பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாடு சார்ந்த 3 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு தொகையை வழங்க வேண்டும் எனவும்.
பள்ளிக்கல்வித்துறையில் சமக்ர சிக்க்ஷா திட்டத்திற்காக வழங்கப்பட வேண்டிய நிதியினை விரைந்து வழங்க வேண்டும் எனவும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து, இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும். தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தது: இனிய சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமர் நரேந்திர மோடியின் கையில் தான் உள்ளது. 3 முக்கியமான கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கும் படி பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தேன். மத்திய அரசு நிதி தராததால் மெட்ரோ பயணிகளில் தொய்வு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் .
தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படாததைக் காரணம் காட்டி மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளேன்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் காலம்சென்ற சீதாராம் யெச்சூரி இல்லம் சென்று துக்கம் விசாரித்தார் சென்னை திரும்பிய நிலையில் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வந்த செந்தில் பாலாஜியை விமான நிலையத்தில் சந்தித்தார்.
கருத்துகள்