ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்ய வலியுறுத்தியவரை மன்னிப்புக் கேட்க வைத்த மத்திய அமைச்சர் பலரும் கண்டனம்
உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி விதிப்பு இருக்கிறது.
ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்யுங்கள்” என்பது குறித்து தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோயம்புத்தூர் அன்னபூர்ணா உணவகக் குழுமத் தலைவருமான சீனிவாசன் சில நிமிடங்கள் பேசினார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விளக்கம் அளித்திருந்தார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக காணொளி ஒன்றும் பரவியது.இந்த விவகாரம் தற்போது அதிகம் விவாதிக்கும் நிலையில்,
மத்திய நிதி அமைச்சருக்கும், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையேயான, ‘தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பகிர்ந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியினரின் செயலுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என லண்டனில் உள்ள மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது
அன்னபூர்ணா ஹோட்டல்களின் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன் தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். இருப்பினும், GST குறித்து நியாயமாகக் கருத்துத் தெரிவித்தவரை மன்னிப்புக் கேட்க வைத்திருப்பது கண்டனத்திற்குரியது' என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "கோயம்புத்தூர் அன்னபூர்ணா தொழிலதிபருக்கு அவமரியாதை ஏற்படுத்தியிருக்கிறார்கள்" எனக் கண்டனம் தெரிவித்த நிலையில், கேரளா மாநில கங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "இதுதான் அவர்களின் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அன்னபூர்ணா சீனிவாசன் எழுப்பிய கேள்வி நியாயமானது தான். ஆனால், அவர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார். என்ன ஒரு ஆணவம்!" எனப் பதிவிட்டுள்ளது.
கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி, “பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தை செவிமடுத்து, அதை சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை. ஆனால், அதைச் செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அருவருப்பானதும். கூட. தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார். நடந்த நிகழ்வுகள் குறித்துக் காண்போம் :- பல தொழில்துறை அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பேசியதாவது, "உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள வானதி சீனிவாசன் எம்எல்ஏ எங்களுடைய ரெகுலர் கஸ்டமர். அவர் வர்றப்ப எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க. ஸ்வீட்டுக்கு ஐந்து சதவீதம், உணவுக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் உள்ள வைக்குற கிரீம்க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி இருக்கிறது.
அவங்க வரும்போதெல்லாம் ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி, காரம் சாப்பிடுவது, காரத்துக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்றால் சண்டைக்கு வருவது என தினசரி நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி கொடுப்பது கஷ்டமாக உள்ளது. பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது, அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி என்பதை பார்க்கும் வாடிக்கையாளர்கள், பன்னைக் கொண்டா.. அதில் கிரீமை நாங்களே தடவிக் கொள்கிறோம் என்கிறார்கள்.
கடை நடத்த முடியவில்லை மேடம். இனிப்புக்கு குறைவாக ஜிஎஸ்டியும், காரத்திற்கு அதிகமாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டியை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை, ஒரே மாதிரியா பண்ணுங்க மேடம். ஒரு ஃபேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டுத் திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள்" எனக் கோரிக்கை வைத்தார். ஏற்கெனவே ஜிஎஸ்டி குறித்து, சிறுகுறு மற்றும் நடுத்தர வியாபாரிகளிடையே பலவிதமான சலசலப்புகள் இருக்கையில், சீனிவாசனின் பேச்சு மொத்த வியாபாரிகளின் மனவேதனையையும் கொட்டி தீர்த்ததை போலானதாகக் கூறப்படுகிறது.
