பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசித்த அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது
கும்பாபிஷேகம்.கோவிலில் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷகப் பூஜைகள் துவங்கின. கோவில் முன் அமைத்த யாகசாலை வேள்வியில் 45 குண்டங்கள் அமைத்து முதல், இரண்டாம் கால யாகசாலை வேள்வியுடன் பூஜைகள் துவங்கி நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு 6 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி நடத்திய பிறகு புனித நீருடன் திருக்கடம் புறப்பாடு நடந்தது. கோவிலை வலம் வந்து கோபுரங்களில் புனித நீர் கலசம் எழுந்தருளியது. வானில் கருடன்கள் வட்டமிட பி.காரியப்பன் பூஜாரி தலைமையில் பூஜாரிகள் காளியம்மன், ராஜகோபுரம், அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசங்களில் காலை 10:57 மணிக்கு புனித நீர் கொண்டு கும்பாபிேஷகத்தை நடத்தினர்
பக்தர்களின் வசதிக்காக சிவகங்கையிலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்ந்து அருள்மிகு வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மாலை 6:15 மணிக்கு தங்கக் குதிரையில் அம்மன் வீதி உலாவில் எழுந்தருளினார்.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் பி.பாரதி, உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் நாராயணி உபயதாரர்கள், கோ.அழகாபுரி நகரத்தார், தேவகோட்டையில் வாழும் இளையாற்றங்குடி பட்டணசாமி பிரிவு நகரத்தார்கள், திருக்கோவில் பணியாளர்கள் விழா சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் வட்டம், அரியாகுறிச்சி கிராமம் (கொல்லங்குடி), மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக, தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொல்லங்குடி கிராமத்திற்கு தெற்கே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது. அம்பாள வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறார், பஞ்சமா பாதகம், நம்பிக்கைத் துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்மன் சன்னதியில் வழிபடுகின்றனர். மன்னர் காலத்தில் இவ்வூரில் வசித்த பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார்.
ஓரிடத்தில் கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இத்தல இறைவன் வெட்டுடையார் அய்யனார். இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற குலாலர் வழி பக்தர்கள் பூஜித்தனர். ஒரு சமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்ச மரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு வெட்டுடையார் காளி என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் பிரசித்தி பெறவே, அப் பெயரிலேயே ஸ்தலம் அழைக்கப்பெற்றது. ஆரம்பத்தில் இந்த ஊரில் தான் அய்யனார் கோயில் இருந்தது. இதை ஸ்தாபித்தவர் யார் என்பது தெரியவில்லை.
அய்யனாரை ஒரு குடும்பத்தினர் பூஜித்து வந்தனர். அந்தக் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் இருவர். மூத்தவர் காரிவேளார். இளையவர் கருப்ப வேளார். இருவரும் முறை போட்டு அந்தக் கோயிலின் பூஜையை செய்து வந்தனர். ஒரு முறை அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் காரிவேளார் கேரளா சென்று மாந்திரீக வித்தைகளைக் கற்றுக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பினார். தான் கற்ற வித்தைகளை நடத்த சில தேவதைகளைப் பயன்படுத்தினார். இவர் அய்யனாருக்கு பூஜை செய்து வரும் காலங்களில் சன்னதிக்கு முன் மணல் பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன. இது யாவும் காளிக்கு உரியது என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தில் காளியை பிரதிஷ்டை செய்தார். இவர் தோற்றுவித்ததே வெட்டுடையார் காளியம்மன். ஈச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காரணத்தால் அய்யனாருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றும், காளிக்கு வெட்டுடையார் காளி என்றும் பெயர் வந்தது.சுருக்குக...நீதி வழங்கும் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில்
மகா கும்பாபிஷேகம்.08.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10: 45 மணிக்கு மேல் 11: 4 5 மணிக்கு சிறப்புடன் நடந்தது முறையாக யாக வேள்வி நடைபெற்றது சிவகங்கை சமஸ்தானத்தின் மூன்றாவது இராணி கௌரி வல்லப
வேலு நாச்சியார் பூஜித்த அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன். அரியக்குறிச்சி கொல்லங்குடி காளையார் கோயில் வட்டத்தில் அநீதிகளை அழிக்கும் காளியம்மன் அருள் தருகிறார் உலகில் அநீதிகள் தழைத்தோங்கும் போது அன்னை பராசக்தி அவதரித்து நீதி வழங்குவார் என்பது மக்களின் நம்பிக்கை. அநீதிகள் செய்யும் பலரும் அஞ்சுகின்ற நிலை கடவுள் சக்திக்கு மட்டும் தான்.
இப்படி வஞ்சகம், பொறாமை, பேராசையால் சிலர் புரியும் அநியாயங்களை பணத்தால் மறைத்தாலும் தெய்வதிடம் இருந்து எவரும் தப்ப இயலாது.
இதனை உறுதிபடுத்தும் வண்ணம் அநீதி புரிவோர்க்கு தக்க தண்டனை வழங்கும் மகாசக்தியாக சிவகங்கைக்கு அருகே கொல்லங்குடியில் அன்னை வெட்டுடையார் காளியம்மன் வீற்றிருக்கிறார்.
கருத்துகள்