முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தரும் கேஜிஎப்பும் பொருந்தாநிலைக் கதையம்சம் கொண்ட தங்கலான்

புத்தரும் கேஜிஎப்பும் பொருந்தாநிலைக் கதையம்சம் கொண்ட தங்கலான் ,


லிங்க வழிபாடு மட்டுமே கொண்ட  வீரசைவர்கள்,

மற்றும் மாஹாவீரரின் சமணம் அல்லது ஜைன சமயம் பரவிய பகுதி கோலார் ஆகும். 


இயக்குநர் பா. ரஞ்சித், இதுவரை அவர் இயக்க்கிய படங்களில் அவரது கொள்கைகள் குறியீடாக தனது அரசியல் நிலைப்பாட்டினைக் கூறிவந்தவர், தங்கலான் படத்தில் நேரடியாகவே காட்சிகளை வைத்துள்ளார். குறிப்பாக, இந்தியா முழுவதும் பௌத்தத்தை நிறுவிய மாமன்னன் மௌரியப் பேரரசின் அசோகன் பெயர் கொண்ட கதாபாத்திரம் வெட்டி வீசப்பட்ட புத்தர் தலையை முதலில் எடுப்பது தொடங்கி துண்டாட்டப்பட்ட புத்தர் சிலையுடன் அதன் தலையை இணைப்பது என அனைத்துக் காட்சிகளுமே நேரடி அரசியல் காட்சிகள். பாபா சாஹேப் டாக்டர் பீமா ராவ் அம்பேத்கர் கூறியதைப் போல் இந்தியாவின் வரலாறு பார்ப்பனியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள போர் எனக் கூறுவார். இந்த வார்த்தைகளை மிகவும் சரியாக காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர் ரஞ்சித் . அதே சிந்தனை செயல்பாடு, அது அவரது நிலைப்பாடு,                    வி. பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்திற்காக பல்வேறு பழங்குடி இன மக்களின் இசையை தேடித்தேடி கோர்த்துக் கொடுத்துள்ளார். பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  தங்கலானை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


வசூல் விபரம்: படத்தின் இறுதிக் காட்சியின் முடிவு என்பது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளது என விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் எதுவும் கூறவில்லை. படம் வெளியான நாளில் இருந்தே வசூலில் படம் பட்டையைக் கிளப்பி வருகின்றது. படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 26.44 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. அதன் பின்னர் இரண்டாவது நாளில் படம் கிட்டத்தட்ட ரூபாய் 20 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. அதேபோல் மூன்றாவது நாளில், படம் கிட்டத்தட்ட ரூபாய் 20 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இதனால், படம் இதுவரை ரூபாய் 60 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.படத்தின் மற்றொரு கதாநாயகன், பலம், தூண் என இசையைக் குறிப்பிடலாம். பார்வதியின் நடிப்பு என்பது மெச்சிக்கொண்டே இருக்கலாம் எனும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக விக்ரம் உடனான ரொமான்ஸ் காட்சியுலும் சரி, முதல் முறையாக ரவிக்கை அணியும் காட்சியிலும் சரி, பார்வதியின் முகபாவணகளுக்காக படத்தினை இன்னொருமுறை பார்க்கலாம்.தங்கலான். கோலார் தங்கவயலை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், பார்வதி மற்றும் மாளவிகா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பசுபதி, ஹரி, அர்ஜுன், டேனியல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் நடித்துள்ளனர். மிகவும் அதிகப்படியான பொருட் செலவில் உருவான இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது. தங்கலான் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஆசை துறந்த புத்தன் பற்றற்றவன்! இது மஹாயானமா, ஹீனயானமா, விளங்கவில்லை ! ஆனால் இதில் தங்கத்தில் உருவம் செய்தவன் ஆசை கொண்டவன்.  அவன் எப்படி புத்தனின் பக்தனாவான்.  தங்கலான் திரைப்படக் கதைக்கும் இன்றைய கர்நாடக மாநிலம் முன்னாள் சாளுக்கிய தேசம் (மூன்று பிரிவு அதில் வாதாபி மற்றும் கீழை மேலை என ) கோலாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது திரைப்பட இயக்குனர் இரஞ்சித் மூளையில் உதித்த கற்பனை ஆனால் கோலார் தங்க வயல்களின் உண்மை வரலாறு இது:- மாலத்தீவுகள் மற்றும் கோலார் தங்க வயல்களின் காவல்துறை கண்காணிப்பாளரான ஃபிரெட் குட்வில் ஆய்வுகள் மிதிக் சொசைட்டியின் காலாண்டு இதழில் தொகுப்பு வெளியிடப்பட்டது

. மைசூர் மன்னர்களால் ஆளப்படுவதற்கு முன்பு ஐம்பது ஆண்டுகளுக்கு ஷாஹாஜியின் ஜாகிரின் ஒரு பகுதியாக மராட்டிய ஆட்சியின் கீழ் வந்தது. 1720 ஆம் ஆண்டில், கோலார் சிரா மாகாணத்தின் ஒரு பகுதியாகும்; ஹைதர் அலியின் தந்தை ஃபாத் முஹம்மது மாகாணத்தின் ஃபவுஜ்தாராக இருந்தார் . கோலார் பகுதியில் பின் மராத்தியர்கள் , கடப்பாவின் நவாப் , ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஹைதர் அலி ஆகியோரால் ஆளப்பட்டது . 1768 ஆம் ஆண்டு முதல் 1770 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது , அது மீண்டும் மராட்டியர்களுக்கும் பின்னர் ஹைதர் அலிக்கும் சென்றது 1791 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்திய வங்காள தலைமை ஆளுநர் கார்ன்வாலிஸ் பிரபு 1791 ஆம் ஆண்டில் கோலாரைக் கைப்பற்றினார், பிரித்தானிய ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தற்போது கல்கத்தா தலைமையிடமாக  வங்காள மாகாணத்தில் சார்லஸ் காரன்வாலிஸ் பிரபு
(Charles Cornwallis, 1st Marquess Cornwallis),  தலைமை ஆளுநராக 1786 ஆம் ஆண்டு முதல் 1793 ஆம் ஆண்டு முடியப் பணிபுரிந்தவர். மேலும் பிரித்தானியப் பேரரசின் சார்பாக, ஏழாண்டுப் போர், அமெரிக்கப் புரட்சிப் போர் மற்றும் மூன்றாவது ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டு போரிட்டவர்.  1792 ஆம் ஆண்டு செரிங்கபட்டம் ஒப்பந்தத்தப் படி அதை மீண்டும் மைசூர் திரும்பினார்.

அப்பகுதியில் உள்ள கல்வெட்டுகள் மஹாவலி (பானாஸ்), கடம்பர்கள் , சாளுக்கியர்கள் , பல்லவர்கள் , வைதும்பாக்கள், ராஷ்டிரகூடர்கள் , தஞ்சாவூர் சோழர்கள், துவாரஹசமுத்திரம் ஹொய்சாளர்கள் மற்றும் மைசூர் மன்னர்களின் ஆட்சியைக் குறிக்கும் அடையாளங்களாகின்றன .ஜான் டெய்லர் III என்பவர் 1880 ஆம் ஆண்டில் KGF ல் பல சுரங்கங்களை விலைக்கு வாங்கினார், மேலும் அவரது நிறுவனம்  ஜான் டெய்லர் & சன்ஸ் என்பதாகும் 1956 ஆம் ஆண்டு வரை அவற்றை இயக்கியது; மைசூர் தங்கச் சுரங்க நிறுவனம் துணை நிறுவனமாக இருந்தது. 1902 ஆம் ஆண்டில், சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சியில் உள்ள நீர்மின் நிலையத்திலிருந்து ஜெனரல் எலக்ட்ரிக் மூலம் இயக்கப்படும் 140-கிலோமீட்டர் (87 மைல்) கேபிள் மூலம் சுரங்கங்கள் மின்மயமாக்கப்பட்டன . மைசூர் அரசாங்கம் 1956 ஆம் ஆண்டில் சுரங்கங்களை கையகப்படுத்தியது. 