எனவே சீனிவானின் பேச்சுக்கு பெருவாரியான ஆதரவும் கிடைத்தது. சமூக வலைதளத்தில் இவரது பேச்சு பரவலாகப் பகிரப்பட்ட நிலையில் மறுதினம்
செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அது தொடர்பாக ஒரு காணொளி வெளியான நிலையில், சமூக ஆர்வலர்கள் பலரும், "கேள்வி கேட்டால் மன்னிப்பு கேட்கச் சொல்வீர்களா?" எனக் கொந்தளித்தனர்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் பேசின உண்மை மாறாது. அவரின் கேள்வி நாடு முழுவதும் பரவி விட்டதனால் அதிகாரம் அதை பணிய வைக்கிறது. என பலரும் பேசும் நிலை. ஆக இதில் பொது நீதி யாதெனில் எந்த வியாபாரம் செய்யும் நபரும் கை முதலில் ஜி எஸ் டி வரி செலுத்துவதில்லை அதை மக்கள் தான் கட்டும் நிலை அதனால் தான் மக்கள் மத்தியில் பிஜேபி அரசியல் ரீதியாக எடுபடவில்லை என்பதே உண்மை , அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் பேசியது கொஞ்சம் தான் இன்னும் கேள்விகள் அதிகம் உண்டு கேட்டால் பதில் வருமா என்பது எழுவினாஅன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் பேசிய விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் வானதி சீனிவாசனும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கையாண்ட விதம் தான் பேசுபொருளாகிறது.
ஒருவர் உங்க ஹோட்டலில் என்ன சாப்பிடுகிறார் என்பதை இப்படித் தான் பார்ப்பீர்களா?
ஒருவர் என்ன சாப்பிடுகிறார் என்பதை பொதுவெளியில் எப்படிச் சொல்லலாம்?
ஒரு பெண் தலைவர் என்றால், துச்சமாகப் பேசிவிடுவதா?
அவரே தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கேட்டார்.
இதெல்லாம் சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் விளக்கம்..! ஆக பொது வாழ்வில் மக்கள் பிரதிநிதிகள் சில முன்னுதாரணமாக இருக்க வேண்டியது தலையாய கடமை,
தொழில் நடத்துபர்களை அழைத்து குறை கேட்புக் கூட்டம் நடத்துகிறீர்கள்! அங்கே வந்த மத்திய அமைச்சருக்கோ, அதை ஏற்பாடு செய்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கோ கிடைக்காத முக்கியத்துவம் குறைக்கு தீர்வு தேடி வந்தவருக்கு கிடைக்கிறது. அவர் அப்போது பேசியவற்றில் தொடர்ந்து பேசியவர், GST., அலுவலர்கள், இன்புட் கிரெடிட் எடுக்கும் பொழுது, அதே சமையல் அறை, அதே கடலை மாவு, அதே மைதா மாவு, அதே ஸ்வீட் மாஸ்டர் என இருக்கும் பொழுது, அலுவலர்களே திணறுகிறார்கள். உளுந்தம் பருப்பு உற்பத்தி இடத்தில் ஒரு GST விற்பனை ஆகும் போது மொத்த விற்பனை கடையில் ஒரு GST நேரடி விற்பனைக் கடைகளில் ஒரு GST அந்த உளுந்தம் பருப்பு இட்லி ஆகும் போது ஒரு GST இப்போது ஒரு உளுந்தம் பருப்பு இட்லி ஆகும் போது மூன்று GST களைச் சந்திக்கும் போது விலை உயர்வு மக்கள் தலையில் தான் சேர்கிறது என்பது உண்மை. அவர்களுக்கும் உதவி பண்ணுங்க . திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மாதிரி ஏதேனும் நிகழ்வு வரும் போது, வருஷத்துல ஏதாவது ஒரு நாள் தான் ஹோட்டல்களில் ஒரு அறைக்கு 7500 என பில் போடுகிறோம். கூடுதல் பெட் கொடுத்தால் ரூபாய்.1,000 சேர்த்து பில் பண்ணுவோம். அதுவும் தற்போது ஹோட்டல்களின் அறையில் கட்டணங்களை மேக் மை ட்ரிப் தான் முடிவு செய்து நிர்ணயிக்கிறது. ஒரு நாள் 7500 பில் போட்டதற்கு ஆண்டு முழுவதும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., போடுகிறார்கள். இதனை கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும், என்றார். இருந்த நியாயமான உண்மையும், பிரச்சினையின் வலியும் தான் காரணம்!
