நியோ மேக்ஸ் மோசடி சொத்துக்கள் ED யால் முடங்கியது நீதிமன்றம் 15 மாத கால அவகாசம் தற்கொலைகளைத் தடுக்குமா
ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால், முதலில் அவருடைய ஆசையைத் தூண்ட வேண்டும்’ எனும் வசனம் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும்.
அதனடிப்படையிலேயே முற்றிலும் வினோதமான இந்த நியோ மேக்ஸ் மோசடிகளைப் போல திரையில் பார்க்கும்போது, நீங்கள் நன்றாகச் சிரிக்கிறீர்கள், மற்றும் சிந்திக்கிறீர்கள் ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் நம் நாட்டில் அன்றாட நிகழ்வுகள் என்பதை அடுத்த நொடியிலேயே வசதியாக மறந்தும் விடுகின்றனர். திரைப்படக் கதாநாயகன் சரியாகச் சுட்டிக்காட்டுவது போல,
மனிதனின் அடிப்படையான பேராசை உணர்வுக்கு தடை இல்லாத நிலையில் பணம் சம்பாதிப்பது மிகவும் இந்தத் திருடர்களுக்கு எளிமையானதாக இருக்கும் என்று விசாரணை செய்யாமல் முதலீடு செய்து நம்புகிற மக்கள் தான் அவர்கள் பலம் இவர்கள் பலஹீனம் தற்போது ஏமாற்றம் நிகழ்ந்த பின்னர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதோ ஏமாற்றப்பட்ட பலரது சோகக் கதை :- சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி எம்.ஜி.ஆா் நகர் இராமலிங்கம் (வயது 54). இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். நியோ மேக்ஸ் நிறுவனத்தில் ரூபாய். 25 லட்சத்தை இராமலிங்கம் முதலீடு செய்தாா்.
அந்த நபர்கள் நடத்திய மணி லாண்டரி மோசடி அதாவது ஒரே நிலத்தை பலருக்கும் விற்பனை செய்து லாபம் பார்ப்பது மூலம் அதை வாங்கும் நபர்களுக்கு பதிவு செய்து தருவதில்லை இருந்தும் பணத்தின் ஆசை காரணமாக முதலீடு செயத இவரது நண்பா்கள்,உறவினா்கள் பலரையும் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ய வைத்த நிலையில், அந்த நில நிதி நிறுவனம் நியோமேக்ஸ் இராமலிங்கத்துக்கு இராமம் போட்டது, வட்டி, முதலீடு செய்த பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியது. மேலும், பணம் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த உறவினா்கள் இராமலிங்கத்துக்கு நெருக்கடி கொடுத்தனா். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா், தற்கொலை செய்து கொண்ட இராமலிங்கம் அந்த ஊர் இடுகாட்டில் பிரேதம் பரிசோதனைக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டார். ஆம் அவரை நம்பி நியோமேக்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களும் இராமலிங்கம் போல அடங்கிவிட்டார்களா என்பது தான் இந்த மோசடிக் கும்பலின் இராஜ தந்திரம்.
அதேபோல் நியோமேக்ஸ் நிறுவனங்களில்`முதலீடு செய்த மற்றொரு நபர் பணத்தையாவது கொடுங்கள்'' என கெஞ்சிக் கேட்டும் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார் பேராவூரணி பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி இந்த நில நிதி முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த நிலையில் அந்த நிறுவனம் பணத்தை திருப்பி தராததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. நியோமேக்ஸ் மோசடி வழக்கில் விசாரணையை முடிக்க மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு 15 மாதங்கள் அவகாசமளித்துள்ளது நீதிமன்றம்
நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கின் விசாரணையை 15 மாதங்களுக்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு ( EOW ) சென்னை உயர் நீதிமன்றத்தின். நீதிபதி எம்.தண்டபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.சொத்துக்களை இணைப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்குவதற்கான தொடர் உத்தரவுகளையும் வழங்கினார்.
விசாரணை நடத்திய நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, விசாரணையின் மந்தமான மற்றும் மெதுவான வேகத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது என்று நீதிமன்றம் கவலையாகக் கவனித்தது.
