வருமானவரி தினக் கொண்டாட்டம்: மாற்றத்திற்கான ஒரு பயணம்
2024-25 பட்ஜெட் மேம்படுத்தப்பட்ட கழிவுகள், மாற்றியமைக்கப்பட்ட வரி விகிதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
வருமானவரி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 1860 ஆம் ஆண்டு இந்தியாவில் சர் ஜேம்ஸ் வில்சன், வருமானவரியை அறிமுகப்படுத்திய இந்தத் தினம் வருமானவரி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வருமானவரி சம்பளம், சொத்து, தொழில், மூலதன ஆதாயங்கள் ஆகியவற்றில் வசூலிக்கப்படுகிறது.
2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமானவரி விகிதங்கள் மற்றும் அடுக்குகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு முறையில் நிலையான கழிவு 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல ஓய்வூதியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் மீதான கழிவு 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூடுதலாக 50 லட்சத்திற்கும் மேல் வரிஏய்ப்பு செய்துள்ளவர்கள் மீது மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த காலத்திலிருந்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட வரிவிதிப்பு முறையில், ஊதியம் பெறுவோர் வருமானவரியில் ரூ.17,500 வரை பயனடைய முடியும்.
கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-20-ம் ஆண்டில் 6.48 கோடியாக இருந்த எண்ணிக்கை 2020-21-ல் 6.72 கோடியாகவும், 2021-22-ல் 6.94 கோடியாகவும், 2022-23-ல் 7.40 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
கருத்துகள்