மாவட்டக் கல்வி அலுவலரிடம் உரிய அனுமதி பெற்றேன் என்றார் தலைமை ஆசிரியர். இப்போது மாவட்டக் கல்வி அலுவலருக்கு என்ன தண்டனை வழங்கலாம் ?
அரசு அனுமதி இல்லாமல் இனி எந்த நிகழ்ச்சிகளும் அரசு பள்ளிகளில் நடைபெறக் கூடாது எனவும், கல்விக்குச் சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது எனவும்,
துறை சார்ந்த உடனடியான நடவடிக்கைகள் கடுமையானால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும்.
அமைச்சரவையும், பள்ளி கல்வித்துறையும் அதை சரிவரச் செய்ய வேண்டும், செய்யும் என நம்புகிற மக்கள் பலர் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் காலைக் கழுவுவதற்காகவா இலட்சங்களில் தனியார் பள்ளிகளில் மக்கள் பணம் கட்டுகிறோம்?
இல்லையே. யார் அனுமதி தந்தார்கள்? பிள்ளைகளை கட்டாயப்படுத்தி இது போன்று செய்யலாமா? அதற்கு முதலில்
பள்ளிக் கல்வித்துறையில் என்ன நடவடிக்கை செய்வார்கள்? இதுவும் அந்த சுற்றறிக்கையில் உள்ளதா ? சென்னையில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பேசிய மகாவிஷ்ணு என்ற இளைஞர் சொன்ன கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய மகாவிஷ்ணு என்ற நபர் பேச்சில் ஆன்மீகம் குறித்து சர்ச்சைக்குரிய பல கருத்துகளை கூறியதாகவும், அது போல் சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளியில் மகாவிஷ்ணு பேச அழைக்கப்பட்டபோது, மனிதர்கள் முந்தைய பிறவிகளில் செய்த பாவ - புண்ணியங்களின் அடிப்படையில் இந்தப் பிறவியில் பலன்களை அனுபவிக்கிறார்கள் என்றார்.
அவரது பேச்சுக்கு அந்தப் பள்ளி தமிழ் ஆசிரியரும், பார்வை சவால் உடைய மாற்றுத் திறனாளியுமான கே.ஷங்கர் என்பவர் அந்தத் தருணத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஆனால், அப்படிக் கேள்வியெழுப்பிய ஆசிரியரிடம் மிகவும் உரத்த குரலில், ‘உங்களுடைய பெயர் என்ன, என்னைப் பேச அனுமதித்த மாவட்டகா கல்வி அலுவலரை விட நீங்கள் பெரியவரா ? என மகா விஷ்ணு பதிலுக்குக் கேள்வி எழுப்பினார். மேலும், தான் பேசுவது ‘அவருடைய ஈகோவை புண்படுத்தியதால்தான்’ இது போல அந்த ஆசிரியர் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.இந்த இரு அரசுப் பள்ளிகளிலும் மகாவிஷ்ணுவின் காணொளித் துணுக்குகள் கடந்த இரு நாட்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட. வியாழக்கிழமை அன்று அரசுப் பள்ளிகளுக்குள் இதுபோல நடக்க அனுமதித்தது ஏன் என பல்வேறு கேள்வியெழ
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை பள்ளிகளில் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என ஒரு சுற்றறிக்கை வெளியாகி, பள்ளிக் கல்வித் துறை மீது சிலர் விமர்சனங்கள் வைத்த நிலையில்,
இன்று காலையில் அசோக் நகர் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடக்கு மென அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்துக் கேள்வியெழுப்ப வெள்ளிக்கிழமை காலையில் அந்தப் பள்ளிக்கு ஊடக அழைப்பு
அமைச்சர் வருகைக்காகப் பலரும் காத்திருந்த போது திடீரென அங்கு வந்த எஸ்.எஃப்.ஐ, உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் பள்ளிக்கு முன்பாகப் போராட்டத்தில் இறங்க
பத்து மணியளவில் வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து இரண்டு மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.பின் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர், மகாவிஷ்ணுவிடம் கேள்வியெழுப்பிய தமிழ் ஆசிரியர் கே.ஷங்கருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசியவர் இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் கேள்வி எழுப்பிய ஆசிரியரை அவமானப்படுத்தியது தொடர்பாகப் புகார் அளிக்கப்படும் என்றும் கூறினார். மகாவிஷ்ணு என்ற நபர் எப்படி பள்ளிகளுக்குள் நுழைந்தார் என்ற கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.தமிழரசி, மகாவிஷ்ணு பேசியபோது குறுக்கிட்ட தமிழ் ஆசிரியர் கே.சங்கர், ஆகியோர் பேச மறுத்துவிட்டனர்.
