தமிழ்நாடு முழுவதும், 2,327 அரசுப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய நேற்று நடந்த TNPSC, Group - 2 தேர்வை, 5.81 லட்சம் பேர் எழுதினார்கள்.
ஒருங்கிணைந்த Group- 2 பணிகளில் அடங்கிய பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நடந்தது.
7 லட்சத்து 93,966 பேர் விண்ணப்பித்தனர். நேற்று, 2,763 மையங்களில் நடந்த தேர்வில், 5 லட்சத்து 81,305 பேர் தேர்வெழுதினர். மொத்தம் விண்ணப்பித்தவர்களில் இது 73.22 சதவீதமாகும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் இ ஆ ப, சென்னை எழும்பூர் பிரசிடென்சி மேல்நிலை பள்ளி மையத்தில் நடந்த தேர்வைப் பார்வையிட்டார்.அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
"துணை வணிக வரித்துறை அலுவலர், சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர், வருவாய்த் துறை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, தகுதி வாய்ந்த 2,327 பேரைத் தேர்வு செய்ய தேர்வு நடந்துள்ளது.
தேர்வில் தேர்ச்சி பெறுவோர், முதன்மைத் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.
2024 ஆம் ஆண்டு, 10 தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டு, எட்டு தேர்வுகளுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மீதமுள்ள இரண்டு தேர்வுகளும் விரைவில் அறிவிக்கை வெளியீடு நடத்தப்படும்.
இந்த ஆண்டு இதுவரை, 10,315 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10,872 பேருக்கு வேலை கிடைக்கும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ., group - 2 தேர்வுக்கான விடைத்தாள், ஆறு வேலை நாட்களில் வெளியிடப்படும். தேர்வர்கள் மாற்றுக் கருத்துகள் இருந்தால் இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம்.
நேர்முகத் தேர்வு கிடையாது அதை வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து, இறுதி முடிவு வெளியிடப்பட்டு தேர்வுத்தாள் திருத்தும் பணி துவக்கப்படும். இரண்டு, மூன்று மாதங்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு கிடையாது.மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். Group- 4 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்.நேற்று நடந்த குரூப் - 2 தேர்வில், வினாக்கள் கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். தேர்வில் ஆளுநர் குறித்த வினா, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கேள்வி, 'கூற்று, காரணம்' வடிவில் இடம் பெற்றிருந்தது. கூற்று பகுதியில், 'இந்திய கூட்டாட்சியில், மாநில அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என, இரு வகையான பணிகளைச் செய்கிறார்' எனக் குறிப்பிட்டு, காரணம் பகுதியில், ' ஆளுநர் அலுவலகம் கூட்டாட்சி முறைக்கு எதிரானது' என, கொடுக்கப்பட்டிருந்தது.இந்தக் கேள்விக்குப் பதிலாக,
'கூற்று சரி, ஆனால், காரணம் தவறு; கூற்று மற்றும்
காரணம் சரி; கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது;
கூற்று தவறு, காரணம் சரி;
கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை;
விடை தெரியவில்லை'என, ஐந்து பதில்கள் கொடுக்கப்பட்டிருந்ததில், சரியான விடையை தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆளுனர் கூட்டாட்சிக்கு எதிராகச் செயல்படுவதாக, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆளுநர் பதவி தொடர்பாக சர்ச்சைக்குரிய கேள்வி TNPSC., தேர்வில் இடம் பெற்றிருப்பது, மாணவர்கள் வட்டாரத்தில் பரபரப்பான பேசும் செயலாக உள்ளது.இதுவரை ஞாயிற்றுக்கிழமையன்று மட்டுமே நடைபெறும் தேர்வுகள் தற்போது சனிக்கிழமை மாற்றியது திட்டமிட்ட செயல்.
அதன் அடிப்படையில் 2.71 இலட்சம் தேர்வர்களால் பங்கேற்க முடியவில்லை.
சென்ற முறை நடந்த இரண்டாம் பிரிவுத் தேர்வு முடிவுகளை கடந்த திங்கள்கிழமை அன்று வெளியிட்டது ஒரு உளவியல் தாக்குதல்.
நேற்று வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகக் கூறுகிறார்கள் தேர்வு எழுதிய மாணவர்கள்
கருத்துகள்