அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
அவர் அமைச்சராக இருந்த காலத்தில், சென்னை பெருங்களத்தூரில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூபாய்.28 கோடியை லஞ்சமாகப் பெற்றதான புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அவரது இரண்டு மகன்கள், உள்ளிட்ட 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் (PMLA) நடந்ததாக வந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர்
நேற்று சோதனை நடத்தினார்கள். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திலுள்ள உறந்தைராயன்குடிகாட்டிலுள்ள வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் நேற்று சோதனை நடத்தினார்கள். அதே போல் சென்னையில் வைத்திலிங்கம் வசிக்கும் அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதி வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். வைத்திலிங்கத்திற்குச் சொந்தமான மொத்தம் நான்கு இடங்களில் சோதனை நடந்தது.
மேலும் இளங்கோவன், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சங்கத் தலைவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவையின் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகிக்கிறார். தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கி சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவருக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறியில் MIT பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வேளாண்மை மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இங்கும் அமலாக்கத்துறை அலுவலர்கள் நேற்று காலை முதல் சோதனை நடத்தினார்கள்.
இது குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிமுகவை தங்கள் பக்கம் நகர்த்திக் கொண்டு வருவதற்காகவே பாரதிய ஜனதா கட்சி இந்த சோதனைகளைத் துவங்கியுள்ளதாகவும் பலர் பேசுவதும் அறியலாம். முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தீவிர 0.பன்னீர் செல்வம் ஆதரவாக தற்போதுள்ளார், தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடந்த தேர்தலில் இரண்டு லட்சம் வாக்குகள் வாங்கித் தந்தவர். அப்படி இருக்க இந்த சோதனைகளை மக்களை வேறு விதமாகவை பார்க்க வைக்கிறது,
அதிமுக யார் பக்கம்? என்பது டிசம்பர் மாதத்தில் நடக்கும் அதிமுகவின் பொதுகுழுவில் தெரியும்! அதற்கு முன்னர்
எடப்பாடி கே பழனிச்சாமியின் எதிர் கோஷ்டிகள் பல நடவடிக்கைகளை தயார் செய்து வருகிறது! இது உண்மையில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தானா அல்லது அரசியல் சார்ந்ததா என்ற குழப்பத்தில் மக்கள் இருந்தாலும், அக் கட்சியினர்வி.கே.சசிகலா நடராஜன் வரவை எதிர்நோக்கி காய் நகர்த்தி வருகின்றனர்.
காலம் கடந்தால் உண்மை வரும். சேலம் இளங்கோவனும் ஒரத்தநாடு வைத்தியலிங்கமும் ஒரு ஹோட்டலில் சந்தித்து பேசினார்களாம் இது ரூமர் அதனால் தான் சோதனையாம் அடுத்து வேலுமணி அண்ணன் அன்பரசன் வடவள்ளி சந்திரசேகர் ஆகியோர் மீது நடவடிக்கை வரும் போல தெரிகிறது கட்சி ஒற்றுமை பாஜக கூட்டணி ஆட்சி, நிர்மலா சீதாராமன் துணைமுதல்வராம் இது பாரதிய ஜனதா கட்சியின் திட்டமாக இருக்கும்,ஒத்துப்போகாத ! நிலை இனி வராது என்பது தான் கட்சியினர் மத்தியில் பேச்சு.
கருத்துகள்