ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரித் தண்டலர் கைது!
சேலம் அஸ்தம் பட்டி மாநகராட்சி ஐந்தாவது மண்டல அலுவலகத்தில் வரித்தண்டலராகப் பணி செய்பவர் ராஜா. மிட்டாபுதூர், ஆண்டிச்சிநகர் சண்முகம் மகன் ராஜு (வயது 33) அவரின் புதிய வீட்டுக்கு சொத்து வரி விதிப்பு ரசீது வழங்கும்படி ராஜாவிடம் ஆவணங்களின் தகவல்களைக் கொடுத்தார். ரூபாய் 35 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்தால் தான் ரசீது தரமுடியும் என ராஜா கூறிய நிலையில் இறுதியாக முப்பதாயிரம் ரூபாய் தந்தால் ரசீது தருவதாக பேரம் முடிந்துள்ளது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜூ அதுகுறித்து சேலம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தெரிவித்தார். அவர்கள் ஆலோசனை படி ராஜூ கொண்டு வந்து வழங்கிய பணம் பினாப்தலின் இரசாயனம் அரசு சாட்சிகள் முன்னிலையில் தடவிய 30 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ராஜூவிடம் திருப்பிக் கொடுத்து சாட்சிகள் உடன் அனுப்பினர்.ரூபாய் 30 ஆயிரம் லஞ்சப் பணத்தை ராஜு, வரித்தண்டலர் ராஜாவிடம் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ராஜாவை லஞ்சம் பெற்ற கையுடன் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் லஞ்சப் பணத்தையும் மீட்ட நிலையில் சோடியம் கார்பனேட்டு கரைசலில் அவர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
கருத்துகள்