3.6 லட்சம் முதலீட்டாளர்களுக்கு 11,179 முதலீட்டாளர்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டதென்று நீதிபதி கூறினார். 10,000 கோடிக்கும் அதிகமான தொகையில் சுமார் ரூபாய்.851 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே ED மூலம் முடக்கப்பட்டுள்ளன. டிஎன்பிஐடி நீதிமன்றம் மற்றும் டிஆர்ஓக்கள் மூலம் டெபாசிட் செய்பவர்களுக்கு சுமார் ரூபாய்.150 கோடி மட்டுமே சில உயர் சிபாரிசு இருந்த நிலையில் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
நீதியரசர் எம்.தண்டபாணி கூறுகையில், ஒவ்வொரு தனிநபரும் தனது ஆரம்ப நாட்களில் பணப் பலன்களைப் பெறுவதற்கு கடுமையாகப் பாடுபடுகிறார், அதை அவர் முதலீடு
செய்கிறார், அதன்மூலம் வாழ்க்கையின் பிற்பகுதியில், அது அவரது முதுமைக் காலத்தில் உதவியாக இருக்கும். எவ்வாறாயினும், ஏமாற்றி மிதக்கும் நிதி நிறுவனங்களால் இத்தகைய டெபாசிட்டுகள் நேர்மையற்ற கூறுகளால் பறிக்கப்படுகின்றன, அவை லாபகரமான மற்றும் கற்பனையான வட்டியை வழங்குகின்றன, இருப்பினும் அவை சாதாரண மக்களுக்கு வைப்புத் தொகையை எப்போதாவது திருப்பிச் செலுத்துகின்றன. சாதாரண மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மீட்டெடுக்க துவக்க நிலையிலிருந்து ஓட வைக்கப்படுகிறான்.
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் விசாரணையை முடிக்க EOW க்கு 15 மாதங்கள் அவகாசமுள்ளது
நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்பவர்களின் நலன்களைப் பாதுகாக்க தமிழ்நாடு டெபாசிட்டர்களின் வட்டி பாதுகாப்புச் சட்டம் (டிஎன்பிஐடி) இயற்றப்பட்டது என்ற நிலையில் ரிசர்வ் வங்கி போன்ற ஒழுங்கு முறை அதிகாரிகளின் வரம்பிற்குள் வராத நிதி நிறுவனங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்யும் வைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். சட்டத்தை இயற்றியதன் நோக்கத்தை அடைவதற்காக, வைப்புத்தொகையாளர்களுக்கு எதிராக நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடிச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவு, கூறப்பட்ட வசூலில் இருந்து வாங்கப்பட்ட நிறுவனங்கள், அதன் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள் போன்றவர்களின் சொத்துக்களை அனைத்தையும் பறிமுதல் செய்ய அரசுக்கு உதவுகிறது.
எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் டெபாசிட் செய்த தொகையை அனைத்து டெபாசிட்தாரர்களின் விவரங்களையும் வெளியிட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டார்.
சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள TNPID வழக்குகளின் பொருளான சொத்துக்கள் எதையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்நியப்படுத்தக் கூடாது.நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ள நிலையில்,
ரூபாய்.21.80 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு புகார் அடிப்படையில் தகவல்! நில நிதி மோசடி வழக்கில் திரைபடத் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் என்பவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை மூலம் கைது செய்யப்பட்டார்! நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடிப் பணத்தில் அவர் தயாரித்த திரைப்படம் அதை இயக்கிய தங்கர்பச்சான்.
குறித்து நமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்த போது“நியோ மேக்ஸ்”நிதி நிறுவன உரிமையாளர் செய்த மோசடி பணத்தில் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் தயாரிப்பாளர் துரை.வீர சக்தி என்பதும் தெரியவந்தது. மக்கள் பணம் ரூபாய் 5000 கோடியைச் சுருட்டி கொள்ளை.அடித்தநிலையில்..இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களுக்கும் பங்கு உண்டு. ரூபாய் 500கோடி. 10 பேர் இந்த கொள்ளயில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த உடந்தைக் குற்றவாளிகளை காப்பாற்ற. பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ரூபாய் 5000 கோடி மக்கள் பணமில்லையா. ஒரு கட்சி மாநிலத் தலைவர் அரசியல் செலவு மாதம் ரூபாய் 8 லட்சம் செய்வது இப்படித் தானா என்று மக்கள் கேட்கும் நிலையில். .
மேலும், நியோமேக்ஸ் குழும நிறுவனங்கள் நிலம் வாங்குவதற்காக கணிசமான அளவு பொது நிதியை பிற நிறுவனங்களுக்கு (குழுவிற்கு வெளியே) மாற்றியிருப்பதும், இந்த அசையாச் சொத்துக்கள் இன்னும் அந்த நிறுவனங்களிடம் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த நிலப் குவிப்பு பார்சல்கள் மற்றும் திட்டங்கள் நியோமேக்ஸ் குழும நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 'குற்றச் செயல்கள்' என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள TNPID வழக்குகளின் பொருளான எந்தச் சொத்தையும் அந்நியப்படுத்தக் கூடாது என்றும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இணைக்கப்பட்ட ஒரு தொகுதியை தள்ளுபடி செய்யும் போது நீதிமன்றம் இந்த உத்தரவுகளை வழங்கியது.
