கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய மேயராக வரப்போவது யார்?
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயர் பதவி பொதுப் போட்டியில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலையில், ஆறு பெண் கவுன்சிலர்கள் மேயர் பொறுப்புக்கு வருவதற்கு முன் முயற்சியில் கடும் போட்டி நிலவுகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலையே வேட்பு மனுக்கள் பரிசீலனை நடத்தப்பட்டு மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அதற்கு முன் திமுக தலைமையிலான அதிகாரப்பூர்வமான மேயர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். மேயர் பதவிக்கு தற்போது மத்திய மண்டலத் தலைவரான 46 வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, மற்றும் கிழக்கு மண்டலத் தலைவராக உள்ள முன்னாள் சட்ட உறுப்பினர் கார்த்திக் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, மற்றும் மேற்கு மண்டலத் தலைவரான தெய்வானை தமிழ்மறை ஆகியோர் முன் முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.
அதோடு 34 வது வார்டு கவுன்சிலர் மாலதி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி மூலமாக முயற்சி த்துவருவதாகக் கூறப்படுகிறது. மற்றும் 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரான தனபாலின் மனைவியாவார் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி 27 ஆவது வார்டு கவுன்சிலரான அம்பிகா தனபாலும் முயற்சியில் உள்ளதாகத் தெரிகிறது.
2022 ஆம் ஆண்டு திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, கோயமுத்தூர் புறநகர் கிழக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதிதா, 46 வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு ஆகியோர் மேயர் பதவிக்கு முன்னணி வேட்பாளர் என அறியப்படும் நிலையில்
அவர்களில் இலக்குமி இளஞ்செல்வி, மீனா லோகு ஆகியோர் இப்போதும் மேயர் பதவியைப் பெற முயல்கின்றனர். , 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமாரின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. மேலும், 63வது வார்டு கவுன்சிலர் சாந்தி முருகனும் அவரது வழியில் முயற்சி செய்து வருகிறார் .27வது வார்டு கவுன்சிலர் அம்பிகாவின் கணவர் தனபால் இளைஞரணி பொறுப்பில் இருப்பதால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலமாக முயற்சிகள் செய்வதாகவும் கூறப்படுகிறது.
மாவட்டத் தலைமையின் சார்பில் இதுவரை தலைமைக்கு யார் பெயரையும் பரிந்துரைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாவட்ட தலைமை பரிந்துரைத்த பின்னர், திமுக தலைமை நிறுத்த உள்ள மேயர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கோயம்புத்தூர் மேயர் வேட்பாளர் தேர்வில் அமைச்சர் கே.என்.நேருவின் பங்குமிருக்கும் எனத் தெரிகிறது. பலத்த போட்டி நிலவுகிறது இறுதியில் வெல்வது யார் என்பதே அக் கட்சியினர் மத்தியில் பேச்சாகும்
கருத்துகள்