பல உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்ப்-உத் தஹிரிர் எனும் தீவிரவாத அமைப்பை சார்ந்த நபர்களை
இந்திய புலனாய்வு முகமை அலுவலர்கள் தமிழ்நாட்டில் 9 நபர்களும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவிவ் ஒருவர் என மொத்தம் பத்து நபர்களைக் கைது செய்து சோதனையில் ஈடுபட்டனர். இந்தத் தீவிரவாத அமைப்பானது, உலக நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்டாலும் இந்தியாவில் தற்போது வரை தடை செய்யப்படாத நிலையில், தேசியப் புலனாய்வு முகமை அலுவலர்கள், இந்த அமைப்பு காஷ்மீரை விடுவிக்கக்கோரி பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவியை நாடியதும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பல சதிச் செயல்கள் செய்ததும் தெரிய வந்ததையடுத்து, இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இந்திய அரசு தடை செய்துள்ளது.
இந்த வழக்கில் NIA அலுவலர்களால் சென்னை இராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்கள் முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி, ஃபைசுல் ரகுமான், தஞ்சாவூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் (எ) முஜிபுர் ரஹ்மான் அல்தான் சாஹிப் ஆகியோரையும் ,பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அஜீஸ் அகமது என இதுவரை பத்து நபர்களைக் கைது செய்து தேசிய புலனாய்வு முகமை தென்மண்டல அலுவலர்கள் சோதனைகள் நடத்தியும் வருகின்றனர்.
கருத்துகள்