தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிதாக ஒன்பது உறுப்பினர்கள் பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டனர் இந்த நிலையில் தலைவரும் நியமித்துள்ளனர். முன்னதாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. அரசு பரிந்துரைத்த டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை ஆளுநர் ரவி ஏற்று பரிசீலிக்காமல் இருந்து வந்த நிலையில். இது குறித்துச் சில விளக்கங்களை தமிழ்நாடு அரசிடம் கேட்டிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அமைப்பு ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். இவர்கள் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு, ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். 1989-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர், பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயதை அடையும் வரை பதவி வகிப்பார். இதன் மூலம் TNPSC தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர் 2028 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வரை பதவி வகிப்பார் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு போக்குவரத்து துறையில் ஆணையராகப் பணியில் இருந்த நிலையில் நம் பப்ளிக் ஜஸ்டிஸ் முதல் இதழ் வெளியானது
அதில் எழிலகத்தில் முதல் பேட்டியளித்தார், அதற்கு முன்னர் அவர் Director of technical Education பொறுப்பிலிருந்த போது சர்தார் வல்லபாய் படேல் சாலை அலுவலகத்தில் சந்தித்த முதல் சந்திப்பு துவங்கி இன்று வரை நம் நேசத்தில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார், முன்னாள் இரயில்வே இணை அமைச்சர் இரா. வேலு இ ஆ ப அவர்கள் தலைவராக இருந்த பிறகு அதே நிலையில் அதன் பின்னர் ஒரு தகுதி வாய்ந்த நபர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புக்கு வருவது சிறப்பு.
கருத்துகள்