தங்கச் சுரங்கங்களின் வளர்ச்சிக்கு அதிகமாகத் தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், தமிழ்நாட்டில் தருமபுரி , கிருஷ்ணகிரி , சேலம் மற்றும் அப்போதய தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் , அன்னமயா மற்றும் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டங்களைச் சேர்ந்த வறுமையின் பிடியில் இருந்த மக்கள் மற்றும் பட்டியலின் தந்தவர்கள், மற்றும் பலர் கூலித் தொழிலாளர்களாகோலார் அருகில் குடியேறினர். அந்தக் குடியேற்றங்கள் KGF ன் புறநகர்ப் பகுதிகளாக உருவாக்கத் தொடங்கின. பிரிட்டிஷ் மற்றும் இந்தியப் பொறியாளர்கள், புவியியலாளர்கள் மற்றும் சுரங்க மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் குடும்பங்கள் நகரின் மையப் பகுதியில் வசித்து வந்தனர். ராபர்ட்சன்பேட் மற்றும் ஆண்டர்சன்பேட் என நகரங்களுக்கு இரண்டு பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் சுரங்கம் ஆங்கில அதிகாரிகளின் பெயரிடப்பட்டது.

BEML லிமிடெட் நிறுவனம் நிறுவப்பட்டது , நகரத்தை விரிவுபடுத்தியது, வேலை வாய்ப்பையும் வழங்கியது மற்றும் புதிய குடியிருப்பாளர்களை அது ஈர்த்தது, பிரித்தானிய ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்காளத் தலைமை ஆளுநர் சார்லஸ் காரன்வாலிஸ் பிரபு,  கோலார் தங்க வயல் பகுதி தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய தங்கச் சுரங்கமிருந்த பகுதி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1880-ஆம் ஆண்டு இங்கு தங்கம் எடுக்கும் முயற்சிகள் நடைபெறத் துவங்கின.


அப்போதிலிருந்து சுரங்கம் மூடப்பட்ட இறுதியான 2001-ஆம் ஆண்டு வரை இங்கிருந்து சுமார் 800 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. கோலார் தங்க வயல் பகுதி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் போவரிங்பேட் தாலுகாவிலுள்ளது பெங்களூரிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த. சுரங்கங்களின் நீளம் 1,360 கிலோமீட்டர், உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆழமான சுரங்கம் – 3 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. பீஜப்பூரின் சூல்தான் ஜாகிதார்கள் வசமான கோலார், இறுதியில் ஹைதர் அலியின் சேனாதிபதி திப்பு சூல்தானின் கீழ் வந்தது.

நான்காவது மைசூர் போரில் திப்பு சூல்தான் கொல்லப்படவே மைசூர் ராஜ்ஜியத்தை நில அளவை செய்ய ஜான் வாரன் எனும் இராணுவ அதிகாரியை கிழக்கிந்தியக் கம்பனி சர்வே அதிகாரியாக நியமித்தது.


அவர் எர்ரகொண்டா மலைப் பகுதிக்கு வந்த போது, ஊர்காவன், மாரிக்குப்பம் போன்ற சில பகுதிகளில் தங்கம் கிடைப்பது குறித்து கேள்விப்பட்டார். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாறைகளிலுள்ள தங்க ரேகைகளிலிருந்த தங்கத்தை எடுத்துக்கொண்டிருந்தனர்.இதையடுத்து இந்தப் பகுதியில் கிடைக்கும் தனிமங்களை ஆய்வு செய்ய முடிவு செய்த வாரன். "அவரோடு பணியாற்ற தெரு, தேடு என்ற பழங்குடியைச் சேர்ந்த 12 பேர் முன்வந்தனர். 3 பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வெள்ளி நாணயம் ஊதியமாக வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது ‘Kolar Gold Mines’ நூல். இந்தத் தொழிலாளர்கள் ஒரு மாதம் வேலை பார்த்தால், 30 பகோடா தங்கத்தை எடுப்பார்கள்.


