பிரபல மலையாள மூத்த நடிகர் டி.பி மாதவன் வயது 88 நேற்று முன்தினம் முதுமை காரணமாக காலமானார்.
அவர் நடித்த தமிழ் திரைப்படம் முதல்வனில் ஊழல் அரசியல் தலைவராக நடித்த டி.பி.மாதவன் 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் இராஜ்யம் திருவனந்தபுரத்தில் டாக்டர் என்.பி.பிள்ளை மற்றும் சரஸ்வதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவருக்கு நாராயணன் என்ற சகோதரனும் ராதாமணி என்ற சகோதரியும் உண்டு, இவரது தந்தை கேரளா பல்கலைக்கழகத்தின் டீனாக பணியாற்றியவர் . மாதவன் ஒரு இலக்கியவாதி பி.கே.நாராயண பிள்ளையின் பேரனும் நாடக ஆசிரியருமான டி.என்.கோபிநாதநாயரின் மருமகனுமாவார் . ஆக்ரா பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார் .
மாதவன் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார் , ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு கையில் காயம் ஏற்பட்டு விடவே வெளியேறினார். பின்னர் பம்பாயில் இந்தியன் எக்ஸ்பிரஸில் பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கினார் , மாதம் ரூபாய்.175 சம்பளம் பெற்றார். பின்னர் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார் , அங்கு அவர் ரூபாய்.400 சம்பள உயர்வுடன் ஒரு விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். இறுதியில், கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தார் , இது அவரது திரைப்படத் துறையில் நுழைவதற்கு வழி வகுத்தது. தனது 50 வருட திரையுலக வாழ்க்கையில் கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர், மலையாள நடிகர் சங்கத்தில் முதல் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு கேரளாவில் பத்தினாபுரத்திலுள்ள ஆதரவற்றோர் புகலிடமான காந்தி பவனில் வாழ்வைக் கழித்தார்
1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டங்களில் மலையாளத் திரைப்படங்களில் 600 க்கும் மேற்பட்டவைகளில் நடித்தவர். 1960களில் ஆங்கில பத்திரிகைகளில் வேலை பார்த்த இவர் தன்னுடைய 40 வயதில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த ராகம் என்னும் மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்தவர் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். மலையாளத் திரையுலகின் நடிகர் சங்க அமைப்பான அம்மாவின் (AMMA) முதல் பொதுச் செயலாளராவார் பதவிக் காலத்தில் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்தார். டி.பி. மாதவனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாலிவுட் இயக்குனர் ராஜா கிருஷ்ண மேனன் இவரது மகன் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக 30 வருடங்களுக்கு முன்பே மகன் இரண்டரை வயதில் குடும்பத்தினர் பிரிந்தனர். மகனைப் பார்ப்பது அவரது கடைசி ஆசையாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமலேயே அவர் இறந்து விட்டார். இந்த நிலையில் இத்தனை வருடங்களாகப் பிரிந்திருந்த அவரது மகன் ராஜா கிருஷ்ண மேனனும் அவரது தங்கை தேவிகாவும் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டி.பி மாதவனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். திரைப்பட வாய்ப்புக் குறையத் தொடங்கும் பொழுது தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வந்தார். ஆனால் இவருக்கு திடீரென ஞாபக மறதி நோய் (செலக்டிவ் அம்னீஷியா) ஏற்பட்டதனால் 2015 ஆம் ஆண்டு முதல் தனியே வசித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியினால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 88 வயதில் தனி அறையில் இருக்கும் பொழுது இயற்கை எய்தினார். இவரது இறப்பு திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள்