மதுரை விமானநிலையம் அக்டோபர் மாதம். 1 ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும். ஆனால் இரவில் விமானங்கள் இல்லை.
மதுரை விமான நிலையத்தில் ஆண்டுக்கு சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கும் நிலையில் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமென நீண்ட நாளாக கோரிக்கை வரும் நிலையில் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் மூலம் அறிவிக்கப்பட்டாலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இது மதுரை மட்டுமல்லாது மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளான 16 தென்மாவட்ட மக்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்
தற்போது மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படுவதில் ஒரு சிக்கல் ஏழுந்துள்ளது. இரவு நேரத்தில் சேவைகளுக்கு எந்த விமான நிறுவனமும் போக்குவரத்து துவங்க தற்போது வரை முன் வரவில்லை என நிலைய இயக்குனர் முத்துக்குமார் தெரிவித்தார். மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் சேவையில் இரவில் எந்த ஒரு விமான நிறுவனமும் சேவை துவங்க முன் வராத காரணத்தினால் வழக்கம் போல் காலை 7 மணி முதல் 8.35 மணி வரை சேவை தொடரும்.
விமான நிலைய இயக்குனர் தகவலின் படி, குளிர் கால அட்டவணையின் போது அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி புதிய விமான நிறுவனங்கள் மற்றும் புதிய சேவைகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையம் இரவு நேர சேவைகளுக்கு கூடுதலாக 50 சி ஐ எஸ் எப் வீரர்கள் மட்டுமே தற்போது வரை வந்துள்ளதாகவும் விமான நிறுவனங்கள் அழைப்பு விடுத்தவுடன் கூடுதல் வீரர்கள் வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது இரவு நேரங்களில் தனியார் விமானங்கள் மற்றும் தனிநபரின் விமானங்கள் இறங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் இயக்குனர் முத்துக்குமார் கூறினார்.
கருத்துகள்