அதைக் கேள்விப்பட்ட பல முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதற்கு முன்வந்தனர். அந்த நேரத்தில்  ஜான் வாரன் ஒரு அறிவிப்பைச் செய்தார். தங்கம் இருக்குமிடத்தைக் காட்டுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். ஊர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தங்கம் கிடைக்குமிடம் தெரியும் எனக் கூறி, ஒரு பழங்காலச் சுரங்கப் பகுதியைக் காட்டினார். அங்கிருந்து கிடைத்த மண்ணில் குறிப்பிடத்தக்க அளவில் தங்கம் கிடைத்தது.


தனக்குக் கிடைத்த தங்கம் எவ்வளவு தரமானது என்பதை அறிய அதனைச் சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பினார் வாரன். சோதனை முடிவில் அது தரமான தனிமம் எனத் தெரிந்தது. ஆனால், அப்போதைய அரசு தங்கம் தோண்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. அதே தருணத்தில் பெங்களூரிலிருந்த மைக்கல் லாவல் எனும் இராணுவ வீரருக்குத் தகவல் கிடைத்தது. அவர், கோலாரில் தங்கம் தோண்ட மைசூர் அரசிடம் விண்ணப்பித்து, பலத்த சிரமத்திற்கு மத்தியில், 1875- ஆம் ஆண்டில் உரிமம் பெற்றார்.

தனக்குக் கிடைத்த உரிமத்தை 1876-ஆம் ஆண்டிலேயே வேறு சிலருக்குக் கைமாற்றி விற்பணை செய்து விட்டார்.

வாங்கிய பலர் இணைந்து 5,000 பௌஃண்டுகளை முதலீடு செய்து ‘Kolar Concessionaries’ எனும் பெயரில் கூட்டாகச் சேர்ந்து தங்கம் தோண்டத் தொடங்கினர். முதலில் பெரிய அளவில் தங்கம் கிடைக்கவில்லை என்றாலும் அதன் பிறகு, குறிப்பிடத்தக்க அளவில் தங்கம் கிடைக்கத் துவங்கியது.


இதைக் கேள்விப்பட்டு சென்னையைச் சேர்ந்த ஊர்காவ்ன் அண்ட் கம்பனி என்ற நிறுவனம் 10,000 பௌஃண்ட் முதலீட்டில் ஒரு நிறுவனத்தைத் துவங்கியது. இதற்குப் பிறகு மைசூர் மைன்ஸ் கம்பனி, நந்திதுர்க் கம்பனி ஆகியவை கோலாரில் முதலீடு செய்தன. முடிவில், மொத்தம் 11 நிறுவனங்கள் ஒரு லட்சத்து 20,000 பவுண்டுகளை முதலீடு செய்தனர்.


ஆனால், விரைவிலேயே அங்கு தங்கம் கிடைப்பது குறைய ஆரம்பித்தது. எல்லோரிடமிருந்த முதலீடும் தீர ஆரம்பித்திருந்தது. மைசூர் மைன்ஸ் நிறுவனம், கையில் எஞ்சியிருந்த முதலீட்டை வைத்து, ஒரு நிபுணரை அனுப்பி அந்தப் பகுதியை முழுமையாக ஆராய எடுத்த முடிவின் படி கேப்டன் பிளம்மர் என்பவர் கோலார் தங்க வயலுக்கு அனுப்பப்பட்டார். அவர் தனது ஆய்வின்போது, மாரிக்குப்பத்தில் ஏற்கனவே கிடைத்த பழங்காலச் சுரங்கத்திற்குள் இறங்கினார். அந்தச் சுரங்கத்தில் இதற்கு முன்பு ஆய்வுகுச் சென்றவர்கள் சென்ற திசையில் செல்லாமல் எதிர்த்திசையில் தோண்டலாம் என்றார். அப்போது தான் கோலாரின் தங்கச் சுரங்கம் உண்மையிலேயே தனது முகத்தை வெளிக் காட்டியது.

