தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.சண்முகையா பாண்டியன் இன்று அதிகாலை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்
அவரது பூதவுடல் நாளை இறுதிஊர்வலம் அவரது இல்லத்திலிருந்து மதியம் 1 மணி அளவில் தென்காசி தாலுகா கணக்குப் பிள்ளை வலசை கிராமத்தில் நடைபெறுகிறது பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தேவர் குல கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் S.சண்முகையா பாண்டியன் தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரும், நேதாஜி தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவருமான நிலையில் கடந்த காலத்தில் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவராவார்.
முதன் முதலில் சங்கம் அமைத்ததவர்இவர் காலஞ்சென்ற தேவர் சமூக தலைவர்கள் நடிகர் முத்துராமன் பொன்.பரமகுரு, டாக்டர் ராமகிருஷ்ண தேவர், சீனிச்சாமித் தேவர். டாக்டர் சேதுராமன் உள்ளிட்ட பலர் போல திகழ்ந்தார்
ஆனால் இன்று ஊருக்கு பத்து தலைவர்கள் சுயநலத்திற்காக கட்டப்பஞ்சாயத்து செய்து தங்கள் புகழ் விரும்பிகளாக உள்ளார்கள் அவர்களும் புதிது புதிதாக கொடியை அறிமுக படுத்துகிறார்கள்.
எந்த கொடியை பிடிப்பது என தெரியாமல் ஆளுக்கொரு அமைப்பில் அச் சமுக மக்கள் நிலை உள்ளது
அம் மக்கள் பிரிந்து கிடப்பதால் தான் அரசியல் பின்னடைவு தற்போது உள்ளது. பரமக்குடி அருகில் பாம்பு விழுந்தான் கிராமத்தில், தேவர் ஜெயந்தி விழாவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, கடந்த காலத்தில் தேவர் குல கூட்டமைப்பு தலைவர் சண்முகையா பாண்டியன், தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சிராப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டு. தேசியப் பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட, சண்முகையா பாண்டியன், திருச்சிராப்பள்ளி சிறையில் நீண்ட காலம் இருந்து உடல்நலம் குன்றி இருந்தாலும் அப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஜாதிய ரீதியாக ஒரு சமூக பணி செய்து வந்தார்.
கருத்துகள்