தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவை முழுவதும் நிரம்பியது.
234 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாட்டின் அமைச்சரவையைப் பொறுத்த வரை முதல்வர் அடங்கிய அமைச்சரவை மொத்தம் 35 நபர்கள் தான் இடம்பெறலாம். தற்போது இருக்கும் 34 நபர்கள் கொண்ட அமைச்சரவையில் 3 நபர்கள் நீக்கப்பட்டு 4 நபர்கள் சேர்க்கப்படுவதன்மூலம் தமிழ்நாடு அமைச்சரவை மொத்தம் 35 நபர்களுடன் முழுவதும் நிரம்பியது இனி புதிதாக ஒருவரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டுமானால் அமைச்சராக உள்ள ஒருவரை நீக்கினால் தான் முடியும். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் புதிய அமைச்சரவையில் ஜாதி வாரியாக உள்ள பிரதிநிதிகள் பற்றிய தகவல் வெளியாகின. முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலினும் இசைவேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
அடுத்தப்படியாக அமைச்சரவையில் முக்குலத்தோரில்:: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அமைச்சரவையில் ஐந்து நபர்கள் முக்குலத்தோர் சமூகத்தினராகவும்
வன்னியர்களில்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோருடன் இன்று புதிதாக அமைச்சராகும் ஆர் ராஜேந்திரனும் இணைகிறார் இதனால் தமிழ்நாடு
அமைச்சரவையில் வன்னியர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
கவுண்டர்கள்: வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தகவல் - செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோருடன் புதிதாக அமைச்சராகும் செந்தில் பாலாஜியும் சேர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமுதாயத்தினரின் எண்ணிக்கை
நான்காக உயர்ந்துள்ளது. நாடார்கள்: சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளிட்ட இருவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அட்டவணை/ பட்டியலினத்தவர்கள்: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்,
உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி செழியனும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான். இதன்மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் அட்டவணை/ பட்டியலினத்தவர்களின் எண்ணிக்கையில் நான்காகிறது. யாதவர்கள்: கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பால்வளம் மற்றும் கைத்தறி கிராம தொழில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகிய இரண்டு நபர்கள் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
அதன்படி யாதவர் 2 பேர் தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ளனர்,
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிறு குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள். மொழி வாரி சிறுபான்மையிரில் வரும் தெலுங்கு ரெட்டியார் - தெலுங்கு நாயக்கர்கள் : தமிழ்நாடு அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் இருவர் தெலுங்கு ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தெலுங்கு நாயக்கர்கள்; பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறித்துறை அமைச்சர் எம்.ஆர் காந்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகிய மூவரும் தெலுங்கு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
வனத்துறை அமைச்சர் டாக்டர் கே.பொன்முடி உடையார் சமுதாயத்தையும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ் நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுடன் இஸ்லாமிய மத சிறுபான்மையினருக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. அது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இஸ்லாமிய மதம் சார்ந்தவர்.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் ஜாதிவாரி பிரதிநிதித்துவம் பேசும்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இந்த முறை இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள்