கர்நாடக மாநிலத்தின் முதல்வா் சித்தராமையாவின் மனைவி பார்வதி முடா அமைப்பிற்குக் கடிதம்
எழுதியுள்ளார். தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் திருப்பி தருவதாகத் தெரிவித்துள்ள பார்வதி, முடா தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தனது மனைவிக்கு சொந்தமான இடத்தை முடா வாரியம் எடுத்துக் கொண்டதாகவும் அதற்கு இழப்பீடாகவே இந்த 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதாகவும் முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இருப்பினும், முடா வாரியம் எடுத்த நிலத்தின் மதிப்பிற்கும் இழப்பீடு வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பும் வித்தியாசம் இருப்பதாகக் கூறிய கர்நாடக மாநிலத்தின் உயர்நீதிமன்றம் இதில் விசாரணை நடத்தத் தடையில்லை எனத் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை இப்போது லோக் அயுக்தா சார்ந்த காவல்துறை விசாரித்து வருகிறது. இதற்கிடையே திங்கள்கிழமை அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது. அமலாக்க துறை ஏற்கனவே பல ஊழல் புகார்களைப் பல மாநில முதல்வர்கள், அமைச்சர்களைக் கைது செய்திருந்தன. இதனால் அவர்கள் தங்களது பதவிகளையும் இழக்க நேரிட்டது. இப்போது சித்தராமையா கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டால் எங்கு அவர் மீதும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமோ என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கவலைப் படுகிறார்கள்.
இந்தச் சூழலில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி முடா அமைப்பிற்குக் கடிதம் எழுதியுள்ளார். தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் திருப்பி தருவதாகத் தெரிவித்துள்ள பார்வதி, முடா தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேசரே கிராமத்திலுள்ள தனது 3.16 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக விஜயநகர் 3 மற்றும் 4ஆம் கட்டங்களில் தனக்கு ஒதுக்கப்பட்ட 14 மனைகளை திரும்ப முடா வாரியத்தற்கு ஒப்படைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள கடிதத்தில் "மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எனக்கு வழங்கிய 14 மனைகளின் பத்திரங்களை இரத்து செய்து, இழப்பீட்டைத் திருப்பித் தர விரும்புகிறேன். இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவும். திடீரென இந்த முடிவை ஏன் எடுத்தீர்கள் என்ற கேள்வி எழலாம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் குற்றச்சாட்டுகள் எழுந்த அன்றே இந்த முடிவை நான் எடுத்து விட்டேன். ஆனால், முடா ஒதுக்கீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதால், அதற்கு எதிராகப் போராட வேண்டுமே தவிர சரணடைந்தது விடக்கூடாது எனச் சில நலன் விரும்பிகள் அறிவுறுத்தியதன் காரணமாகவே அப்போது நான் இடத்தை திருப்பி தரவில்லை எனது கணவர் மாநில முதலமைச்சரான சித்தராமையா, தனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நெறிமுறைகளோடு. எந்தவொரு கறையுமில்லாமல் பொது வாழ்க்கையில் இருந்துள்ளார். என் கணவரின் மானம், கண்ணியம் மற்றும் மன அமைதி என்பது அனைத்தையும் விட முக்கியமானது.
இத்தனை ஆண்டுகள் ஆட்சியிலிருந்த பிறகும், எனக்கோ என் குடும்பத்துக்கோ ஆதாயம் தேடவில்லை. இது நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு.அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் நான் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து உங்கள் அரசியல் லாபத்திற்காக குடும்பப் பெண்களைத் தேவையில்லாமல் இதில் இழுக்க வேண்டாம்" என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்