கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வது என்றால், எண்ணிப்பார்த்து மகிழத்தக்க அளவுக்கு லஞ்சமாக கரன்சிகளைக் கொட்டியே ஆக வேண்டும் என்பதே எழுதப்படாத நடைமுறை.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியராஜ், ஆய்வாளர் அருண்ராஜ் மற்றும் துணை ஆய்வுக்குழு அலுவலர் என் ஒரு டீம், இப்படிப்பட்ட திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை சமீபத்தில் நடந்திருக்கிறது.
யோக்கியர்கள் வேடம் கலைந்த நிலையில் பலர் கையைப் பிசைந்தபடி நிற்க.
எந்த கணக்கிலும் வராத ரூபாய் 2,64,000/-
(இரண்டு லட்சத்து 64 ஆயிரம்) கைப்பற்றப் பட்டது.
'சார்- பதிவாளர் வேல்முருகன் (ம) ஊழியர்களிடம் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
"ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை வந்து மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு போய் விடாமல் எங்களைக் காப்பாத்திக் கொடுக்க வேணும்" - என்ற கோரிக்கை முன் வைத்து அதிகாலை பூஜை ஒரு வாரம் அதே அலுவலகத்தில் நடந்திருக்கிறது.
முதல்நாள் பூஜை எலுமிச்சை மூலம்
2 ஆம் நாள் ஊமத்தை மூலம்
3-ஆம்நாள் பூஜை பூசணி உடைத்து
4-ஆம் நாள் கோழி பலி கொடுத்து
5-ஆம்நாள் கிடா வெட்டு என அமர்க்களம் இந்த நிலையில் அதிகாலை பூஜை 6-ஆம் நாள் கொடுக்க வேண்டிய 'பலி கொடுக்கத் தயாரான போது தான் மொத்தமாய் பொலி போட்டிருக்கிறது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையில் வந்த குழு
கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக சோதனைகள் அடித்தும் அதிகபட்சமாக ஆள்களை கையூட்டும் கையுமாகப் பிடித்தும் துணைக் கண்காணிப்பாளர் சத்தியராஜ் முழுவீச்சில் களத்தில் நிற்கிறார் என்கிறார்கள் அவர்கள் வட்டாரத்தில்.
அதோடு என்றில்லாமல் அப்படியே வேறு குழு கடலூரிலும் கால் பதித்த தகவல் இரவில் வந்தது
கடலூர் மாவட்டம், கடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகம் கலெக்சன் விவகாரத்தில் ஏறக்குறைய திருக்கோவிலூர் பதிவு அலுவலகம் போலவே தான் இருந்திருக்கிறது.
கடலூர் மாவட்டத்துக்கும் சேர்த்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும்
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (பொறுப்பு) துணைக் கண்காணிப்பாளராக இதே சத்தியராஜ் தான் இருப்பார் என்று கடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நினைத்திருக்க வாய்ப்பில்லை. துணைக் கண்காணிப்பாளர் சத்தியராஜ், ஆய்வாளர் சுஜாதா குழு அடித்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய். 2,17,000/- ( 2 லட்சத்து 17ஆயிரம்) சிக்கியது.
சார் பதிவாளர் (பொறுப்பு) வேல்விழி மற்றும் பணியில் இருந்த பிற ஊழியர்களிடம் விசாரணை நடந்திருக்கிறது
கள்ளக்குறிச்சி மாவட்ட. லஞ்ச- ஊழல் தொடர்பான புகார்களுக்கு : DSP- 99948 98628 INS - 94981 68555 -office - 04251 294600 e.mail ID : dspkkidvac.tnpol@gov.inதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த தவறுகள், அதிர்ச்சியாகவும் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அதிகம் லஞ்சம் வாங்குவாக புகார்கள் எழுந்தது.. குறிப்பாக, ஆவணங்கள் பதிவு செய்வதற்கு அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தது
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் துணைக் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட அலுவலர்கள், அதிரடியாக பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தினார்கள்.பொதுவாக அலுவலர்கள் சோதனை நடத்தும் போது, மற்றவர்களின் குறுக்கீடும், தலையீடும் இருக்கக்கூடாது. சோதனை நடத்தும் பகுதிகளுக்கும் ஊழியர்கள் யாரும் செல்ல மாட்டார்கள்.. ஆனால், அங்கிருந்த சில நபர்கள் தேவையில்லாமல் குறுக்கு மறுக்குமாக அந்த அலுவலகத்துக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தார்கள் அதைப்பார்த்து சந்தேகமடைந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள், அலுவலகத்திற்குள் நடமாடிய நபர்களையும், அவர்களிடமிருந்த உடைமைகளையும் சோதனை செய்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். பிறகு மறுபடியும் ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருந்தபோதுதான், திடீரென புஸ்ஸ்ஸ் எனச் சத்தம் வந்துள்ளது. எங்கிருந்து சத்தம் கேட்கிறது என சுற்றுமுற்றும் அவர்கள் பார்த்துள்ளார்கள்.அப்போது தான் அந்த காட்சியை கண்டு பதறினர். அலுவலர்களை நோக்கி, ஒரு கண்ணாடி விரியன் பாம்பு, நெளிந்து கொண்டிருந்தது.தைப்பார்த்து பாம்பைத் தாண்டி அவர்களால் ஓட முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால், அப்போது சோதனைக்கு வந்திருந்த அலுவலர் ஒருவர், அங்கிருந்த தடிப்பான அட்டையை எடுத்து, பாம்பின் தலையில் தட்டி அதை மயக்கமடைய வைத்தார் அதன் பிறகு
இந்த விஷப்பாம்பு எப்படி சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் வந்திருக்கும்? என்று தெரியாத நிலையில் சோதனை நடத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரை அச்சுறுத்துவதற்காகவே, கண்ணாடி விரியன் பாம்பை சிலர் ஏவியிருக்கிறார்கள் என அலுவலர்கள் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.ஆனாலும். அதே சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் நான்கு மணி நேரம் சோதனை நடத்தினார்கள்.. இறுதியில், கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம், முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீ தியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது ஆவண எழுத்தராக பணிபுரியும் ஊழியர் ஒருவர், தான் வைத்திருந்த பணத்தை, அந்த அலுவலகத்தின் மதில் சுவர் வழியாக, பக்கத்திலிருக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தூக்கி எறிந்து வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.. அவரையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாம்பு கொண்டு வந்து போட்டது யார் என்பது இதுவரை தெரியவில்லை.
ஆக, ஒருபக்கம் கண்ணாடிவிரியன் பாம்பு.. மறுபக்கம் சுவர் ஏறி குதித்த ஓடிய எழுத்தர்... இதற்கு நடுவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் என ஒரே நாளில் ஏகப்பட்ட பரபரப்புகள் நம்முடைய தமிழ்நாட்டின் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்திருக்கிறது... இந்த விசாரணையின் முடிவில் விடிவு வருமா காலம் பதில் தரும்.
கருத்துகள்