சிலை கடத்தலில் உண்மைக் குற்றவாளிகள் - காதர் பாட்ஷாவா? பொன் மாணிக்கவேலா?'' துருவித் துருவி விசாரிக்கும் CBI
சிலைகள் கடத்தலில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் - காவல்துறை பணி சார்ந்த காதர் பாட்ஷாவா? அல்லது பொன் மாணிக்கவேலா?''அல்லது இருவருமேவா என துருவித் துருவி விசாரிக்கும் CBI
பழவூர் சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணி அலுவலரான பொன் மாணிக்கவேல் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சி.பி.ஐ .அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வீட்டில் 2023 ஆம் ஆண்டு சிபிஐ பதிந்த வழக்கின் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெறுகிறது விசாரணையில் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த இறந்த தீனதயாளன் உடன்
இவருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் வி.கே.சசிக்கலாவின் உறவினரான இவர் சில வகையில் பல குற்றவாளிகளைக். காப்பாற்றிய தகவல் தற்போது வருகிறது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலின் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய போது சிலை கடத்தல்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பொன்.மாணிக்கவேல் சதியில் ஈடுபட்டார் என அதே பிரிவில் பணியாற்றி அவரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார். இதை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவும் செய்தது. அதனடிப்படையில்
சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மேலும் அவரிடம் அதிகாரிகள் கிடுகுப்பிடி விசாரணை நடத்தினர். அவர் பணியாற்றிய காலத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொன் மாணிக்கவேல் மீது காதர் பாட்ஷா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக இன்று தினம் இந்தச் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2008 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் உலோக சிலைகள் 3 கண்டெடுக்கப்பட்டன, அந்த மூன்று சிலைகளையும் காவல் துறையில் பணியாற்றிய துணை கண்காணிப்பாளர் காதர் பாட்ஷா, கோயம்பேடு காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் பணி சார்பு ஆய்வாளராகப் பணியாற்றிய சுப்புராஜ் என்பவரும் விவசாயியுடன் சேர்ந்து விற்றதாக 2018 ஆம் ஆண்டு பொன் மாணிக்கவேல் வழக்குப் பதிவு செய்தார். அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில்
2023 ஆம் ஆண்டு சிபிஐ பதிந்த வழக்கின் அடிப்படையில் சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில் இந்தச் சோதனை நடந்தது. அவரிடமும் சிலைக் கடத்தல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
1989 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வானார் பொன் மாணிக்கவேல். 1996 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்விலும் பங்கேற்று சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், உளவுப் பிரிவு டிஐஜி, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர், ரயில்வே ஐஜி, சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி என பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.
2008 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட காலங்களில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் காதர் பாட்ஷா மற்றும் ஐஜி பொன்மாணிக்கவேல் ஆகியோரின் வங்கிக் கணக்குகள் குறித்தும் என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்தும் அது தொடர்பான ஆவணங்களை வைத்து தற்போது பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் ஆறு பேர் விசாரணையில் ஈடுபட்டனர்.
ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் பெறும் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் காதர் பாட்ஷா மற்றும் அருள்ராஜ் ஆகியோருக்கு சம்மன் அளித்து நேரில் விசாரணை செய்து யார் சொல்வது உண்மை, யார் மீது தவறு என்பது குறித்த அறிக்கையை சிபிஐ உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல் ”நான் எந்தப் பொண்ணு கையையும் புடிச்சி இழுக்கல.. 1 கேஸ் இல்ல 150 கேஸ் போட்டாலும் அசர மாட்டேன்.. கடைசி மூச்சு வரைக்கும் போராடுவேன்”.. நான் மட்டும் ஆவணத்தை வெளியிட்டேன்னா தூக்கி வாரி போடுற அளவுக்கு ஆளுங்க மாட்டுவாங்க.. நாளைக்கு பாருங்க"….என கொந்தளித்தார் பொன். மாணிக்கவேல் தமிழ்நாடு முழுவதும் களவு போன சிலைகள் இந்த இருவருக்கும் தெரியாமல் இருக்காது இவர்களை உரிய வகையில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆறு நபர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் சிறப்பு அலுவலர் பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் மீது அரசு ஊழியர் பொய்யான வாக்குமூலம் அளித்தல் பிரிவு 199,இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கக் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் டி.ஐ.ஜி லவ்லி காட்டியார் ஐபிஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை பாலவாக்கத்திலுள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த போது, அதே பிரிவிலிருந்த காதர் பாட்ஷா என்பவர் சிலை கடத்தல்காரர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்தார். இந்த நிலையில் "தற்போது 100+ வழக்குகளை சிபிஐக்கு மாற்றினார்கள். அதற்கான அரசாணையையும் வெளியிட்டார்கள். ஆனால், அந்த அரசாணை செல்லாது என்று முன்பு நீதிபதி உத்தரவிட்டார். எனவும் நான் ஓய்வு பெறப் போகும் நேரத்தில் எனக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பும் வழங்கினார்கள்" என நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். உண்மை நிலை தான் என்ன ? அதற்கு முன்பாக ஒரு முன் கதை சுருக்கம்:-சுபாஷ் கபூர் இவன் ஒரு இன்டர்நேஷனல் சிலை கடத்தல்காரன்
அது தான் அவனது தொழில். தென்னிந்தியாவிலிருந்து பல்வேறான சிலைகளைத் திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்து கோடிகள் குவித்த ஒரு கேடிக் கிரிமினல்.
தமிழ்நாட்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆணையராக இருந்த காதர்பாட்சா மேற்கொண்ட விசாரணையில் இவன் தான் குற்றவாளி எனக் கண்டுபிடிச்சு அரியலூர் அருகே ஒரு சிலை காணாமல் போனது தொடர்பான வழக்கில இவனைக் கைது செய்ய அரஸ்ட் வாரண்ட் உத்தரவு வாங்குறாங்க. அதை வைத்து சிபிஐ மற்றும் இன்டர்போல் மூலமா எல்லா நாட்டுக்கும் ரெட் நோட்டீஸ் விட்ட பிறகு அதன் மூலமா 2011ஆம் ஆண்டில் ஜெர்மனி Frankfurt விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டின் அனுமதி பெற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டான்
தனது கைதுக்குக் காரணமாக இருந்த காதர்பாட்சா மீது கடுங்கோவமாகவே இருந்துள்ளான் சுபாஷ் கபூர்.
அப்போது சிலை தடுப்பு பிரிவு ஆணையராகப் பொறுப்பேற்ற பொன் மாணிக்க வேலோடு டீலிங் போட்டு
அதுக்காக ஒரு பொய் சாட்சியை தயார் செய்து சிலைய திருடச் சொன்னதே காதர்பாட்ஷா தான் என வழக்கு ஜோடனை செய்து அவர் கைது செய்யப்பட்டதாகவே தகவல் உள்ளது.
காதர் பாட்சா தற்போது உயர் நீதிமன்றத்த்ல் தொடர்ந்த வழக்கில இதில பெரிய சதி உள்ளது எனவும் அதனால் நீதிபதி இதை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவு போட்டுள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு பின்னர் இதுல காதர்பாட்ஷாவுக்கு இதில் சம்பந்தம் உண்டா இல்லை இதில் பொன் மாணிக்கவேல் தான் காரணம்மானு சிபிஐ தரப்பில் தற்போது சோதனை நடந்துள்ளது.
இடையில இந்த வழக்கில் மாட்டிவிடுவோம் எனப் பயந்து தான் பொன் மாணிக்கவேல் தற்போது பணி ஓய்வுக்குப் பின்னர் யபக்திமான் வேடம் எடுத்து பாஜக ஆதரவாளர்கள் பட்டியலில் இணைத்துக்கொண்டார் எனவும் பேட்டி கொடுத்து இருப்பதில் தெரிகிறது. ஒரு நல்ல தேசிய இயக்கம் பாஜக இந்த
அய்யோக்கியர்களின் புகலிடமாக மாறுவது பலரும் கவலை கொள்ள வேண்டிய நிலை தான் உள்ளது. சிலைகள் கடத்தப்பட்டதற்கு மூளையாகச் செயல்பட்டது அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற சுபாஷ் சந்திர கபூர்(வயது 73) என்பது தெரியவந்தது. வெளிநாடுகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சிலை கடத்தல் வழக்கிலும் இவனுக்குத் தொடர்பிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இது ஒருபுறமிருக்க சுபாஷ் கபூரை சர்வதேசக் காவல்துறையும் தேடி வந்தனர்.
பிரபல கலைப்பொருட்கள் வியாபாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுபாஷ் கபூர், அமெரிக்காவில் கலைப்பொருள் விற்பனை மையத்தையும் நடத்தி வந்தான். கடத்திக் கொண்டு வரப்படும் பெரும்பாலான சிலைகள் இங்கிருந்தே ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச இன்டர்போல் காவல்துறை உதவியுடன் ஜெர்மனியில், அந்நாட்டுக் காவல் துறை சுபாஷ் கபூரைக் கைது செய்தனர். பின்னர், அவரை தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக இந்தியா கொண்டுவருவதற்கு கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து 2012-ஆம் ஆண்டில் சுபாஷ் கபூர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலையத்தில் 2008-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகவே சுபாஷ் கபூரை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர். ரூபாய்.94 கோடி மதிப்புள்ள 19 பழமையான சிலைகளை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்துக்குக் கடத்தி விற்பனை செய்ததாக அவன் மீது வழக்கும் பதிவானது.
பல நூற்றாண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இந்திய சிலைகள், கலைப் பொக்கிஷங்களை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லக் கூடாது என மத்திய அரசு 1972-ஆம் ஆண்டில் சட்டமியற்றியது. ஆனால், அதையும் மீறி இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான பழமை வாய்ந்த சிலைகள், கலை பொக்கிஷங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டதாக வே தகவல் உள்ளது.
அந்த வழக்கில் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சுபாஷ் கபூருக்கு கடந்த 1-ஆம் தேதி, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஏழாயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. ஏற்கெனவே சுபாஷ் கபூர் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்து விட்டார். இருப்பினும், அவன் மீது மேலும் நான்கு சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் உள்ளன. எனவே, அதிலும் தண்டனை பெற்றுக் கொடுக்க காவல் துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூரை உடையார்பாளையம் வழக்கு முடிந்த உடன் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம் என தமிழ்நாடு காவல்துறை மத்திய அரசு மூலம் ஜெர்மனி நாட்டின் காவல் துறைக்கு உறுதியளித்திருந்தனர். ஆனால், அவனை மீண்டும் ஜெர்மன் நாட்டின் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. தொடர்ந்து கால தாமதம் ஆவதால் குற்றவாளிகளை பரிமாறி கொள்வதற்காக பரஸ்பர ஒப்பந்தத்தை முடித்து கொள்வதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுபாஷ் கபூர் விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை, தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு அண்மையில் கடிதம் எழுதியதையடுத்து சுபாஷ் கபூரை மத்திய அரசு மூலம் ஜெர்மன் அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுபாஷ் கபூர் 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துவிட்டான். இருப்பினும் அவன் மீது மேலும் சில வழக்குகள் உள்ளதாலும், நீதிமன்றம் விதித்த அபராதத்தைச் செலுத்தாததாலும் அவன் சிறையிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்ட பின்னர் 2012-ஆம் ஆண்டில் நியூயார்க்கில் இருக்கும் சுபாஷின் குடோன்களில் அதாவது வேர்ஹவுஸ்களை அமெரிக்கக் காவல்துறை சோதனை செய்தது அதில் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான கலைப்பொருட்களைக் கைப்பற்றியும் இருந்தது. அவன் மீது சுமார் 32 வழக்குகள் வரை அங்குள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், சுபாஷ் கபூர் ஜெர்மனியிடம் ஒப்படைக்கப்பட்டாலும், பின்னர், அவனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால், சுபாஷ் கபூர் இந்தியாவை விட்டுச் செல்ல மனமின்றி இருப்பதாக காவல்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்