அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு
நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்கள் முடிவில் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் அமைச்சரான செந்தில் பாலாஜி, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறைகைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீன் கேட்டு அவரளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்த நிலையில்
ஓராண்டுக்கும் மேல் சிறையிலிருந்து வந்த செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு செய்தார். ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி அந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் நடந்தது.
அமலாக்கத்துறை சார்பில் வாதாடிய சொலிஷ்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வழக்கு சந்தேகங்களைக் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில்
இன்று 26.09.2024 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு.
செந்தில் பாலாஜி திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை யின் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளைக் கலைக்க எந்த விதமான முயற்சிகளும் செய்யக் கூடாது
என்பது உள்ளிட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதுடன் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைக் கைதியாகவே இருப்பதனால், அடிப்படை உரிமை கருதி இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
ரூபாய் 25 லட்சத்துக்கு இரண்டு நபர்கள் உத்தரவாதம் வழங்க வேண்டுமெனவும் நிபந்தனை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரான என்.ஆர் இளங்கோ,
செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க எந்தத் தடையுமில்லை எனக் கூறியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீண்ட காலம் விசாரணையின்றி சிறையிலடைக்கும் கருவியாக, பணமோசடி தடுப்பு (PMLA) பிரிவு 45 போன்ற விதிகளை அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) பயன்படுத்துவதை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் அனுமதிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது பணமோசடி வழக்கில் ஜூன் 2023 ஆம் ஆண்டில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் , அரசியலமைப்பு நீதிமன்றங்கள் அதைச் செயல்படுத்தவில்லை என்றால் இத்தகைய வழக்குகளின் அதிகார வரம்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் விசாரணைக் கைதிகளின் உரிமைகள் தோற்கடிக்கப்படும்.
"அரசியலமைப்பு நீதிமன்றங்கள் PMLA இன் கீழ் வழக்குகளைக் கையாளும் போது மனதில் கொள்ள வேண்டும், சில விதிவிலக்கான வழக்குகளைத் தவிர, அதிகபட்சமாக தண்டனை ஏழு ஆண்டுகள் இருக்கலாம். பிரிவு 45 (1) (ii) போன்ற விதிகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் அனுமதிக்க முடியாது. திட்டமிடப்பட்ட குற்றத்தின் விசாரணை மற்றும் PMLA குற்றம் நியாயமான நேரத்திற்குள் முடிவடையும் சாத்தியமில்லாத போது, நீண்ட காலம் சிறைவாசத்தைத் தொடர அமலாக்கத்துறை (ED) ன் கைகளில் கருவியாக மாற வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது. இன்னும் அதிகமாக மேல்முறையீட்டாளரின் தடுப்புக்காவல் தொடர்ந்தால், அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையை மீறுவதாக அமையும்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
PMLA வின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றம் அல்லது குற்றத்தின் விசாரணை தாமதமானது குற்றம் சாட்டப்பட்டவருக்குக் காரணமாக இருந்தால், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் எப்போதுமே தங்கள் அதிகார வரம்பைப் பயன்படுத்த மறுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். அமலாக்கத்துறை (ED)சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் (SG) துஷார் மேத்தா மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன் ஆகியோர் வாதிட்டனர்.
கருத்துகள்