மதுரை நரிமேடு சேர்ந்த ஜோதி, பேரையூர் தாலுகா சேடப்பட்டி பிர்காவில் நில அளவராகப் பணி செய்கிறார். இவரிடம் சின்னகட்டளை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவர், நில அத்து மால் அளவீடு செய்து சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு தனக்கு இலஞ்சமாக 2,000 ரூபாய் தருமாறு ஜோதி கேட்டுள்ளார் . கொடுக்க விரும்பாத ராமசாமி மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.
அவர்களது ஆலோசனையின்படி நேற்று மதியம் 2:30 மணிக்கு சேடப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ராமசாமியிடம் 2,000 ரூபாயை ஜோதி வாங்கிய போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்தனர்.
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் வேலை செய்து பின்னர், மதியம் 1:30 மணிக்கு வீட்டுக்கு செல்வதாகக் கூறி உசிலம்பட்டிக்கு பேருந்து ஏறினார்.
அலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து சேடப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, இராமசாமியிடம் இலஞ்சம் பெற்ற போது பிடிபட்டார் சிறை சென்றார்.
கருத்துகள்