நடிகர் ரஜினிகாந்த் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை எடுத்த நிலையில்
24 மணி நேரம் ஐசியூ பிரிவில் இரண்டு நாட்கள் இருப்பார் என அப்பல்லோ மருத்துவமனை தகவல்
நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உணவு செரிமானப் பிரச்சனை, மற்றும் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளித்ததனர், விரைவில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு ரத்தநாளத்தில் அடைப்பிருப்பதாக தகவல் வெளியானது. 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான அதிநவீன ஆஞ்சியோ தெரபி சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் அவருக்கு ஆஞ்சியோபிஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
24 மணி நேரம் ஐசியூ-வில் இருப்பார். அதன்பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியது. மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியானது நடிகர் ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்துக்கு இதயத்திலிருந்து உடல் முழுமைக்கும் தூய ரத்தத்தைக் கொண்டு செல்லும் "அயோர்ட்டா" எனும் மகா தமனியில் அனியூரிசம் எனும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அனியூரிசம் என்பது தமனியின் சுவர்களில் தளர்ச்சி ஏற்படுவதால் ரத்த ஓட்ட அழுத்த மிகுதியால் புடைப்பு அல்லது வீக்கம் ஏற்படுவதன் விளைவாக அதீத ரத்த அழுத்தத்தின் காரணமாக அந்த பாதிப்புக்குள்ளான வீக்கம் ஏற்பட்ட பகுதியில் பிளவுற்று ரத்தப் போக்கு ஏற்படலாம். நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த அநியூரிசத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அதற்காக உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு ரத்த நாளம் வழியாக கேதிடர் எனும் வளைந்து கொடுக்கும் குழாய் போன்ற கருவியை உள்செலுத்தி மகா தமனியில் வீக்கம் ஏற்பட்டுள்ள பகுதிக்கு கேதிடரை கொண்டு சென்று அங்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டுள்ளது. அனியூரிசம் ஏற்பட்டுள்ள பாதிப்புக்குள்ளான பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஸ்டெண்ட் புகுத்தப்பட்டு பாதிப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு TEVAR என்று பெயர். அதாவது ஆங்கிலத்தில் THORACIC ENDOVASCULAR AORTIC REPAIR. சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல்நிலையில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த சிகிச்சையானது ரத்த நாளம் வழியாகவே கேதிட்டரை உள்செலுத்தி செய்யப்பட்டுள்ளமையால் இரண்டு நாட்களில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்குச் செல்வார் என தெரிவித்துள்ளனர்..
இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
கருத்துகள்