ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தில் பிரசாத் நாயுடு தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் நடத்தவில்லை. கொரோனா பரவல் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதுடன் ஜாதிவாரியான விவரங்களும் சேர்க்கப்படும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதைத் தான்
தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் வலியுறுதுகின்றன. நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வலியுறுத்துகிறார்.
பிரசாத் நாயுடுவின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹரிஷிகேஷ் ராய், எஸ்விஎன் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த போது, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாதெனக் கூறி பிரசாத் நாயுடுவின் பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்ததன் மூலம்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரும் கோரிக்கையை மத்திய அரசின் பக்கமே நீதிமன்றம் திருப்பி விட்டிருக்கிறது. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தனது ஆதரவைக் கடந்த திங்கள்கிழமையன்று தெரிவித்தது.
RSS கொள்கை பரப்புப் பிரிவுத் தலைவர் சுனில் அம்பேகர், இது ஒரு முக்கியமான விஷயம் என்றும், அரசியல் அல்லது தேர்தல் நோக்கங்களுக்காக இதைப் பயன்படுத்தக் கூடாதென்றும் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் ஜாதியினரின் நலனுக்காக இதைப் பயன்படுத்த வேண்டுமென்றார். ஆதிதிராவிடர் (பட்டியல் சாதியினர்) மற்றும் பழங்குடியினரை துணை வகைப்படுத்தும் நடவடிக்கையை ஒருமித்த கருத்தை எட்டாமல் மேற்கொள்ளக் கூடாதென்றும் தெரிவித்தார். வகைப்பாடு விவகாரம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த குழுக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகள் அதில் தெளிவான நிலைப்பாடு எடுப்பதைத் தவிர்த்து வருகின்றன.
எதிர் தரப்பான காங்கிரஸ் கட்சி சார்ந்த இந்தியா கூட்டணி ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முக்கியமான விஷயமாக மாற்றியுள்ள நேரத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் வந்த இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஹிந்து மதத்தின் ஜாதி மற்றும் உறவுகள் ஒரு முக்கியமான விஷயம். இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான முக்கியமான விவகாரம். இது மிகவும் தீவிரமாக கையாளப்பட வேண்டிய விஷயம். தேர்தல் அல்லது அரசியலுக்காக மட்டுமே அதைபா பயன்படுத்தக் கூடாது,” எனக் கூறிய சுனில் அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஆதரவானதா அல்லது எதிரானதா என்பதை நாட்டிற்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு பதிலாக மனுஸ்மிருதிக்கு ஆதரவாக செயல்படும் ஆர் எஸ் எஸ் , ஆதிதிராவிடர் மற்றும், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை-எளிய சமூகத்தின் பங்கேற்பைப் பற்றி கவலைப்படுகிறதா இல்லையா?” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமூக ஊடக தளம் எக்ஸில் பதிவிட்டுள்ளார்.ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஆர்எஸ்எஸ் அமைப்பால் நிறுத்த முடியாது,” என் லாலு பிரசாத் யாதவ் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும்
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், ஆர்எஸ்எஸ் அமைப்பைக் குறி வைத்து தனது எக்ஸ் பக்கத்தில் 4 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
"ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தொடர்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரசங்கக் கருத்துக்கள் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவது, ஜாதிவாரிகா கணக்கெடுப்பைத் தடுக்கும் அதிகாரம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உள்ளதா?"
"இரண்டாவது, ஜாதிவாரிகா கணக்கெடுப்புக்கு அனுமதி கொடுக்க ஆர்.எஸ்.எஸ் யார்? மூன்றாவது, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தேர்தல் பிரசாரத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தக் கூடாதென்று ஆர்.எஸ்.எஸ். சொல்வதன் பொருள் என்ன? அது நீதிபதியா அல்லது நடுவரா?"
"நான்காவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் என்ற வரம்பை நீக்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தின் அவசியம் குறித்து ஆர்எஸ்எஸ் ஏன் மௌனத்தை கடைப்பிடிக்கிறது?"
இதனுடன், “இப்போது ஆர்.எஸ்.எஸ் கிரீன் சிக்னல் கொடுத்துள்ள நிலையில் காங்கிரஸின் இன்னொரு உத்தரவாதத்தை அபகரித்து பிரதமர் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவாரா?” என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.இராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) மூன்று நாள் அகில் பாரதிய சமன்வே பைதக் கேரளாவின் பாலக்காட்டில் தொடங்குகியது. இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் சர்கார்யவா தத்தாத்ரேயா ஹோசபாலே, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், வயநாடு நிலச்சரிவு பற்றிய விவரங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வழங்கிய உதவிகள் குறித்த விவரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது
‘தமிழ்நாட்டில் அதிகளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக ஆர் எஸ் எஸ் குற்றம்சாட்டியது,
கேரளா மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் 3 நாள் நடைபெற்றதில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் முக்கியமாக, நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்கட்சிகளின் வலியுறுத்தலுக்கு மத்தியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேத்கர், “ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினை. இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு முக்கியமானது. இது தீவிரமாகக் கையாளப்பட வேண்டும். சில சமயங்களில், அரசாங்கத்திற்கு அந்த கணக்கெடுப்புகள் தேவைப்படுகின்றன. ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அந்த சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனைப் பற்றி பேசுவதாக இருக்க வேண்டும். இது ஒரு அரசியல் கருவியாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்காகவோ பயன்படுத்தப்படக்கூடாது.
சமீபத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. சமூகத்தின் அனைத்தையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு இது பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு செய்யும்போது சமூக நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு பாதிக்கப்படாமல் இருப்பதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மிஷனரி மூலமாக அதிகளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக பல அமைப்புகள் ஆதார அறிக்கையாக அளித்து வருகின்றன. இது மிகவும் கவலைக்குரியது. வரும் நாட்களில், இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்