தங்கம் தோண்டியதில் புதையல்களாகக் கிடைக்க ஆரம்பித்தது. 1885-ஆம் ஆண்டின் இறுதியில் 6,000 அவுன்ஸ் தங்கம் இந்த இடத்திலிருந்து மட்டுமே கிடைத்தது.

விரைவிலேயே கோலார் தங்க வயல் சுரங்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. 1888 ஆம் ஆண்டு முதல் 1889- ஆம் ஆண்டில் 48 சுரங்கக் குழிகள் தோண்டப்பட்டுத் தங்கம் எடுக்கப்பட்டது.


சுரங்கம் தோண்டும் பணிக்காக, பக்கத்து சமஸ்தானங்களாக  அருகிலிருந்த பல்லவ தேசத்தில் அதாவது தற்போது தமிழ்நாட்டிலிருந்து பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் கோலார் தங்க வயலுக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆரம்ப காலத்தில் சுரங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் படு மோசமாக இருந்ததால், விபத்துகளில் பலர் உயிரிழந்தனர்.


ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அங்கே தங்கம் கிடைப்பது மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. சுரங்க நிறுவனங்களுக்கு நஷ்டங்கள் பதிவாகின.

இந்தியா சுதந்திரமைடந்து மைசூர் ராஜ்ஜியம் இந்தியாவுடன் இணைந்தது. அதற்குப் பிறகு, கே.ஹனுமந்தையா மைசூரின் முதல்வராக இருந்த காலத்தில் தங்கச் சுரங்கங்களை தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழ ஆரம்பித்தது. முடிவில்



நிஜலிங்கப்பா முதலமைச்சராக இருந்த போது சுரங்கம் மாநில அரசின் வசம் வந்தது. கையகப்படுத்தியதிலிருந்தே அந்த நிறுவனம் இழப்பைத்தான் சந்தித்து வந்தது. 1998- ஆம் ஆண்டில் சுரங்கங்களை மூடப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. அந்தத் தருணத்தில் கே.ஜி.எஃப்-ல் 3,800 பேர் பணியாற்றி வந்தனர் (இரண்டாம் உலகப் போர் காலத்தில் 32,000 பேர் பணியாற்றியனர்). சுரங்கங்களை மூட தொழிலாளிகளின் யூனியன்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இருந்த போதிலூம், 2001-ஆம் ஆண்டில் சுரங்கம் மூடப்பட்டது.

அதற்குப் பிறகு அந்தப் பகுதி முழுமையாகக் களையிழந்தது. அங்கிருந்தவர்கள் வேலை தேடி பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு புலம் பெயர்ந்தனர். இப்போது, கோலார் தங்கச் சுரங்கப் பகுதியில் எந்த விதமான வேலைவாய்ப்பும் கிடையாது. பழைய நினைவுகள் மட்டுமே சுமந்து வாழும் ஒரு நகரமாக உள்ளது கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க வயல். இதுவே உண்மை வரலாறு இப்படி இருக்கிறது.       


 தங்கலான், முதல் முதலாக வந்த டீசருக்கு பின் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது, அது தற்போது காணவில்லை, தமிழ் திரைப்படக் கதாநாயகனாக அர்ப்பணிப்புடன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகராக விக்ரமை எப்போதும் மிகவும் பிடிக்கும். யார் என்றே தெரியாத நாயகியாக பூ படத்தில் மனதைக் கவர்ந்த பார்வதியின் நடிப்பு  பின்னர் பல  படங்களின் மூலம் மிகவும் கவர்ந்த நடிகையானார். பசுபதி இவரின் நடிப்பை விமர்ச்சிக்க முடியாது. 

