சீன நாட்டில் பூண்டு விளைவிக்க அதிகமாக இரசாயன உரங்களைப் பயன்படுத்தப்படுத்துவதனால் அங்கு பூண்டு மிக வேகமாக உற்பத்தியாகிறது.
இதன் காரணமாக தான் பூண்டு விளைச்சலில் உலகளவில் முதன்மை நாடாக சீனா விளங்குகிறது. அதிகப்படியான இரசாயன உரங்களின் உதவியில் விளைவிக்கப்படும் பூண்டு நம்முடைய உடலுக்கு தீங்கானது. அதனால் நாட்டு மக்களின் நலன் கருதி சீன நாட்டில் உற்பத்தி ஆகும் பூண்டுக்கு 2014 ஆம் ஆண்டு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் கூட எப்படியோ கள்ளச்சந்தையில் சீனா பூண்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் சீன நாட்டு பூண்டின் விலை மிகவும் குறைவு. அதனை இந்தியாவில் விற்பனை செய்யும் போது அதிக லாபம் கிடைப்பதனால் தொடர்ந்து சீனா பூண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நம் நாட்டில் பூண்டு அதிகம் ஏற்றுமதி ஆவதால் உள்நாட்டு தட்டுப்பாடு அந்த வகையில் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சீனாவிலிருந்து கண்டெய்னர்கள் மூலம் குஜராத் மாநிலத்துக்கு சீனா பூண்டு வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில் சீனா பூண்டு விற்பனையைக் கண்டித்து போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்து தமிழகம் உள்பட பல இடங்களுக்கு இந்த சீனா பூண்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் அதிகப்படியாக பூண்டு விளைவிக்கப்படும். ஆனால் இந்த முறை பருவம் தவறிப் பெய்த மழையால் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதனால் சீனா நாட்டுப் பூண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக பொதுமக்கள் பூண்டு வாங்கும் போது சீனா நாட்டுப் பூண்டு வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதனை பொதுமக்கள் சில விஷயங்களை வைத்து எளிதாக சீனா பூண்டை அடையாளம் காண முடியும். அதாவது சீனா நாட்டுப் பூண்டு அளவில் சிறியதாகவும், வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
அதேபோல் நம்நாட்டில் விளையும் பூண்டு அளவில் பெரியதாகவும், வலுவாகவும் இருக்கும். அதேபோல் நம் நாட்டின் பூண்டு அதிக நறுமணத்துடன் இருக்கும். ஆனால் சீனா பூண்டு லேசான நறுமணத்துடன் தான் இருக்கும்.இதனால் மார்க்கெட் மற்றும் கடைகளில் பூண்டு வாங்கும் மக்கள் பூண்டின் நிறம், அளவு, வாசனையை வைத்து நம் நாட்டில் விளையும் பூண்டை வாங்கி பயன்படுத்த வேண்டும். உடல்நலத்துக்கு கேடு என்பதால் தடை செய்யப்பட்ட சீனா பூண்டை தவிர்க்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்
கருத்துகள்