முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழனியில் தமிழ்ப் பரம்பரை ஆண்டிப் பண்டாரங்களைத் தடுத்து பூஜை செய்து பஞ்சம் பிழைக்கும் இடைக்கால ஆரியப் பஞ்சகச்சங்கள்

பழனியில் தமிழ்ப் பரம்பரை ஆண்டிப் பண்டாரங்களைத் தடுத்து பூஜை செய்து பஞ்சம் பிழைக்கும் இடைக்கால ஆரியப் பஞ்சகச்சங்கள்.   


பண்டா என்றால் சமஸ்கிருதப்படி கரூவூலம் பண்டாரம் என்றால் நிதியாளர். அதனால் தான் கிராமத்தில் இன்னும் பண்டாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். சோழநாட்டில் இருந்து நாடுகடத்தப்பட்ட கம்பர் வழி வந்த உவச்சர்கள் என்று அழைக்கப்படும் பட்டர்கள் காளி கோவில் பூஜைக்கு பாண்டிய மன்னர் காலத்தில் நியமித்த வரலாறு உண்டு,

அதுபோல அய்யனார் கோவில் மற்றும் கருப்பர் கோவிலில் குலாலர் எனும் மண் பாணடம் செய்துவந்த  வேளார்கள் பூஜை செய்து வரும் நிலையும் அப்போது இருந்துவரும் முறைதான், அதுபோல முருகன் கோவில் பூஜை என்பது ஆண்டிப்பண்டாரங்கள் வழி வந்தவர்களே நடத்திய நிலையில். பழநி கோயிலில் கைங்கரியம் செய்யும் மிராஸ் பண்டாரங்களை தடுக்க முயற்சியாபழநி முருகனுக்கு பரம்பரை பரம்பரையாக திருமஞ்சன கைங்கரியம் செய்துவரும் மிராஸ் பண்டாரங்களை அறநிலையத்துறை தடுப்பதாக பாரதிய ஜனதா கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது.

பழநி கோயிலில் சுவாமிக்கு தினமும் திருமஞ்சன கைங்கரியம் நடக்கிறது. இதற்கென 64 பேர் உள்ளனர். வரதமாநதி அணையிலிருந்து புனித நீரை தலையில் சுமந்து படிப்பாதை வழியாக வந்து தினமும் அபிஷேகம் செய்வது இவர்கள் பணி. இவர்களுக்கு மாத ஊதியம் கிடையாது. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளே வருமானம்.சமீப காலமாக இவர்களை தடுக்கும் முயற்சியில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபடுவதாக பா.ஜ., வினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.பழனி மலைக் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் குடமுழுக்கு நடந்தது. சொல்லப் போனால் பழனி மலை கோயில் பிராமணர் அல்லாத பண்டாரங்களின் கட்டுப்பாட்டில் சித்தர்களின் வழி வந்த கோவில் தான்.


மதுரையில் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக திருமலை நாயக்கர் ஆட்சி செய்த போது அவரது படைத் தளபதியாக இருந்த தளவாய் ராமப்பய்யர் எனும் பிராமணர் பழனி மலைக் கோவிலுக்கு வழிபடச் சென்ற போது. அங்கே பிராமணரல்லாத தமிழ் வழிப் பண்டாரங்கள் பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்வதைப் பார்த்து  அவர் மனம் கொதித்த நிலையில் அவர்களிடமிருந்து திருநீறு வாங்கிக் கொள்வதற்கும் மறுத்தார், உடனடியாக மதுரைக்குத் திரும்பி பண்டாரங்கள் அத்தனை பேரையும் பணியிலிருந்து நீக்கி இனி பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக வேண்டும் என் உத்தரவிட்டார்.

வழக்கமாக ஆகம விதிப்படி பண்டாரங்கள் வழிபாடு நடத்தி வந்த கோவிலில், ஆகமங்களை மீறி பிராமணர்கள் மதுரை பாண்டிய நாட்டில் தெலுங்கு திருமலை  நாயக்கர் ஆட்சிக் காலத்தில் திணிக்கப்பட்டார்கள். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குள் 1646 ஆம் ஆண்டு இந்த தாமிரப் பட்டயம் செதுக்கப்பட்டு உள்ளது.

ஒரு கட்டத்தில் மூலிகைகளால் செய்யப்பட்ட பழனி முருகன் சிலையை நவபாஷாணம் காரணமாக சுரண்டித் திருடி பல சித்த வைத்தியர்கள் மருந்துக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். சிலை சிதைந்து போன நிலையிலிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திரர்  அங்கு ஐம்பொன்னாலான சிலையை நிறுவி மூலிகைகளால் செய்யப்பட்ட முருகன் சிலையை வழிபாடு இல்லாமல் அகற்றி சித்தர் மரபைச் சிதைக்க ஏற்பாடுகளை தன்னிச்சையாகவே செய்தார்.


முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் அதற்கான முழு உரிமையையும் அவருக்கு வழங்கியது தான் காரணம், அந்தக் கோவிலுக்குள் இப்போதும் சித்தருக்கு வீடு இருக்கிறது. புலிப்பாணிச் சித்தர் அங்கிருந்தார். மூலிகைகளால் ஆன முருகன் சிலையை அகற்றிவிட்டு ஐம்பொன்னாலான முருகன் சிலையை வைப்பது என்பது ஆகமத்திற்கு சித்தர் போகர் செய்து வழிபாடு செய்த சிலையை அதே  வழியில் புலிப்பாணி சித்தர் வழி வந்த பண்டாரங்கள் பழனி கோவில் வழிபாட்டு பாரம்பரிய வரலாறு உண்டு அது தற்போது வழிபாடு செய்துவரும் முறைக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.  ஒரு கட்டத்தில் சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயந்திரரிடம் அவர் வாதம் செய்தார். காஞ்சிபுரம் சென்று நேரில் எதிர்ப்பு தெரிவிக்க வந்த போது அவரை சமமாக அமர வைக்காமல் நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருந்த மடாதிபதி ஜெயேந்திரர். அந்த ஆணவம் நீக்க உடனே தன்னுடைய காரில் தான் கொண்டு வந்திருந்த இருக்கையைக் கொண்டு வரச் சொல்லி மடாதிபதி ஜெயேந்திரரக்கு இணையாக இருக்கையில் சமமாக அமர்ந்து சமரசம் பேசினார், என்பது தான் வரலாறு.


பழனியில் இப்போது தமிழில் அரசு குட முழுக்கு நடத்தியிருக்கிற வேளையில் இந்த வரலாறுகளை நாம் சுட்டிக்காட்டுகிறோம்.       ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விஷேட மில்லாத நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகிகின்றனர். இந்த நிலையில் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் ஆறு காலப் பூஜைகளும், திருமஞ்சனக் கைங்கரியமும் தினமும் நடைபெறுகிறது.இதற்கென மலைக்கோவிலில் 64 திருமஞ்சனப் பட்டர்களான பரம்பரை மிராசு பண்டாரங்கள் உள்ளனர். இவர்களது பணி வரதமாநதியிலிருந்து வரும் வரட்டாறு புனித நீரை திருக்குடத்தில் சேகரித்து தினந்தோறும் ஆறு கால பூஜைக்கு தீர்த்தங்களாக தலையில் சுமந்த படி படிப்பாதை வழியாக தினமும் கொண்டு சென்று அனைத்து அபிஷேகங்களும் நடந்த வேண்டும். இது பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகின்றனர். 64 மிராஸ் பண்டாரங்களுக்கு எந்த மாத ஊதியமும்  கிடையாது. அர்ச்சனை அபிஷேக சிரபதட்சணை சீட்டுகளில் பங்குத் தொகை மட்டுமே பெறுகிறார்கள், அதே போல பக்தர்கள் கொண்டு வரும் அர்ச்சனை, அபிஷேகப் பொருட்களைப் பெற்று அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுக்கும் போது பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை மட்டுமே பெற்றுக் கொண்டு வாழ்வாதரத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிற நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக தற்போதுள்ள லட்சுமி 64 மிராஸ் பண்டாரங்களை கொள்ளை அடிப்பதாகவும், திருட்டு பயலுங்க என்றும் தரக் குறைவாகப் பேசுவதாகவும், நீங்கள் வேண்டாம் வெளியே செல்லுங்கள் என்றும், வேறு நபர்களை நியமித்துக் கொள்கிறோமென்று  கூறுகிறார்கள்.


