வழக்கறிஞர்கள் தொழில் நடைமுறைச் சட்டத்தை உறுதியாக அமல்படுத்தக்கோரிய வழக்கில் நீதிமன்றம் மத்திய அரசிடம் முறையீடு செய்ய உத்தரவு
வழக்கறிஞர் தொழிலில் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் சிலர் வந்ததால் நடக்கும் சமீபத்திய சம்பவங்கள் மிகவும் அவமானம் என நீதிமன்றம் கருத்து.
மனுதாரரை மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க அறிவுறுத்தியது சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்திய காலங்களில் வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை 15 ஆண்டுகளில் மொத்தம் 15,924 புதிய வழக்கறிஞர்கள் தங்களை தமிழ்நாடு- பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழில் புரிகிறார்கள். சென்னையில் மட்டும் 4700 வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் அதில் 2008 ஆம் ஆண்டில் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார், அந்த வழக்கில் மூன்று வழக்கறிஞர்கள் குற்றவாளி எனக் கைது செய்யபட்டனர்.
2011 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் வழக்கறிஞர் சதிஷ்குமார் படுகொலை செய்யப்பட்டு இதுவரை கொலையாளிகளோ, கொலைக்கான காரணமோ வழக்கில் தெரியாத நிலையில் வழக்கு இன்று வரை நிலுவையிலுள்ளது.
2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் வழக்கறிஞர் கண்ணன் பணி முடித்து வீடு திரும்பிய போது மர்ம நபர்கள் வழிமறித்து சாலையில் கொடுரமான ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
பழிக்கு பழியாக சேலம், ராசிபுரம் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றிய நடராஜன், 2013 ஆம் ஆண்டு மர்மக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழி தீர்க்கும் சம்பவமாக 2014 ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வழக்கறிஞர் நித்தியானந்தத்தை , நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வளர்ப்பு
நாயுடன் இரவில் நடைப்பயிற்சி சென்ற வழக்கறிஞர் மதியழகன் 2014 ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சண்முகம் கள்ளக்காதல் காரணமாக 2014 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் பெற்ற வெற்றியைக் கொண்டாடிய வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு வழக்கறிஞர் ஸ்டாலின் படுகொலை செய்யப்பட்டார். மாமல்லபுரத்திற்கு வழக்குத் தொடர்ந்தவருடன் சென்ற வழக்கறிஞர் கமலேஷ் 2015 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய் கணேஷ், மற்றும் தென்காசி வழக்கறிஞர் அசோக்குமார், மற்றும் துத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் என தொடர்ந்து ஜூலை மாதம் 5 ஆம் தேதி பழிக்குப் பழியாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது கொலையில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பெயர் கூறப்பட்டு வருவது கூட குற்றப் பின்னணி கொண்ட இவர்களின் இதுவரை 20 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பல வழக்குகளில் வழக்கறிஞர்கள் குற்றவாளியாகச் சேர்க்கப்படுவதும் அதற்கு முன்னர் 2K க்கு முன் இந்த நிலை இல்லை ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே நாளுக்கு நாள் இப்படிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது வழக்கறிஞர் தொழிலுக்கு மிகவும் அவமானத்தையும், பொதுமக்களுக்கு வழக்கறிஞர்கள் தொழில் மீதான நம்பகத் தன்மையையும் இழக்கும் நிலையையும் உருவாக்கியுள்ளது.
வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, வழக்குகளில் குற்றவாளிகளாக வழக்கறிஞர்கள் இருப்பதைத் தடுக்க வழக்கறிஞர்களுக்கான தொழில் நடைமுறைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டுமென 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி மற்றும் 18 ஆம் தேதிகளில் மத்திய மாநில மனுதாரர் சார்பில் அரசுகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்து சென்னை வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது. காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சில வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் படுகொலை தொடர்பாக சில வழக்குகளில் இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சில வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழக்கறிஞர்கள் தொழில் நடைமுறைச் சட்டத்தை உறுதியாக அமல்படுத்தக்கோரி மத்திய அரசிடம் புதிய மனு அளிக்குமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டனர்.
கருத்துகள்