ஹிந்து பக்தர்கள் பக்தியோடு மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து இருமுடி கட்டி சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க சபரிமலை செல்லும் பக்தர்கள் இனி விமானத்திலும் இருமுடி எடுத்துச் செல்லலாம் என சுற்றறிக்கை பிறப்பித்தது.
இதுநாள் வரை பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மகரவிளக்கைத் தரிசிக்க சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல 20.1.2025 ஆம் தேதி வரை அனுமதி வழங்கி மத்திய அரசு தற்போது சுற்றறிக்கை பிறப்பித்தது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் மாதம் 15-ஆம் தேதி திறக்கப்படுகிறது. அன்று புதிய மேல்சாந்திகள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி மஹர் சங்கராந்தி அன்று நடைபெறுமென திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில்
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நடப்பு நடை திறப்பை யொட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தற்போது முதல் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வரை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜை சமயத்தில் மட்டுமே சிறப்பு சலுகை செல்லுபடியாகும். பிற பூஜை காலங்களில் இந்த அனுமதி கிடையாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள்