியுள்ள மொத்த வழக்குகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால்  அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.


உச்சநீதிமன்றங்களில் .80,221 வழக்குகள் நிலுவையிலுள்ளன. அணைத்து மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் 62,00,061 வழக்குகளும் இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்கள், தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களில் 4,47,87,945 வழக்குகள் விசாரணை நடத்தி இதுவரை தீர்க்கப்படாமல் நிலுவையிலுள்ளன.

இதில் எத்தனை உரிமையியல், குற்றவியல், மற்றும் பல்வேறு வகையான கம்பெனிகள் சட்டம்,  ஊழல் தடுப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பசுமை வழக்குகள், அதிகார மட்டத்தில் நிகழ்ந்த இலஞ்ச லாவண்யங்கள் மாநிலங்களுக்கு இடையிலான தீர்வாகாத தாவாக்கள்  பல்வேறு மக்களுக்குமான அண்டை அக்கம்பக்கத்து நியாயங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் என ஏராளமான வழக்குகள் விசாரணை நடத்தி தீர்வு காணப்படாமலேயே இருக்கின்றன என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் காட்டும் வகையில் உதாரணமாக இந்தியாவில் நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் வழக்குகளில் இரண்டைக்  குறிப்பிடலாம்.


அதில் மிகப் பழமையான வழக்கு என்றால் தோசிபுரா நில வழக்கு. நாடு சுதந்திரமடைவதற்கு முன் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி காலத்தில் அதாவது 1878 ஆம் ஆண்டில் வாரணாசி நீதிமன்றத்தில் துவங்கியது.

வாரணாசி அருகிலுள்ள தோசிபுராவில் இரண்டு ஏக்கர் நிலம் சன்னி (எதிர்) ஷியா முஸ்லிம் மக்களுக்கிடையே அது தங்களுக்குச் சொந்தம் என்கிற முறையில் இரண்டு தரப்பினரும்  தொடர்ந்த வழக்காய் இருந்தது. பனாரஸ் மகாராஜா இருவார (குடிவாரம் மற்றும் மேல் வாரம்) தர்மாசனம் எனும் தானமாக வழங்கிய நிலம் எனச் சொல்லப்பட்டதை சன்னிப் பிரிவு இஸ்லாமிய மக்கள் ஏற்கவில்லை.



நீண்டகாலமாகவே இழுபறியான வழக்கு1976 ஆம் ஆண்டில் மீண்டும் வாரணாசி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பல விசாரணைகளைக் கடந்த பிறகு 1981 ஆம் ஆண்டில் இது ஷியாப் பிரிவினருக்குச் சொந்தமென்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 136 வருடங்கள் நிலுவையிலிருந்த வழக்கு.

அதற்கடுத்த இன்னொரு வழக்கு:

1951ஆம் ஆண்டில் கொல்கத்தா நீதிமன்றத்தில் தாக்கல் ஆன வழக்கு. பெர்ஹாம்பூர் வங்கி திவாலான காரணத்தினால் தாக்கலான வழக்கு.  2006 ஆம் ஆண்டு வரை இழுபறியாகவே இருந்து . 57 வருடங்கள் நிலுவையிலிருந்த வழக்குகளால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதையும் பார்க்க வேண்டியதுள்ளது. மேலும் குறிப்பிட்ட சதவிகிதம் குடும்ப விவாகரத்து வழக்குகளும் முக்கிய இடம் பிடிக்கின்றன. 

அடுத்து, மத்திய இரயில்வே அமைச்சர் பிஹார் மாநில சமஷ்டிபூரில் குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துள்ளது. இப்படிப் பல வழக்குகள் நிலை உண்டு.

அனைத்தும் மாறிவரும் சூழலில் புத்தம் புது வழக்குகள் நாள்தோறும் தாக்கலாகிக்கொண்டு தான் உள்ளன.

இவற்றைத் தீர்க்க வேண்டுமெனில்    சட்டவிதிகளை   நவீனத் தொழில்நுட்ப முறைகளின் மூலம் விரைவுபடுத்தி  அரசு நீதி, தவறுகள், தண்டனைகள், மக்களின் நியாயங்கள், என்கிற   கான்ஸ்டியூஷன் அமைப்பாக்கத்தில்  அதன் தீவிரமானக் கூட்டுச் செயல் ஆக்கங்களால் சமூகத்தை இறுக்கிக் கட்டுவதன் மூலம் தான்  நடைமுறைப் படுத்த முடியும்!. மக்கள் இன்னும் சட்டங்களையும் நீதிமன்றங்களையும் நம்பித்தான் இருக்கிறார்கள். ஒரு உதாரணமாகச் சொன்னால் விவாஹரத்து வழக்குகளில் ஒரு வருஷம் புரிந்துணர்வுடன் இருக்க முயற்சித்து முடிந்து விட்டால் பிறகு சேர்ந்து இருக்கவும் என்கிற நிபந்தனையுடன் இருந்தது. அதற்குப் பிறகு தான் விவாஹரத்து வழங்க முடியும்! இன்று அந்த நிலை மாறியது, இன்று ஆண் பெண் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி  நாங்கள் புரிந்துணர்வுடன் பிரிந்து கொள்கிறோம் என்று சொன்ன உடனேயே  விவாஹரத்து வழங்கப்படுகிறது.வழக்குரைஞர்தொழில் கருப்பு அங்கி என்பது பலருக்கும் குற்றப் பாதுகாப்பு அல்ல !

சமீப காலமாகப் பார்க்கிறேன் இன்று . தமிழ்நாட்டில் வழக்குரைஞர் சிலரும் வெளி மாநில சட்டக் கல்லூரியில் படித்தும் படிக்காமல் பலர் வக்கீல் தொழில் முறையாக வந்த பின்னர் போதைப் பொருள், நிலமோசடி,      நில அபகரிப்பு, கொலை வழக்கு, வன்முறையான ரவுடிகள் புழங்கும் கிரிமினல் நடத்தைகளின் அதன் பின்னணியில் இருப்பவர்களாக சிலர் மாறி இருக்கிறார்கள்.                        இது  சட்டத்துறை மீது அனைத்து மக்களுக்குமான  நம்பிக்கையின்மையைத் தான் ஏற்படுத்துகிறது. பெரும் கொள்ளைகளில் ஈடுபடும் அல்லது பன்னாட்டு முதலீடுகளில் ஈடுபடும் பலரும் குறுகிய லாபத்திற்காக எல்லாவற்றையும் மீறுகிற போக்குகள் அதிகரிப்பது அல்லது பணத்திற்காக எது வேண்டுமானாலும் கொலைகள் வரை செய்யலாம் எனும் வகையில் பல்வேறு கற்பனை அதிகாரங்களுடன், ஆயுதங்களுடன் நிகழ்த்தி வரும் இழிச் செயல்கள்  பொது வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்துவதோடு அல்லாமல்  அதில் வழக்குரைஞர்களும் கூட சம்பந்தப்பட்டிருகிறார்கள் என்கிற போது தான்  இன்றைய நிலைமையின் மோசத்தை அல்லது ஆபத்தை உணர வேண்டியதிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் 1980 ஆம் ஆண்டு முதல்-1990 ஆம் ஆண்டு வரை இந்த மாதிரியான நிலைமைகள் தமிழ்நாட்டில் அறவேயில்லை!

ஒருவகையில் எல்லோரும் சட்டம் படிக்கலாம் என்று அநேக சட்டக்கல்லூரிகளைத் திறந்தது நல்லது தான்! ஆனால் இவர்களில் பலர் ரெகுலர் என்று சொல்லக்கூடிய கல்லூரிக்குச் சென்று முழுக் கல்வியையும் கற்காமல் டிப்ளமோ மாதிரி வக்கீல் தொழிலுக்காக ஆந்திராவிற்கோ, கர்நாடகத்திற்கோ, சென்று அங்கு  சட்டக்கல்லூரி வகுப்புக்கே பல நாட்கள் செல்லாமல் எல்எல்பி என்கிற ஒரு பட்டத்தை பலர் ‘வாங்கிக் கொண்டு’ வந்து இங்கு  வழக்குரைஞர் என  அதிகரிக்கும் நிலையில் இம்மாதிரியான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்!


ஒரு காலத்தில் கருப்பு கோட்டை போட்டுக் கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் மட்டுமே புழங்கிய கண்ணியமான வழக்குரைஞர்கள் இருந்தார்கள். அவர்களை ஆதரிக்கும் மூத்த நல்ல நடத்தை கொண்ட வழக்கறிஞர்கள் இருந்தார்கள். இப்போது இப்படியான எல்எல்பிகள் கருப்புக் கோட்டை அணிந்து கொண்டு தெருவிலேயே நடமாடுகிறார்கள். காரில் வக்கீல் என்ற அடையாளச் சின்னங்களை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  அநேகம் பேர் வழக்குரைஞரே அல்ல. இன்று கூட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் கழுத்துப்பட்டை அணிவது பற்றிக் கூறி இருக்கிறார்.

இவர்களின் நோக்கம் என்னவென்றால் எங்கே சொத்துகள் கைமாறுகின்றன யாருக்கு அதில் என்ன சங்கடம் அதை முடித்துக் கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும், எந்த நிறுவனங்கள் தவறு செய்கின்றன, எங்கு மூலதனம் புழங்குகிறது என்பதை யெல்லாம் அறிந்து கொண்டு அங்கு மீடியேட்டர் என்று சொல்லக்கூடிய இடைத்தரகு வேலைகளைச் செய்து வருகிறார்கள். 

அதற்கு இந்தப் புனிதமான வழக்கறிஞர் தொழிலைப் பயன்படுத்துகிறார்கள். 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் இந்தப்போக்குகள் அதிகரித்துள்ளது. 

கருப்புக் கௌனை அணிந்து கொண்டு நீதிமன்ற வளாகங்களுக்கு வெளியே திரிவது தவறு! பதிலாக நெக் பாண்ட் மற்றும் வெள்ளுடை கீழே கருப்பு பாண்டு அணிந்து வெளியில்  Quasi judiciary authorities யிடம் வாதாடப் போகலாம். நமது நண்பர் ஒருவர் இன்று ஒரு busy travelling Arbitrator. சட்டப் படிப்பு முடிந்து பட்டம் பெற்ற பின் அதைப் பதிவு செய்து விட்டு வாழ்த்துகள் வாங்குவதற்காக அவரது உறவினர்  உச்ச நீதி மன்றத்தில் 1970 களில் நீதிபதியாக இருந்தவர்  சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம். எம்.இஸ்மாயில்  மற்றும் நீதிபதிகள்   Justice என். கிருஷ்ணசாமி ரெட்டியார், அண்ணாச்சி Justice எஸ் ரத்தினவேல்பாண்டியன் ஆகியோரை பார்த்திருக்கிறேன். அப்போது மூத்த வழக்கறிஞர் ஆர் காந்தி. மற்றும் TRR அலுவலகம் உள்ளிட்ட பல அப்போது நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் பல முறை வந்து பேசிய போது கூறினார் “ இந்த சட்டத்தின் மாண்பையும் கண்ணியத்தையும் காக்க வேண்டும் . நீதிமன்ற தவிர பொது இடங்களில் கருப்புக் கவுனோடு யாரும் இருக்கக் கூடாது! நீதிமன்ற வளாகத்திற்குள் மட்டும் தான் அதைப் பயன்படுத்த வேண்டும்.

பொது இடங்களுக்குச் செல்லும் போது  நெக்பாண்ட் அணிந்து  வெள்ளைச் சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்து நடந்து செல்லாமல் ஆட்டோவில் செல்ல வேண்டும்” என்று சொன்னார். இது 1980 களில் இவர்கள் சொன்னது. இன்றும் மனதில் உள்ளது.

இப்போது பார்த்தால் முழு கருப்புக் கௌனையும் அணிந்து கொண்டு மரத்தடியில் பெட்டி கடைகளில், மாருதி ஆம்னி வேன்களில் அங்கு இங்கு என இந்த எல்எல்பி படித்த பலர் கண்டபடி நிற்கிறார்கள்.

எவ்வளவு கண்ணியமானது இந்த வழக்குரைஞர் தொழில்! லேனர்ட் புரபஷன்  என்பார்கள்! வேறு எந்த தொழிலுக்கும் கூட இந்தச் சொல்லை யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.

இன்று மூன்று முக்கியமான செய்தி

ஒரு பெண் வழக்குரைஞராம்.        மலர்கொடி அரசியலிலும் இருக்கிறாராம். அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று இவருடன் ஐவர் அதில் நால்வர்ஆண் வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆம்ஸ்ட்ராங் பழிக்கு பழியாக நடந்த படுகொலையில் குற்றவாளிகளின் எண்ணிக்கை நீள்வதில் இதுவரை 5 வழக்குரைஞர்கள் நாளடைவில் வழக்கு நீர்த்துப் போக உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காதோ? எனச் சந்தேகம் எழுவது இயல்பே.

பொன்னேரி பக்கத்தில் ஏதோ நில அபகரிப்பு வழக்காம் ஒரு வழக்குரைஞர்  கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இன்னொரு வழக்குரைஞர் ஏதோ குற்றவியல் வழக்கில் கைது செய்யப்படுகிறார். இவர்களையெல்லாம் வழக்குரைஞர் என்று எப்படிச் சொல்லுவதென்று புரியவில்லை! இதனால் தான் இது நல்ல பல நேர்மையான மூத்த வழக்கறிஞர்களை வேதனைப் படுத்துகிறது.

இரண்டு நாட்கள் முன்பு மாலை சென்னையில் ஜாதி, அரசியல் ரீதியாக வழக்கறிஞர்கள் மோதல் என்ற செய்தி  சேனல்களில் காணும் நிலை

வழக்குரைஞர் தொழில் என்பது தான் செய்யும் குற்றங்களுக்கான பாதுகாப்பு என்று ஒருவர் கருதக்கூடாது. இன்றைய நவீனப் பொருளாதாரத்தில் வழக்கறிஞரராய்ப்  படிக்க வைக்கப்படுவதெல்லாம் தங்கள் குடும்ப நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தான்  என்றே தோன்றுகிறது.

மிகவும் கண்ணியமான இந்த வழக்குரைஞர்கள் தொழில் இப்படியாக பணத்திற்காகவும் வணிக நோக்கங்களுக்காகவும் சீரழிவது நாட்டுக்கு நல்லதல்ல. வழக்குரைஞர் தொழில் என்பது ஒரு அழகு  கௌரவம் கண்ணியம் (dignity) சார்ந்த பிரச்சனைகளுக்கு உட்பட்டதல்ல. அது கற்றறிந்த கண்ணியமான தொழில் அதன் மாண்பைக் குலைக்கக் கூடாது.  குறிப்பாக வழக்குரைஞர்தொழிலை வணிகம் சார்ந்து விளம்பரப்படுத்தவே கூடாதென்பது ஒரு முக்கியமான அறம்.வழக்குரைஞர் தொழில் என்பது நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் வழக்குரைஞர்கள் சட்டம், 1961 ன் பிரிவு 32, ல் குறிப்பிட்ட வழக்குகளில் ஆஜராக அனுமதிக்கும் நீதிமன்றத்தின் அதிகாரமாகும், இந்த அத்தியாயத்திலுள்ள எதையும் மீறி, எந்தவொரு நீதிமன்றமும், அதிகாரமும் அல்லது நபர் இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குரைஞராகப் பதிவு செய்யப்படாத எந்தவொரு நபரையும் அனுமதிக்கலாம், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வழக்கில் அது அல்லது அவர் முன் ஆஜராக வேண்டும். 

எனவே, இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்படாத எந்தவொரு நபரும் நீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர் சட்டம் அனுமதிக்கிறது என்பது தெளிவாகிறது. இருப்பினும், அது மீண்டும் அந்த நீதிமன்றத்தின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது. என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...