சென்னை, திருவள்ளூர், கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து. மைசூர் - தர்பங்கா (12578) விரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதி கோரமான விபத்து.
லோகோ பைலட் சிக்னல் வழங்கிய பிறகே புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. தவறான சிக்னல் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியது. இந்த விபத்தில் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் மற்றும் சரக்கு ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டதில்,
தீ பற்றி எரிந்தது. இந்த விபத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மைசூரிலிருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம், தர்பங்காவுக்கு ‘பாக்மதி விரைவு’ ரயில் நேற்றிரவு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அருகில் கவரப்பேட்டையில் சென்று கொண்டிருந்த போது லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியதில், ரயில் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் சில ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் தீப்பிடித்து எரிந்தன. அதனால் விரைவு ரயிலில் பயணித்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
ஆனால் தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகளிலிருந்தவர்களால் வெளியில் வர முடியவில்லை. அரக்கோணம் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளிலிருந்து ஏராளமான ஆம்புலஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
ரயில்வே அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த விபத்து காரணமாக , அந்த வழித்தடங்களில் பல ரயில்கள் ரத்து செய்து நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை உயிரிழப்புகள் குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் மீட்புப் பணிகள் முடிந்த பிறகே முழு விபரம் வெளியாகும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த ரயில் விபத்து
20 பேர் படுகாயம். சிக்கித் தவித்த மற்ற பயணிகள் வேறொரு சிறப்பு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர் எனும் தகவல் அதிகாரப்பூர்வமானதல்ல
மெயின் லைனில் போகிற விரைவு ரயில், லூப் லைனில் போய் நின்று கொண்டிருக்கும் சரக்கு ரயில் மீது மோதும் அளவுக்கு சிக்னல் கோளாறு செய்தவர்கள் யார்?
எத்தனை பேரை வேலை இழந்து வீட்டுக்கு அனுப்பப் போகிறார்கள்? யார்? பொறுப்பேற்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கருத்துகள்