சூழ்நிலையை சரியாக கையாளத் தெரிந்தால், அவரையும் மீறி நீங்கள் அரசியல் ஆதாயம் அடைந்திருக்கலாம். அதற்கு தலைமைப் பண்பும், பெருந்தன்மையான குணமும் தான் வேண்டும்.
பொது மக்கள் பார்வையில் கிட்டதட்ட 99 சதவீதம் மானவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள். அவர் பேசியதில் உள்ள நியாயத்தையும், அதை நகைச்சுவையாகச் சொல்லிய விதத்தையும் ஒரு வித ரசனையுடன் ஏற்கிறார்கள்.
ஆனால், அவரை மன்னிப்புக் கேட்க வைத்தது அநாகரீகம்!
அதை பகிரங்கப்படுத்தியது அதைவிட அக்கிரமம். என்பதே மக்கள் மத்தியில் நடக்கும் விவாதம்
அந்த அக்கிரமத்தை நியாயப்படுத்தி சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரஸ் மீட் தருவது ஆணவத்தின் உச்சமாக வே பார்க்கப்படுகிறது!
உங்கள் கட்சி நிகழ்வுகளுக்கு எத்தனை முறை சாப்பாடோ, டிபன்,காபியோ, ஸ்வீட் காரமோ அன்னபூர்ணாவில் ’ஸ்பான்சர்’ வாங்கி இருப்பீங்க என பல கட்சிகள் தேர்தல் நேரத்தில் நன்கொடையும் வாங்கி இருப்பீங்க என கட்சி பிரமுகர்கள் பேசுகின்றனர்.. அந்த நன்றி உண்ர்வாவது வேண்டாமா?
அதிகாரத்தில் இன்று இருக்கலாம், நாளை இல்லாமலும் போகலாம். ஆனால், ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்துள்ள ஒரு பாரம்பரியம் கொண்ட தொழில் அதிபர், கொங்கு மண்டல பல லட்சம் வாக்குகள் கொண்ட மக்களின் அன்பையும், மதிப்பையும் ஒரு சேரப் பெற்றவர் உரிமையோடு பேசியதை குதர்க்கமாகப் புரிந்து கொண்டு, தண்டிக்க துணியும் அளவுக்கு அதிகார நிலை தான் காரணம் என்றால், என்ன செய்வது?
உழைத்து முன்னேறிய அன்னபூர்ணா சீனிவாசனுக்கும்,
பிறர் உழைப்பில் வாழும் கொங்கு மண்டல வசூல் நபர்களுக்கும் இருக்கும் தராதரத்தை மக்கள் அறியாமலில்லைகோயம்புத்தூர் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட சம்பவம் பரவலாக விவாதிக்கும் நிலையில் இன்னொரு நிகழ்ச்சி மறக்கப் பட்டது.
நிதியமைச்சர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக சூலூர் சென்றார். அங்கே தான் இறுக்கமான முகத்துடன் சீனிவாசன் குறித்து அதிருப்தி தெரிவித்தார். அவர்
வெளியே வந்த போது அருன் என்ற நபர் செல் போன்களுக்கான செமி கண்டக்டர் ஏன் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகின்றது என வினா எழுப்பியுள்ளார். அதற்கு
நிதியமைச்சர் அரசு குறிப்புகளில் இதுபற்றி உள்ளது. இதைப் படித்து விட்டு டெல்லி வந்து விவாதிக்கும்படி கோபத்துடன் சொல்லிச் சென்றுள்ளார் பின்பு செய்தியாளர்களிடம் வீடியோவை திருத்தவும் சொன்னார்.
நிதியமைச்சர் அங்கிருந்து சென்றதும் காவலர்கள் அந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்ற நிகழ்வு தேவையற்றது.
