இந்தியாவில் மும்பையில் வாழ்ந்த பிரபலமான தொழிலதிபர் ரத்தன் நேவல் டாடா 88 வயது வயதில் காலமானார்
இந்தியத் தொழிலதிபர் மற்றும் பரோபகாரர், 1990 ஆம் ஆண்டு முதல் முதல் 2012 ஆம் ஆண்டு வரை டாடா குழுமம் மற்றும் டாடா சன்ஸ் தலைவராகவும் , பின்னர் அக்டோபர் 2016 ஆம் ஆண்டு முதல் முதல் பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு வரை இடைக்காலத் தலைவராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்ற பின்னர் 2008 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருது பெற்றார் டாடாவுக்கு திருமணம் ஆகவில்லை, குழந்தைகளும் இல்லை. டாடா தனது 86 வது வயதில் 9 அக்டோபர் 2024 ல் மும்பையில் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார்.
28 டிசம்பர் 1937 அன்று பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் பம்பாயில் , ஒரு பார்சி ஆகிய பாரசீக பூர்வீக வழிவந்த ஜோராஸ்ட்ரியன் குடும்பத்தில் பிறந்த ரத்தன் டாடா. சூரத்தில் பிறந்து பின்னர் டாடா குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாடாவின் மகனாவார் . மற்றும் டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் மருமகள் சூனி டாடா . டாடாவின் உயிரியல் தாத்தா, ஹோர்முஸ்ஜி டாடா, டாடா குடும்பத்தில் உறுப்பினராவார். 1948 ஆம் ஆண்டில், டாடாவுக்கு 10 வயதில், அவரது பெற்றோர் பிரிந்தனர், பின்னர் அவர் நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்டு தத்தெடுக்கப்பட்டார், அவரது பாட்டி மற்றும் ரத்தன்ஜி டாடா அவருக்கு ஒரு இளைய சகோதரர் ஜிம்மி டாடா மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா , நேவல் டாடாவின் இரண்டாவது திருமணமான சிமோன் டாடாவுடன் அவர் வளர்ந்தார்.
ரத்தன் டாடா காலமானதும் உடனடியாக இந்தியாவின் டாப் தொழிலதிபர்களின் ஒருவரான ரத்தன் டாடா இன்று காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டாடா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில்:-, தனது அளவிட முடியாத பங்களிப்புகள், பணிகள் மூலம் டாடா குழுமத்தை மட்டுமல்ல, நமது தேசத்தின் கட்டமைப்பையும் வடிவமைத்த சிறந்த அசாதாரணமான தலைவரான ரதன் நேவல் டாடா நம்மை விட்டு பிரிந்தார். அவரின் இழப்பின் காரணமாக ஏற்பட்ட கனத்த உணர்வோடு அவரிடம் இருந்து விடைபெறுகிறோம்.
டாடா குழுமத்திற்கு, டாடா ஒரு தலைவராக இருந்தார். எனக்கு, அவர் ஒரு வழிகாட்டி, ஆலோசகர். அது மட்டுமல்ல அவர் என் நண்பர். அவர் எனக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். அவரின் சிறப்பான செயல்பாடு, ஒருமைப்பாடு மற்றும் புதுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காரணமாக டாடா நிறுவனம் புதிய உச்சத்தை அடைந்தது.
டாடா குழுமம் அவரது அசாத்திய பணிகளின் கீழ் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தியது. உலக அளவில் டாடா குழுமம் பரந்து விரிந்த அதே நேரத்தில் அந்த நிறுவனம் திசை மாறாமல். அதன் நோக்கத்திற்கு எப்போதும் உண்மையாக இருந்தது.
சமூகத்தின் வளர்ச்சிக்காக டாடாவின் அர்ப்பணிப்பு, அவர் மேற்கொண்ட தொண்டுகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைத் மாற்றி உள்ளது. கல்வி முதல் சுகாதாரம் வரை, அவரது முன்முயற்சிகள், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலரின் வாழ்க்கையை மாற்றி உள்ளது. பலரின் வாழ்க்கையில் டாடாவின் அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளன. அவை வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பயனளிக்கும்.
அவர் தான் செய்த ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும், தன்னுடைய பணிவான பிணைப்பை வெளிப்படுத்தினார். முழு டாடா குடும்பத்தின் சார்பாக, அவருடைய அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் ஊக்குவித்த கொள்கைகளை நிலைநிறுத்த நாங்கள் பாடுபடுவோம். அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம், என்று டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரானவர். ஒவ்வொரு நாளும், நான் லஞ்ச ஊழல் செய்யவில்லை என்ற நிம்மதியோடு தான் இரவு படுக்கைக்குச் செல்ல விரும்புகிறேன்,'' என்பதே ஊழலுக்கு எதிரான ரத்தன் டாடாவின் நிலைப்பாடாக இருந்துள்ளது. அவர் 2010 ஆம் ஆண்டில் அளித்த ஒரு நேர்காணலில் லஞ்ச ஊழல் பற்றி மற்றொன்று தொழிலதிபருடன் நடந்த உரையாடலைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தொழிலதிபர், 'வியாபார ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் ஒருவருக்கு நீ்ங்கள் 15 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தால் போதும்' என்று ஆலோசனை கூறியள்ளார் அதற்கு டாடா மறுப்பு தெரிவித்துள்ளார்.அப்போது அந்தத் தொழிலதிபர், 'இப்போதுள்ள நடைமுறையில் லஞ்சத்தை நீங்கள் எப்படித் தவிர்க்க முடியும்' எனக் கேட்டுள்ளார். அதற்கு டாடா, 'அதெல்லாம் சுய ஒழுங்கும் கட்டுப்பாடும் இருந்தால் போதும்; லஞ்சத்தை தவிர்த்து நிறுவனங்களை நடத்த முடியும். அவையெல்லாம் லஞ்சம் கொடுத்துப் பழகி விட்ட உங்களுக்குப் புரியாது', 'நான் இதுவரை லஞ்ச ஊழல் என்னும் தவறை செய்ய வில்லை' என்று டாடா கூறியுள்ளார்.
இந்தியாவில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மரணம் அடைந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று 9 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் உடல்நிலை சரியாக இருப்பதாகக் கூறி இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் பரவிய வதந்திகளை நான் அறிவேன், மேலும் இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன். இதை பற்றி கவலைப்பட எந்த காரணமும் இல்லை. நான் நல்ல உடல் மற்றும் மனநிலையுடன் இருப்பதோடு, பொதுமக்களும் ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று கூறி இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தான் ரத்தன் டாடா உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயோதிகம் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நீண்ட நாட்களாக வயோதிகம் காரணமான அவரின் மரணத்திற்கு வேறு முக்கியமான நோய் காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரின் மறைவிற்கு உலகம் முழுக்க பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதைகளுக்குப் பின்னர் பார்சிகளின் பாரம்பரிய ஈமச்சடங்கு ரத்தன் டாடாவுக்கு நடக்க இருக்கிறது உடலை எரிக்கவோ அல்லது புதைக்கவோ மாட்டார்கள் பறவைகளுக்கு உணவாக வழங்கும் முறை தான் பாரசீக மக்கள் முறையாகும். இது கேட்பதற்கு வினோதமாக இருக்கலாம் ஆனால் இந்த முறையில் பறவைகளுக்கு உணவளிப்பதன் மூலம் அவர்கள் புண்ணியங்களை பெற்றனர். இறந்தும் பறவைகளுக்கு உணவானதால் அவர்களின் மறுவுலக வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று நம்பப்பட்டது. இதில் ஆகச்சிறந்த சுவாரஸ்யம் என்னவெனில் பறவைகள் ஒருபோதும் சடங்குகள் செய்பவர்களை தாக்காது.
கருத்துகள்