மலேஷியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் இருக்கை
அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று நாங்கள் பரஸ்பரம் மலேஷியா பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் உடன் அனைத்துத் துறைகள் குறித்தும் விரிவாக இருவரும் விவாதித்தோம்
மலேஷியாவில் ஆயுர்வேத இருக்கை ஒன்று அமைக்கப்படுகிறது. இது தவிர, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கவும் முடிவு செய்துள்ளது மேலும் இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று நாங்கள் பரஸ்பர ஒத்துழைப்புக்கான அனைத்து மலேஷியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் பயனுள்ள பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. எங்கள் நாடுகளுக்கிடையேயான முழு அளவிலான இருதரப்பு உறவுகளை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான விரிவான ஈடுபாடுகளைக் கருத்தில் கொண்டு, எங்கள் கூட்டாண்மையை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
எங்கள் பேச்சுகளில் பாதுகாப்பு, தொழில்துறை, FinTech, குறைக்கடத்திகள், AI மற்றும் பல விஷயங்கள் அடங்கியிருந்தன. எங்கள் ஸ்டார்ட்அப்கள் இன்னும் நெருக்கமாக செயல்படுவதற்கான வழிகளையும் நாங்கள் விவாதித்தோம்.
இந்தியாவும் மலேசியாவும் நெருங்கிய கலாச்சாரத் தொடர்புகளை எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில், மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத இருக்கையும், மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையும் அமைக்கப்படும். எனத் தெரிவித்தார்
கருத்துகள்