இது போன்ற கேள்விகள் எழுப்ப ஜனநாயக நாட்டின் குடிமக்களுக்கு தார்மீக உரிமை உள்ளது. அதற்கு பதில் சொல்வது அரசின் அமைச்சரின் கடமை. கேள்வி கேட்பவர்களை இப்படி நடத்துவது சர்வாதிகாரப் போக்காகும்.
இதுதான் உலகமயம் என்று மிக எளிதாக பதில் சொல்லி இருக்கலாம். ஆனால் அமைச்சர் யாரும் கேள்வி கேட்பதை விரும்புவதில்லை போலவே தெரிகின்றது.
அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்புக் கேட்க வைக்கப் பட்டார். செமி கண்டக்டர் இளைஞர் காவல் நிலையத்தில் விசாரிக்கப் பட்டார். இருவருமே எதிரிகள் போலத்தான் நடத்தப் பட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் மதக் கலவரங்கள் நடப்பதால் மக்கள் எல்லோருமே அந்த வகையானவர்கள் என்று இவர்கள் சார்ந்த கட்சியினர் நினைத்து விட்டனர் போலும். கோயமுத்தூரோடு நெருங்க நெருங்க அதன் பலதரப்பட்ட முகங்கள் தெரியும் போது தான் அரசியல் ரீதியாகப் பதறுகின்றனர். இதன் அடிப்படையில் கட்சி சார்பாக பேசிய ஒரு தலைவர்
அவரது அன்னப்பூர்ணா உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறேன். சாதாரணமான இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால் இட்லிக்கு ஒரு விலை வைத்திருக்கிறார். அதே இட்லியை குளிர் சாதன அறையில் உட்கார்ந்து சாப்பிட்டால் ஒரு விலை வைத்திருக்கிறார். இது ஏன்? அங்கே மின்சார செலவு கூடுதலாக வருகிறது. ஆகவே அங்கே இட்லி விலை அதிகமாகிறது. அதைப்போலத்தான் பண்ணும் பிரட்டும் ஏழை எளிய மக்கள் சப்பிடக்கூடியது.ஆகவே அதற்கு ஜிஎஸ்டி இல்லை. அதே பண்ணில் ஒருவர் ஜாம் அல்லது க்ரீம் வைத்துச் சாப்பிட்டால் அவர் ஏழை கணக்கில் வரமாட்டார். அவர் வசதியாக உள்ளதால் தான் கூடுதலாக க்ரீம், பட்டர் வைத்துச் சாப்பிடுகிறார். அதனால் வரி கூடுதல். இதைக் கூட அந்த முதலாளிக்குப் புரியாதா? என முட்டுக் கொடுக்க பலர் வந்து விட்டனர், அதற்குப் பெயர் தான் இன்புட் வரி. எந்த ஏழை பண்ணில் பட்டர் வைத்துச் சாப்பிடுகிறார் சொல்லுங்கள்?இதே அன்னப்பூர்ணா கோயம்புத்தூர் ஆர்.எஸ் புறத்தில் பார் நடத்துகிறது. அங்கே சாதாரண அன்னபூர்ணாவில் விற்கப்படும் உணவின் விலையா விற்கும் நிலை இருக்கிறது? அங்கே ஏன் விலையைக் கூடுதலாக விற்கிறார்கள்? இரண்டும் ஒரே நிறுவனம் தான். விலையை ஒரே மாதிரி போடுங்கள் என்று அவர் கேட்பது போல கேட்க முடியுமா? ஒரு பொருளை வைத்துத்தான் வரி போட முடியும். எல்லா பொருளுக்கும் ஒரே வரியைப் போட முடியாது.
அன்னபூர்ணா உரிமையாளர் அடிப்படைப் புரிதல் இல்லாமல் பேசி இருக்கிறார் என்பதை இப்போது பாஜகவினர் பலரும் கருத்துக்களாகத் தெரிவிக்கிறார்கள். ஆக மக்கள் உணரும் பிரச்சினைகள் தான் அவர் பேசியது
கருத்துகள்