மத்திய அமைச்சரவைச் செயலராக டி.வி. சோமநாதன் நியமனம்
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி முதல் மத்திய அமைச்சரவையின் செயலாளராக பதவியிலிருந்த ராஜீவ் கௌபாவுக்கு பதிலாக, ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் மத்திய அமைச்சரவையின் செயலாளராக டி.வி. சோமநாதன். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நியமனம் .வாஷிங்டன் டிசியில் உள்ள உலக வங்கியில் இளம் தொழில் வல்லுநர்கள் திட்டத்தின் மூலம் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத் துணைத் தலைவர் பதவியில் நிதிப் பொருளாதார நிபுணராக இருந்தார் டி.வி. சோமநாதன். இருந்தார் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி தமிழ்நாடு முதல்வராக இருந்த நிலையில் முதல்வரின் செயலாளராக இருந்த டி.வி.சோமநாதன். தமிழ்நாடு அரசின் துணைச் செயலாளர் (பட்ஜெட்), இணை விஜிலென்ஸ் கமிஷனர், மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர், முதலமைச்சரின் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வணிக வரி ஆணையர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளில் இருந்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சோமநாதன், ரூபாய்.14,600 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப கால ஒப்பந்தங்களை வழங்குவதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் முக்கிய அலுவலராக இருந்தார்.
பின் மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மத்திய அரசுப் பணியில், பிரதமர் அலுவலகக் கூடுதல் செயலாளராகப் பணியாற்றினார்.
மீண்டும் மத்திய அரசுப் பணி: பின்னர், மாநில அரசுப் பணிக்கு வந்ததும் முதலில் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் செயலாளராகவும் .அதன்பின், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வணிகவரித் துறை ஆணையராகவும் பணியாற்றி வந்தார்.தமிழ்நாடு வணிகவரித் துறையின் ஆணையராகவும் பணியாற்றிய டி.வி.சோமநாதன், 2019 ஆம் ஆண்டு மீண்டும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, மத்திய நிதித் துறையின் செலவினப் பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதித்துறை செயலாளரானார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உருவாக்கங்களில் பெரும் பங்கு வகித்த நிலையில், தற்போது, மத்திய அமைச்சரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் டி.வி. சோமநாதன். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இன்று டி.வி.சோமநாதனை இந்திய அமைச்சரவைச் செயலாளராக நியமித்தது. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி முதல் இரண்டாண்டுகள் இந்தப் பொறுப்பிலிருப்பார்.டி.வி. சோமநாதன் நிதி சார்ந்த பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டம், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் நிர்வாக மேம்பாட்டு திட்ட டிப்ளமோ, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் இளங்கலை வணிகவியல் பட்டங்களைப் பெற்றவர். பொருளாதாரம், நிதி, நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கை பற்றிய 80 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் கல்வி இதழ்களிலும், முன்னணி நாளிதழ்களிலும் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்