விசாரணை நடத்துவதற்காக வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பன் ஆகியோரும் பேச மறுத்தனர். அமைச்சரிடம் கேட்டபோது, எப்படி இது ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்திலுள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட ஆணையிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அசோக் நகர் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வந்து சென்ற சில நிமிடங்களில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.தமிழரசியை, திருவள்ளூர் மாவட்டம் கோவில் பதாகையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.சண்முகசுந்தரம் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டார்.இந்த விவகாரம் குறித்து மகாவிஷ்ணுவின் கருத்தை அறிய பரம்பொருள் ஃபவுண்டேஷனில் கேட்டபோது, "அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருப்பதாகத் தகவல்,
அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியின்றி யாரையும் விழாவில் அனுமதிக்க முடியாது. யாரை அழைப்பதென்றாலும் முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியைப் பெற வேண்டும்.
"ஆனால், ஒரு நபர் மாணவர்கள் மத்தியில் பேச மிகத் தகுதியானவர் என பள்ளித் தலைமை ஆசிரியர் கருதினால், விதிவிலக்காக அவரே முடிவெடுக்கலாம். ஆனால், வரும் நபரின் பின்னணி குறித்து முழுமையாக ஆராய வேண்டியது அவர் கடமை. அந்த நிகழ்வுக்கு அவரே பொறுப்பு," என்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிகள் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகத்தின் கௌரவத் தலைவராக உள்ள ஏ.ஆர்.பாலகிருஷ்ணன்.
மாற்றுத் திறனாளியான கே.ஷங்கரை அவமானப்படுத்தியதாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மகாவிஷ்ணு மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் மகாவிஷ்ணு என்பவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தெலுங்கு தாய் மொழி கொண்ட குடும்பத்தில் மாணவராக இருந்த போது மேடைப் பேச்சில் ஆர்வமுடையவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய 'அசத்தப் போவது யாரு?' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் அறிமுகத்தைப் பெற்றார்.
அந்த நிகழ்ச்சியில் கிடைத்த பெயரும் அறிமுகமும் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்ட படங்களை இயக்க விரும்பி, கதைகளை எழுதி அதற்குப் பிறகு 'துருவங்கள் பதினாறு' என்ற திரைப்படத்தை கேரளாவில் விநியோகம் செய்தார்.
அதன் பிறகு படம் ஒன்றை இயக்கவும் முடிவு செய்தவர் அந்த முயற்சியில் வெற்றி கிடைக்காத நிலையில், அவர் ஆன்மீகக் குரு காஞ்சி விஸ்வநாத சுவாமி மூலம் ஆன்மீகப் பாதையை அவர் கண்டடைந்ததாக," அவரது 'பரம்பொருள் ஃபவுண்டேஷனின்' இணையதளம் கூறுகிறது.
பிறகு தன்னை ஆன்மீகவாதியாக அவரே முன்னிறுத்திக்கொண்டவர் தான் மகாவிஷ்ணு, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 'பரம்பொருள் ஃபவுண்டேஷன்' எனும் அமைப்பை நிறுவி நடத்துகிறார். இந்த அமைப்பின் சார்பில் யோகா நிகழ்ச்சிகள், உரைகள் ஆகியவற்றை நடத்தி வருகிறார் இந்த அரைகுறை ஆன்மீக வாதி மகாவிஷ்ணு என்ற பேர்வழி. திராவிட வழி ஆட்சியில்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரிய ஆன்மீகக் கல்வியை புகட்டுவதற்கு முன்பு இந்த விஷ்ணு அமைச்சர்களுக்கெல்லாம் ஆன்மீகப் பாடம் எடுத்திருந்தாலும் ஆச்சரியமில்லை.
இதுக்கெல்லாம் காரணம், கடை போட்டோவில் மேடையில் பேசும் இந்த ஊதா சட்டை தானாம்!
புதுக்கோடையில் இடைநிலை ஆசிரியராக வேலை பார்த்த சதீஸுக்கு ஜோதிடம் சொல்வதில் புலமை !
இவர் தன்னை 'சிகரம்’ சதீஸ் எனச் சொல்லிக் கொள்கிறார்.
அமைச்சராக ஆவதற்கு முன்பு நீங்க சட்ட மன்ற உறுப்பினராகி, அமைச்சராவது உறுதி. உங்க ஜாதகத்தின் படி நீங்க அமைச்சராகி அதிகாரம் செலுத்துவீர் என இவர் சொன்னாராம். அது அப்படியே நடந்து விட்டதாம். இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியே மேடைகளில் சொல்லிப் பூரிக்கிறார். அதற்கான நன்றிக் கடனாக இவரை தன்னோடு வைத்துக் கொண்டாராம்.
இவர் வழியாகத் தான் மஹாவிஷ்ணு திமுக அமைச்சர் பெருமக்களோடு நெருங்கி இருக்கிறார். அசோக் நகர் பள்ளி சமாச்சாரத்தில் இவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.
ஆக, ஜோதிடர்களும், ஆன்மீக போலி மோசடிப் பேர் வழிகளும் தான் இந்த நடவடிக்கை மூலம் வருவது கண்கூடு. திருவண்ணாமலை நித்யானந்தா, நாட்டரசன் கோட்டை அன்னபூரணி வரிசையில்...குருஜி பரம்பொருள் மஹா விஷ்ணு..! ஆரம்பிங்கடா.. நாடு நல்லா வரும். ஒரு முக்கிய விஷயம் யார் பார்வையிலும் எந்த ஊடகமும் விவாதிக்க வில்லை
இரண்டு நாட்களுக்கு முன் நித்தியானந்தா தரப்பில் தொடர்ந்த ஒரு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணியிடம் விசாரணைக் வருகிறது. அதில் நித்யானந்தா நேரில் ஆஜராக வேண்டும் எனச் சொல்லவே , நித்தியானந்தா தரப்போ அவரிடம் பொது அதிகார ஆவணம் பெற்ற நபரோ அவர் இந்தியாவிலேயே இல்லை என பதில் தருகிறார். சரி காணொலியிலாவது ஆஜராகுமாறு சொல்லுங்கள் என்றால் அதுவும் முடியாதென மறுத்துவிட்டது நித்தியானந்தா தரப்பு
வீடியோ மூலம் விளையாட்டுக் காட்டும் நித்தியானந்தா கும்பல், நீதிமன்றத்தின் முன் மட்டும் வீடியோ காட்சிகள் மூலம் ஆஜராகவே மறுக்கிறது.
நாம் பலமுறை ஆண்டுகளாகவே சொல்லி வருகிறோம், " நித்தி எங்கிருக்கிறார் என்பதைத் தேட வேண்டியது சட்டத்தின் வேலை. ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை நாம் சந்தேகம் கொண்ட நிலையில் நேர்ந்த முடிவு பற்றி தான் பலருக்கும் சந்தேகம்" என
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு டுபாக்கூர் கும்பல், கைலாசா தீவு, ஐநாவில் இடம், நித்தி கடிதம் அது இது என்று வீடியோக்களை போட்டு உருட்டி விளையாட்டு காட்டி கதை அளக்கும். அது எல்லாம் முன்பே வந்த காணொளி காட்சி அதை மக்கள் நம்பும் விதமாக லாவகமாக அவர் உயிருடன் உள்ளார் என நம்பவைக்கும் நாடக முயற்சி போலவே தெரிகின்றது.
மூளையே இல்லாத சில ஊடக அடிமைகள் கூறுகெட்ட பல பத்திரிகைகளில் முறையாக பணி தெரியாமல் அதை செய்தியாக போட்டுக் கொண்டிருக்கும். நிலை தான் உள்ளது
நாட்டின் பிரதமர், முன்னணி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் போற்றித் தலை வணங்கிய நித்யானந்தா ஐந்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் அதன் பிறகு என்ன ஆனார் என்று இன்று வரை எவருக்கும் தெரியாது. ஈக்வைடா தீவுகள் தான் கைலாஷ் கதை அது உண்மை எனில் அவர் வந்திருக்கலாம். ஆனால் சாமி திரைப்படம் கதையில் வரும் பெருமாள் பிச்சை தலைமறைவு போலவே நாம் நினைப்பது அவர் நீதிமன்றத்தில் தோன்றா நிலையில் சந்தேகம் வலுக்கிறது.
கருத்துகள்