இசை இரத்தமாகவே ஓடும் ஜி.வி பிரசாத்  அவரின் பாடல்களையும், பின்னணி இசையையும் ஆகா என்று எப்போதும்  கேட்கலாம், பா. ரஞ்சித் விமர்சனங்களுக்கு உள்ளான இயக்குனர் என்றாலும் அவர் மேலே எனக்கு பெரிதாக விமர்சனம் எப்போதும்  இல்லை. அவர் வழி தனி வழி. தப்பில்லை. மற்றபடி தங்கலான் படத்தின் பின்னணியில் இயங்கிய அத்தனை பெரும் சிறந்த படைப்பாளிகள் . இத்தனை பேர்கள் இருந்தும் ஏன் ஒரு விஷயத்தை இயக்குனரிடம் துணிந்து பேசவில்லை என்று எனக்குப் புரியவில்லை.   படத்தின் திரைக்கதையில் பொறுப்பு கொண்டவர்களும்,  எடிட்டரும், ஒலிப்பதிவாளரும்  இன்னும் கூடுதல் கவனத்துடனும், நமது மக்களைப் பற்றியும் மனதில் நினைத்து செயல் பட்டு இருந்தால் படம் மிகப் பெரிய வெற்றி படமாக மாறி இருக்கும். 



என்னைப் பொறுத்த வரை தங்கலான் திரைப்படம் ஒரு நிறைவைத் தராத படமாக மாறியதற்கு ஒரு  முக்கிய காரணம் வசனம் தெளிவில்லாமல், வட்டார மொழி வழக்கு தமிழ் ஒலிப் பதிவு அனைவருக்கும் புரியாமல் போனது முதல் காரணம். இரண்டாவது காரணம் முதல் பாதியில் மிகச் சிறப்பாக சரியான பாதையில் போய்க் கொண்டு இருந்த கதைக்களம், இரண்டாம் பாதி முழுவதும் ரஞ்சித் தனக்கு என்று கதை வடிவமைத்து அவருக்காக மட்டும் சொல்லிக் கொண்ட மாதிரி கதை போய்விட்டது. முதல் பாதியில் மிரட்டிய ஆரத்தி கதாபாத்திரம், இடைவேளைக்கு பின்னர் இரயில் பயணத்தில் நம்மை எப்போதும் கடந்து போகும் சாயா, வடை  விற்கும் ஆளைப் போல ஆகி விட்டது. எதை எதையோ காட்டி இறுதியில் புத்தருக்கு பதில் ஆங்கிலேயர்களுக்கு சிலை வைத்து விடுவாரோ என எண்ணும் படிக்கு கதையை குழப்பித் தள்ளி கடைசியில் எல்லோரையும் கொன்று விட்டார். இத்தனை பெரிய குறைகளும், சொதப்பல்களும்  இருக்கும் போது, விஎபெக்ஸ் தொழில் நுட்பக்குறை ஒன்றும் பெரிதல்ல.  

சொல்லப் போனால், அனைவரின் அருமையான உழைப்பை சரியில்லா திரைக்கதை கெடுத்து, ஒரு சொத்த கடலையை கடித்த அனுபவத்தை தந்து விட்டது. இதற்கான முழு பொறுப்பை இயக்குனர் மட்டுமே ஏற்றுக் கொள்ள  வேண்டும். விக்ரமின் உழைப்பை வீணடித்த இயக்குனர்களின் வரிசையில் பா. ரஞ்சித்தும் சேர்கிறார் என்பதுவும் வேதனையானதே. 

இருந்தாலும், மனது கேட்காமல் சொல்கிறேன் விக்ரம், பார்வதி, ஜி.வி. பிரகாஷ் என்ற மூன்று அசுரர்களின் அசுரத்தனமான உழைப்புக்காகவும் , எண்ணற்ற துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களின் அர்பணிப்புக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில்  ஒரு முறை இந்தப் படத்தைப்  பாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம