திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் அரசு ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்த உமாராணி எனும் பெண் ஊழியர் கன்வேயர் பெல்டில் துணியோ அல்லது தலைமுடியோ சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்
ஆவின் பெண் ஊழியர் பலியான நிலையில் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்
திருவள்ளூர் ஆவின் பால் பண்ணை பெண் ஊழியர் உயிரிழந்த நிலையில் பணியில் அலட்சியமாகச் செயல்பட்டதாக ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றிய மேற்பார்வையாளர் வருண்குமாரைக் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. அப்போது பால் உற்பத்தியாகி வெளியே வரும் போது அதனை நெகிழிப் பெட்டியில் அடுக்கி அனுப்பும் பணியில் கார்த்தி என்பவர் மனைவி உமா ராணி(வயது 30) ஈடுபட்டிருந்த போது
எதிர்பாராதவிதமாக உமாராணியின் முடி இயந்திரம் அருகிலிருந்த மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதால். நொடி நேரத்தில் உமா மகேஸ்வரியின் தலை மோட்டாரில் சிக்கியது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கிதா துண்டாது. இந்தக் கோர விபத்து ஆவின் தொழிற்சாலைக்குள் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. உடனே காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கந்தன் தாலுகா காவல்துறை ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் காவலர்கள் நிகழ்விடத்திற்கு வந்தனர். அங்கிருந்த உமா மகேஸ்வரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆவின் தொழிற்சாலையில் உயிரிழந்த உமாராணி சேலம் மாவட்டத்தை சேர்நத கார்த்தி என்பவர் மனைவி இருங்காட்டுக்கோட்டையிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரிந்தது.
காக்கலூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தங்கி உமா மகேஸ்வரி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த ஆறு மாத காலமாக வேலைக்கு வந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இதனால் காக்களூர் பால் பண்ணையில் விபத்தினால் ஆவின் பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எதிர்பாராத விதமாக விபத்தில் இளம் பெண் மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கருத்துகள்