நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினருக்கு ரூபாய் 908 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத்துறை
தி.மு.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினருக்கு ரூபாய் 908 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத்துறை.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியிருக்கும் ஜெகத்ரட்சகன் வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் சோதனைகள் நடத்தினர்.
சென்னை அடையாறில் உள்ள வீடு, தியாகராயநகரில்நகரிலுள்ள அக்கார்டு ஹோட்டல் எனப் பல இடங்களில் நடந்த சோதனையில், ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றினர் வருமான வரித்துறையினர்.
2020 ஆம் ஆண்டிலும் இதே போல் ஒரு சோதனை அவருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டது. அதற்கு காரணம், வெளிநாட்டில் அவர் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவருக்குச் சொந்தமான அரசு மதிப்பீட்டில் 89 கோடி ரூபாய் மதிப்பிலானா சொத்துக்களும் அப்போதே முடக்கப்பட்டது. இலங்கையில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் 3 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக ஜெகத்ரட்சகனின் உறவினர்கள் முதலீடு செய்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக அவர்கள் வாங்கியுள்ளதாகவும்
அப்போது எழுந்த புகார்களும் அதில் அடங்கும். அதே போல், நிலக்கரிச் சுரங்க விவகாரத்திலும் அவர் மீதான புகார்கள் இருந்தன இந்த நிலையில் தான், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளது சம்பந்தமாக ஃபெமா (FEMA) சட்டத்தின் 37-A மற்றும் 16 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) விசாரணை நடத்தியது.
2020 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான 89 கோடி ரூபாய் அரசு மதிப்பிலானா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, முடக்கப்பட்டிருந்த 89 கோடி ரூபாய் மதிப்பிலானா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்