இவர்களுக்கு கம்பெனிகள் சட்டத்தின் படி பதிவு அதன்CIN: U70109TN2013PTC093705 நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் ROC குறியீடு ரோசி-சென்னை பதிவு எண் 093705 நிறுவனத்தின் வகை பங்குகளால் வரையறுக்கப்பட்ட நிறுவனம் நிறுவனத்தின் துணைப்பிரிவு அரசு சாரா நிறுவனத்தின் தனியார் பாதுகாப்பு தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூபாய் 40000000
செலுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் 14020000
உறுப்பினர்களின் எண்ணிக்கை (பங்கு மூலதனம் இல்லாத நிறுவனத்தில் பொருந்தும்) இணைக்கப்பட்ட தேதி 14-11-2013
பதிவு செய்யப்பட்ட முகவரி ரிக்கி டவர் - இரண்டாம் தளம் எண் -85, சுப்ரமணிய பிள்ளை தெரு, காலனி, பைபாஸ் ரோடு மதுரை 625016 மின்னஞ்சல் ID: neomaxpropertiespvtltd@gmail.com
பட்டியலிடப்படாதது பங்குச் சந்தையில் நிறுத்தப்பட்டது -
கடைசி AGM தேதி 30-11-2021
இருப்பு நிலைக் குறிப்பின் தேதி 31-03-2021
நிறுவனத்தின் நிலை (எப்ஃபைலிங் செய்ய) 16-11-2022 இயக்குநர்கள்
DIN/PAN. பெயர் தொடக்க தேதி
02615451 சங்கரபாண்டி பாலசுப்ரமணியன் 10-05-2018
02677775 சண்முகம் கமலக்கண்ணன் 10-05-2018
05169785 துரைக்கண்ணு வீரசக்தி 14-11-2013 ஆகியோர் ஆவர்.
இதில் எத்தனை தீர்வு வந்தாலும் பொது நீதி யாதெனில் :- ஒரு ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஐந்து ரூபாய் வீதம் ஐந்து நபருக்கு 25 ரூபாய்க்கு விற்பதாக கூறி பதிவு செய்யாமல் பத்திரம் வழங்கி 24 ரூபாய் லாபம் பார்த்து அதில் பத்து சதவீதம் தரகர் கமிஷன் வழங்கி மீதம் அவர்கள் வசம் நிலமும் அவர்கள் வசம் பணம் முதலீடு செய்த பலரும் பதிவு செய்யாமல் வாங்கிய முதலீட்டு பத்திரம் இது தான் செபி அனுமதி பெறாத மணி லாண்டரி எனும் பணச்சூதாட்டம் இதற்கு முறையாக ரிசர்வ் வங்கி அனுமதி மற்றும் அரசு அனுமதி பெறவேண்டும் ஆனால் இவர்கள் பெறவில்லை
இதை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் விசாரிக்கவில்லை அதனால் இனி இதில் இப்போது விசாரணை நடத்தி வரும் ஏஜன்சியான மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு அதைத் தாண்டி அமலாக்கத்துறை முடக்கிய சொத்து
செஃபி கட்டுப்பாட்டுக்குச் செல்லும் அது முதலீட்டாளர்களுக்கு ஒரு கமிஷன் நியமிக்கும் அப்போது தான் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் பாதித் தீர்வு வரும். இவர்கள் பண முதலீடு மக்கள் மூலம் பெற ரிசர்வ் வங்கி அனுமதி பெறவில்லை என்பதே உண்மை. இதில் பொருளாதார குற்றப்பிரிவு பலமுறை அழைத்தும் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் கொடுக்காமல் இருப்பவர்கள்
பல இலட்சம் பணத்தை முதலீடு செய்து வருமான வரி செலுத்தாமல் இருக்கும் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் அல்லது லஞ்சம் ஊழல் செய்து வந்த பணத்தை லாப நோக்கில் முதலீடு செய்த அரசு ஊழியர்கள் மற்றும் தொழில் முதலீட்டு நபர்கள் ஆகவே இவர்கள் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் உள்ளதால் தான் புகார்கள் எண்ணிக்கை குறைகிறது
கருத்துகள்