பண்டாரங்களின் உரிமைகளில் திருக்கோவில் நிர்வாகம் தலையிடக் கூடாதென நீதிமன்றம் தடை ஆணையை பிறப்பித்தது அதை அவர்கள் பெற்றுள்ளதால் அரசு ஊழியர் என்பதை மறந்து தனிப்பட்ட விரோதி போல கோபம் கொண்ட உதவி ஆணையர் லட்சுமி தரகுறைவாக பேசுகிறார்கள் என்றால் ஒரு மிராசு பண்டாரம். அந்த செயலைக் கண்டித்து ஒரு நாள் பணிகளைப் புறக்கணித்து விட்டு திருக்கோவில் அலுவலகத்தில் இணை ஆணையரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஆனது. தொடர்ந்து சேவல் , கோழிகளை ஏலம் விடுவதில் இந்து அமைப்பினரை ஒருமையில் பேசியும், சாலையோரம் வியாபாரம் செய்து வரும் ஒரு பெண்ணை சங்கிலியைப் பிடித்து இழுத்தும் தொடர் சர்ச்சைகளில் உதவி ஆணையர் லட்சுமி சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. வழிபாடு செய்யும் வழியில் சில உண்மைகள் உணரவேண்டும் பண்+ஆரம்= பண்டாரம்; பண் என்பது பாமாலை தொடுப்பவர்கள் என்றும், பண்ணோடு ஓதுபவர்கள் என்றும், பண்ணோடு இசைப்பவர்கள் என்றும், மற்றும் பண்டகசாலை காப்பாளர் என்றும் பொருள் கூறுவர். சில கிராமங்களில் வாழும் ஊர்களில் உள்ள பண்டாரங்கள் சங்கு சிகண்டி அடித்து வழி வழியாக பூஜை நடத்தி வருவதால் பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் கர்நாடகா மாநிலத்தில் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர், தமிழ்நாட்டில் ஆண்டிப் பண்டாரம், பண்டராம், என்பது கர்நாடக மாநிலத்தின் ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பூக்கட்டும் ஆண்டிப்பண்டாரம் ஜாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத பாரம்பரிய கிராமக் கோவில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். மற்றும் தெலுங்கு தாசரிகள்,

9 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் ராஜராஜ சோழர் மற்றும் குலோத்துங்க சோழர் காலத்தில் சைவ நெறிக் கோவில்கள் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த ஆகமங்கள் ’அர்ச்ச’ முறை கொண்டவை. அதாவது 16 வழிபாடுகள் மூலம் சிவனை வழிபடுபவை.

ஆனால் இவற்றுக்கு வெளியேயும் பல வழிபாட்டுமுறைகள் இருந்தன. அவை தாந்த்ரீக (குறியீட்டுச் சடங்குகள் கொண்ட) வழிபாட்டு முறையை பின்பற்றியவை. அவற்றை பக்தி இயக்கம் வெறுத்து ஒதுக்கவே அவை இரகசியச் சடங்குகளாயின. தாந்த்ரீகக் கல்வி அளிக்கும் கல்விச்சாலைகளை ராஜராஜ சோழர் அழித்தார். (காந்தளூர் சாலை கலமறுத்தருளி...காந்தளூர்ச்சாலை குமரிமாவட்டத்தில் இருந்த அதர்வண வேத பாடசாலை) இந்த தாந்த்ரீக மதங்களில் பல ரகசியச்சடங்குகளாக ஆயின. பௌத்த ஞானத்தை உள்வாங்கின. ரசவாதத்துடன் கலந்தன. பின்னர் சித்தர் மரபாக உருவெடுத்தன.

வீரசைவம் லிங்க வழிபாடு ஆகம முறைகளுக்கு வெளியே உள்ள வழிபாட்டுமுறைகளில் இருந்து பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் உருவானது. அதன் தத்துவ ஊற்றுமுகம் காஷ்மீர சைவம். அவற்றுக்குத் தனி மடங்கள் வந்தன. பல்லவர்களால் அது பேணப்பட்டன. பின்னர் வீரசைவம் கர்நாடகத்தில் பரவிச் செழித்தது. கர்நாடகத்தில் பசவண்னர் உருவாக்கிய சைவம் இன்று கர்நாடக வீரசைவமென சொல்லப்படுகிறது.

தமிழ் வீரசைவர்கள் ஆகம சைவர்களால் புறக்கணிக்கப்பட்டனர். விஜயநகரப் பேரரசின் மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆட்சி நடத்திய நாயக்கர்கள் காலகட்டத்தில் வீரசைவ மடங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. ஆகவே ஆலயங்களைக் கைப்பற்ற போட்டிகள் நிகழ்ந்தன. குறிப்பாக சங்கரன் கோவில் வீரசைவர்களால் கையகபடுத்தப்பட்டு நெடுங்காலம் அவர்களின் சடங்குகளுக்குள் இருந்தது. வீரசைவர்களின் பூஜகர்கள் அல்லது பண்டாரங்கள் என்ற ஜாதியினர். இவர்களை (இசை வேளாளர் பிரிவில் உள்ளது போல்) வைராகிகள் அல்லது வைராவிகள் என்றும் சொல்வார்கள். வீரசைவ தாந்த்ரீக நெறிகள் சிலவற்றை இவர்கள் கையாள்வதனால் இப்பெயர். இவர்கள் மெல்ல மெல்ல இன்று ஐயர்கள் எனும் பிராமணர் சார்ந்த பட்டர்கள் கோயில்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்று சிறிதளவு எஞ்சும் செல்வாக்கு பண்டாரங்களுக்கு பழனியில் மட்டுமே உள்ளது.

பண்டாரம் இனத்தைச் சேர்ந்தவர்களில் அனேகமானோர் ஆலயங்களில் தொண்டு வேலைகளை செய்யவும், ஓதுவார்களாகவும், பண்டகசாலை பராமரிப்பாளராகவும், பண்டைய அரசனால் நியமிக்கப் பெற்றார்கள் என்றும் அறிய முடிகின்றது. அத்துடன் இவர்கள் கிராமங்களில் அம்பலம், சம்பளம், உம்பலம், போல பண்டாரமும் ஒரு அங்கமாக சமஸ்தானத்தின் சார்பில் நியமிக்கப்பட்டார்கள் இவர்களில் சிலர் ஜோதிட சாத்திரத்திலும் வல்லுனர்களாகவும் இருந்தனர். இவை மாத்திரமன்றி ஆலயங்களில் பண்ணோடு திருமுறைகள் ஓதுபவர்களாகவும், சங்கு சிகண்டி வாத்தியம் செய்பவர்களாகவும், பூமாலை கட்டுதல், பூசைக்குரிய பூக்களை நந்தவனத்தில் சேகரித்தல், சுவாமி திருவுருவங்களை (சாத்துப்படி) அலங்கரித்தல் போன்ற திருத்தொண்டுகள் செய்வதிலும் இருந்துள்ளார்கள். மேலும் "பண்டாரம்" என்ற சொல்லானது "அருளநுபவக் கருவூலம்" என்ற பொருளைக் கொண்டது. பண்+ஆரம்=பண்டாரம்; பண்ணினால் பாமாலை தொடுப்பவர்கள் என்றும், பண்ணோடு ஓதுபவர்கள் என்றும், பண்ணோடு இசைப்பவர்கள் என்றும், பண்டகசாலை காப்பாளர் என்றும் பொருள் கூறுவர். இதன் காரணமாகவே இவர்களை எல்லோரும் "பண்டாரம்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார்கள். பண்டார வகுப்பினர் அரசாங்க, கல்விப் படிவங்களில் கர்நாடக மாநிலத்தின் ‘வீரசைவ லிங்கத்தார்’ எனத் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இந்தச் சமூகப்பிரிவில் லிங்கம் அணிந்து கொள்பவர்களும் உண்டு. ஆனாலும் அவர்களில் பெரும்பாலோர் இன்று முருகனடிமைகளே. அதை உணர்ந்து பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நீண்ட காலம் நடந்துவரும் பூஜை முறைகளை இந்து சமய அறநிலையத் துறை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்பதே முருக பக்தர்கள் கோரிக்கையாகும்.பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பழனி மலைக்கும், பண்டாரங்களுக்கும் மிகப்பெரிய பாரம்பரியத் தொடர்பிருக்கிறது.

18 சித்தர்களில் ஒருவரான போகர் லஉருவாக்கிய நவபாஷாணத்தில் ஆன ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு நடக்கும் ஆறு கால பூஜைக்கு தினமும் அபிஷேகம் செய்ய திருமஞ்சன நீரை பல ஆண்டுகளாக ஆத்மார்த்தமாக வரதமாநதியிலிருந்து பண்டாரங்கள் . கொண்டுவரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரியமான நிகழ்வுகளை அழிக்கும் வகையில் குருக்கள், பண்டாரங்கள், மடாதிபதிகளுக்கு அரசு பல வழிகளிலும் நெருக்கடியைக் கொடுக்கிறது.

குங்குமம், விபூதி பூ விற்கிறார்கள், பக்தர்களிடம் காசு வாங்குகிறார்கள் என்று கூறி இவர்கள் மலைக்கு வரக்கூடாது என உத்தரவு போடுகிறார்கள். மூன்று மாதமாக 20-க்கு மேற்பட்ட பண்டாரங்கள் இறை தொண்டு செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு சென்றால் ஏ.சி., டி.சி., ஜே.சி., மேனேஜர் அனுமதி வாங்கி வருமாறு அலைகழிக்கப்படுகின்றனர். தடுப்பது தொடர்ந்தால் பா.ஜ., மிகப்பெரிய போராட்டத்தை கையிலெடுக்கும் என்றார்.

இது குறித்து தேவஸ்தான கருத்தை கேட்க பலமுறை முயற்சித்தபோதும் அதிகாரிகள் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...