திருச்சிராப்பள்ளியில் குட்கா கடத்தல் குறித்து காவல் நிலையத்திற்குப் புகார்கள் வந்த நிலையில்
அலட்சியமாகக் கையாண்ட நான்கு காவலர்கள் மற்றும் ஒரு ஆய்வாளரை திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதாக காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 20 மூட்டைகளில் மொத்தம் 150 கிலோ எடை கொண்ட குட்கா இருந்தது தெரியவந்தது.
குட்காவைக் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரிடமிருந்த குட்கா மூட்டைகளுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் ரொக்கப் பணம் குறித்து காவலர்கள் சரியாகக் கணக்குக் காட்டவில்லை எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் குட்காவை பறிமுதல் செய்த திருச்சிராப்பள்ளி ஜியபுரம் காவல் துறை ஆய்வாளர் குணசேகரன், தலைமைக் காவலர் சரவணன், காவலர்கள் சத்தியமூர்த்தி, அருள் முருகன், ரகுபதி ஆகிய ஐந்து பேரையும் கூண்டோடு ஆயுதப்படைக்கு பணி மாறுதல் செய்து திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையர் வருண் குமார் ஐபிஎஸ் உத்தரவிட்டார். மேலும் திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான கள்ளக்குறிச்சி மாவட்டம் உளூந்தூர்பேட்டையைச் சேர்ந்த சண்முகம்
மற்றும் மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஆகியோரை நேற்று முன்தினம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில், மீதமுள்ள 39 பேரவைத் தேடி வந்த நிலையில் திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ் கொடுத்த அவதூறு வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை விஸ்வநாதபுரம் தபால் தந்தி நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 22), கள்ளக்குறிச்சி களமருதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் (வயது 34) ஆகியோரை இன்று தில்லைநகர் காவல் துறையினர் கைது செய்து, திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்