இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டி மீன்பிடித்த
தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் செயல் தலைவருமான ராகுல் காந்தி
மத்திய வெளியுறவுத்துறையின் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திசாநாயக்கவிற்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் நேரடியாக கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா இலங்கைக்கு இடைப்பட்ட கடற் பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் பாரம்பரிய மீன்பிடிப்பு உரிமை குறித்து மயிலாடுதுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சுதா இதில் செய்த பிழை என்ன?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதா மயிலாடுதுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராவார் தமிழ்நாடு மீனவர்களின் சிக்கல் குறித்து இலங்கை அரசின் அதிபர் அநூராவிடம், நேரடியாகக் கோரிக்கைக் கடிதம் மூலமாக முன் வைக்கிறார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் இது ஒரு வெளி நாட்டு உறவு குறித்த விவகாரம் என்று கூட தெரியாமல் நேரடியாக மனு அஞ்சல் மூலம் போடுகிறார். என்ன விதமான பக்குவமற்ற தன்மையிது! என அரசியல் சான்றோர் வினவும் நிலையில் அதில் ஒரு நாட்டின் அதிபரை Dear Brother எனவும் அழைக்கிறார். இதில்
கொடுமை என்னவென்றால். No, His Excellency என எழுத வில்லை. Salutation எப்படி என்று பாருங்கள்.
உண்மையில் வெளியுறவு குறித்து விடயங்களில், மாநில முதலமைச்சர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள்
இந்திய நாட்டின் பிரதமருக்கோ அல்லது அயலுறவு விவகாரத்துறை அமைச்சருக்கோ தான் கவனத்திற்குப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு போய் பேசி தீர்க்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாக வெளிநாட்டு அதிபருக்கு தனது உத்தியோகப் பூர்வமாக கடிதம் எழுதவது முறையோ அல்லது மரபபோ அல்ல.
அந்த அடிப்படை இல்லாமல் மயிலாடுதுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் சுதா கடிதம் எழுதியுள்ளார் எந்த அனுபவமுமற்று
தமிழ்நாட்டில் இப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்! என அரசியல் அறிந்த சான்றோர் பலரது கூற்று. மேலும் அவர் சார்ந்துள்ள கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ராகுல் காந்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்