சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் கல்லலில் செயல்படும் ஐசிஐசிஐ வங்கியிலிருந்த அடமான நகைகளை மோசடி செய்த கும்பல் .
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் கல்லலில் செயல்படும் ஐசிஐசிஐ வங்கியில் நடந்த மோசடி சம்பவம் சிவகங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத. அது தொடர்பான விசாரணையை காவல்நிலையத்தில் நடத்தி வருகிறார்கள் என்றாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பாகியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வருகிறது ஐசிஐசிஐ தனியார் வங்கி. இதில் மேலாளராக வேலை பார்ப்பவர் விக்னேஷ் (வயது 34 ) தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கோட்டைகுளத்தைச் சேர்ந்தவர் துணை மேலாளராக பணியாற்றி வருபவர் ராஜாத்தி (வயது 38) இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் புலிக்கண்மாயைச் சேர்ந்தவர். இந்த வங்கியின் மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை புகார் அடிப்படையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அடகு நகைகளில் முறைகேடு நடந்திருப்பது தெரிந்ததைக் கண்டு அதிர்ந்தார்.
உடனடியாக விசாரணையையும் மேற்கொண்ட போது தான், வங்கி மேலாளர், துணை மேலாளர் இருவரும் சேர்ந்து, மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. 37 பேர் வங்கியில் அடமானம் வைத்த 533 நகைப் பைகளை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக போலியான கவரிங் நகைகளை வைத்திருக்கிறார்கள் அத்துடன், அடகு வைத்த அசல் நகைகளை தங்களுக்குத் தெரிந்தவர்கள் பெயரில் மறுபடியும் அதே வங்கியில் அடமானம் வைத்து அதற்கும் பணத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
இதனிடையே, நகைகளை அடமானம் வைத்த 26 பேர், தஙகளது நகைகளை மீட்க வங்கிக்கு வந்துள்ளனர். உரிய பணத்தைச் செலுத்தி தங்கள் நகைகளை திருப்பிய போது, அவர்களது அசல் நகைகளைத் திருப்பி தந்துள்ளார்கள். ஆனால், அவர்களிடம் வாங்கிய பணத்தை வங்கியில் செலுத்தவில்லை புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விக்னேஷ், ராஜாத்தி இருவரையும் கைது செய்தனர்.. அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்துள்ளது. அதேபோல, மோசடிப் பணத்தைக் கொடுத்து வைத்திருந்த ரமேஷ் (வயது 48), அவரது மகன் சதீஷ் (வயது 21) ஆகியோரையும் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது"மோசடி செய்த பணத்தில், விக்னேஷ் ஆன்லைன் ரம்மி விளையாடியதில் மொத்தப் பணத்தையும் இழந்திருக்கிறார்.. மறுபடியும் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக, அடமானம் வைத்த நகைகளில் மேலும் மோசடி செய்துள்ளார். அதேபோல் ராஜாத்தியும், மோசடியாகக் கிடைத்த பணத்தை பல்வேறு இடங்களில் சொத்துகளில் முதலீடு செய்திருக்கிறார்.இந்த வங்கியில் 26 பேர் மட்டுமே பணத்தைச் செலுத்தி தங்களது அசல் நகைகளை திருப்பியிருக்கும் நிலையில், 11 பேர் தங்களது நகைகளை திருப்பவில்லை. எனினும், அவர்களது அசல் நகைகள் வங்கியிலேயே பாதுகாப்பாக உள்ளதால், அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" என்கின்றனர் வங்கி நிர்வாகம்.
ஐசிஐசிஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளுக்குப் பதில், கவரிங் நகையை செய்து வைத்து மோசடி செய்த பெண் துணை மேலாளர் உட்பட நான்கு நபர்கள் கைதாகியிருக்கும் சம்பவம் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்