அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து செய்யப்படலாம் எனவும் அதற்கு தக்கபடி விசாரணை ஒத்திவைப்பு எனவும் தகவல்கள் வருகின்றன,
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரண்டாவதாக சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட்டார்.
அரசு வாகனத்தில் வராமல் தனிப்பட்ட வாகனத்தில் பாதுகாவலர் இல்லாமல் வந்து அவர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில் காத்திருந்த நிலையில் ஜாமீன் கையெழுத்திட்டார். கடுமையான ஜாமீன் நிபந்தனை உள்ள நிலையில்
தமிழ்நாடு அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜி வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பலத்த பாதுகாப்பு காவல் துறையினரால் .போடப்பட்டது. காலை 10:45 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார் உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைப்படி கையெழுத்திட்டுச் சென்றார் ஆனால் இந்த நிலையில்.
அமைச்சர் பதவியால் நிபந்தனை மீறிய செந்தில் பாலாஜிக்கு ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது!
ஏற்கனவே செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை எனவே சாட்சிகளைக் கலைக்கமாட்டார் என ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தது.
உச்ச நீதிமன்றம், வழங்கிய நிபந்தனையில் வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், வழக்கின் சாட்சியங்களைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும், மாதத்தின் முதல் சனிக்கிழமையில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்தது.
ஜாமீனில் வெளி வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி சிறை செல்வதற்கு முன்பு வகித்த அதே இலாகாக்களுக்கு மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் ஏற்று, தலைமைச் செயலகம் சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்புகளை ஏற்ற நிலையில், நேற்று செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை ஓராண்டுக்குள் முடிக்க உத்தரவிடக் கோரிய தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் முக்கிய வாதம் ஒன்றை முன்வைத்தார். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை எனவே சாட்சியைக் கலைக்கமாட்டார் என்று தான் மாண்பு மிகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் தற்போது நிபந்தனை மீறிய செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டார். எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரினார். அதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஓஹா, அப்படி என்றால் ஜாமீனை மறு பரிசீலனை செய்வதற்கு புதிதாக தனியே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுங்கள் எனத் தெரிவித்தார். செந்தில் பாலாஜி வழக்கை பிரத்யேகமாக விசாரிக்கும் சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டுமென்று மூத்த வழக்கறிஞர் எஸ். குரு.கிருஷ்ணகுமார் கோரினார். அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே, மோசடி செய்த செந்தில் பாலாஜியை மட்டும் ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? ஊழல் செய்துள்ள மற்ற அமைச்சர்களும் உள்ளனர் எனத் தெரிவித்தார். அதற்கு நீதிபதி ஓஹா, இதைப் பற்றி அரசு கவலைப்படக் கூடாது. இந்த வழக்குக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று அரசு கூற வேண்டும் என்றார். அதற்கு அரசு வழக்கறிஞர் நபாடே, அதில் சிரமம் ஒன்றுமில்லை. மற்ற அமைச்சர்கள் அதற்கு மகிழ்வார்கள் எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி ஓஹா, "அமைச்சர்களுக்கு எதிராக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை அடுத்த வாய்தா தேதியில் சுட்டிக்காட்டுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதைச் சொல்லுங்கள். இதே போன்ற உத்தரவை பிறப்பிக்கலாம்." எனத் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பணிச் சுமை அதிகமாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா? இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி தொடர்புடைய இந்த வழக்கு விசாரணையை விரைவாகக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி ஓஹா உத்தரவிட்டார்.தமிழ்நாட்டில் எத்தனை அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன?' -என உச்சநீதிமன்றம் வினா எழுப்புகிறது ! ஒரு அமைச்சர் நேர்முகப் போட்டித் தேர்வில் செட்டிங் செய்து அரசு வேலை வாங்கித் தருகிறேன் என அவரது தம்பி மற்றும் உதவியாளர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 30,000 நபர்களிடம் ஒவ்வொரு வரிடமும் தலா மூன்று லட்ச ரூபாய் என்று 960 கோடி வசூல் செய்திருக்கிறார்கள், இதில் பணம் லஞ்சமாகக் கொடுத்த வாங்கிய இருதரப்பினரும் சட்டபூர்வ குற்றவாளிகள் தான்
கருத்துகள்