ஹிந்து முன்னணி சார்பில் ஹிந்துக்களின் உரிமை மீட்புப் பிரசாரப் பயணம் நிறைவு விழா
சென்னை மதுரவாயலில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாதம் 1 ஆம் தேதி நடந்த போது அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், திரைப்பட சண்டை பயிற்சி இயக்குநருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலை உடைக்கப்படும் நாள் தான் ஹிந்துக்களின் எழுச்சி நாள் எனப் பேசியிருந்ததுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குமரன் என்ற நபர் அளித்த புகாரில்,
கலகம் செய்யத் தூண்டிவிடுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை பூஜியக் குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனல் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், கோவில் வாசலில் கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களுடன் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையிலுள்ள சிலையை காவல் துறையினர் அகற்றியிருக்க வேண்டும், சிலையை வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு பதிலாக, பேசிய தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கோவிலுக்கு எதிரில் ஆத்திகர்கள் குறித்து சிலை பீடத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் பற்றியே மனுதாரர் கனல் கண்ணன் பேசியிருக்கிறார் எனக் கூறி, கனல் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கனல் கண்ணன் மீது பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன். கனல் கண்ணன் பெரியார் எனும் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு எதிராகப் பேசியதாக பதிவான வழக்கில் அவருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர், 'கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்'
என ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் நேர் எதிரே அவரது சிலையுடன் வாசகம் உள்ளதாகவும் இது வழிபாடு செய்யும் பக்தர்கள் மனதைப் புண் படுத்துவதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். பெரியார் சிலையில் அப்படி யொரு வாசகம் இல்லையா? இருக்கிறதா என்பது முக்கியமல்ல அது அந்த இடத்தில் இருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது
திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு வெளியேயுள்ள பெரியார் எனும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சிலையை உடைக்க வேண்டும்" எனப் பேசியதாக ஹிந்து முன்னணியைச் சேர்ந்த திரைப்பட சண்டைப் பயிற்சி இயக்குநர் கனல் கண்ணன் மீது கடந்தாண்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது, வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. எழுத்தில் உள்ள வாசகம் பேச்சில் வருகிறது எனவே அந்த வழக்கை நேற்று ரத்து செய்து முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.
கருத்துகள்