இராகுல் நவீன் தற்போது அமலாக்கத் துறையின் புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ராகுல் நவீன் தற்போது அமலாக்கத் துறையின் புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மத்திய அரசின் பணமோசடி தடுப்பு அமைப்பான அமலாக்கத்துறையின் இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) வெளியிட்டுள்ள உத்தரவில், 1993 ஆம் ஆண்டு இந்திய வருவாய் அலுவலரும் (ஐஆர்எஸ்), வருமான வரித்துறை அதிகாரியுமான ராகுல் நவின் அமலாக்கத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பில் இவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.சஞ்சய் மிஸ்ராவுக்குப் பின், செப்டம்பர் 2023இல் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்ட ராகுல் நவீன், இப்போது அமலாக்கத்துறையின் முழுநேர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை இயக்குநர் பதவி என்பது மத்திய அரசின் கூடுதல் செயலாளர் (AS) அந்தஸ்துக்கு நிகரான பதவி ராகுல் நவின் கடந்த ஆண்டு டிசம்பரில் கூடுதல் செயலாளர் அந்தஸ்தை பெற்று இருந்தார்.சர்வதேச வரி விதிப்பு விவகாரங்களில் நிபுணர் இந்த ராகுல் நவின். 1968ஆம் ஆண்டு பிறந்தவர். பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். ஐஐடி கான்பூரில் பி.டெக் மற்றும் எம்.டெக் மற்றும் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர் நவீன். 1993 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.30 ஆண்டுகளாக வருமான வரித்துறையில் அவர் பணியாற்றி உள்ளார். 2004 - 2008 காலகட்டத்தில் சர்வதேச வரிவிதிப்பு பிரிவில் அவர் பணியாற்றிய போது, வோடஃபோன் நிறுவன வழக்கு உட்பட பல்வேறு வெளிநாட்டு பண பரிவர்த்தனை உள்ளிட்ட வழக்குகளை கையாண்ட அனுபவம் கொண்டவர் ராகுல் நவீன். 2011 முதல் 2015 வரை மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் FT & TR பிரிவில் இயக்குநராக பணிபுரிந்தார். பின்னர் தே பிரிவில் பதவி உயர்வு பெற்று ஆணையர் ஆனார்.ராகுல் நவீன் அமலாக்கத்துறையின் பொறுப்பு இயக்குநராக இருந்த காலகட்டத்தில்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். " ராகுல் நவீன். 2 மாநில முதல்வர்களையே சிறையில் தள்ளி அதிர வைத்தவர்.பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிகையை சரியான நேரத்தில் தாக்கல் செய்வதை உறுதி செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு ராகுல் நவீன் உத்தரவிட்டுள்ளாராம். கடந்த ஒரு மாதத்தில் குற்றம்சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிராக அமாலாக்கத்துறை மூன்று தண்டனை உத்தரவுகளைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.57 வயதாகும் ராகுல் நவீன் கடந்த 2019ஆம் ஆண்டு தான் அமலாக்கத்துறையில் சிறப்பு இயக்குனராக பணியில் சேர்ந்தார். பணமோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உலகளாவிய அமைப்பான Financial Action Task Force (FATF) மூலம் இந்தியாவின் பரஸ்பர மதிப்பீடு தொடர்பான ஏஜென்சியின் பணிகளுக்கு அவர் தலைமை தாங்கினார்.
சஞ்சய் மிஸ்ராவுக்கு நெருக்கமானவராக செயல்பட்டார். சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை இயக்குநராக பதவியில் இருந்து வந்த நிலையில் 3 முறை அவரது பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது. அவரது தொடர் பதவி நீட்டிப்புக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, சஞ்சய் மிஸ்ராவின் பதவியை நீட்டிக்காமல் வேறு ஒருவரை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள்