இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மூன்று நாட்டு பயணத்தின் முதல் கட்டமாக அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் நகருக்கு சென்றடைந்தார்.
அல்ஜீரியாவுக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். விமான நிலையத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரை அல்ஜீரியாவின் ஜனாதிபதி அப்தெல்மட்ஜிட் டெபோன், சிறப்பான முறையில் வரவேற்றார்.
அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்களும் உடனிருந்தனர். இந்தியக் குடியரசின் தலைவருக்கு அந்த நாட்டின் சம்பிரதாய ரீதியிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கருத்துகள்