தமிழ்நாடு பாண்டிச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கான
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை.
அக்டோபர்.மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம். அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு ஆந்திரப் பிரதேசம் நோக்கி நகருமென வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்தடுத்த நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதை வைத்தே வானிலை ஆய்வு மையம் தகவல் தரும். செவ்வாய் கிழமை, புதன் கிழமைகளில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்பது நிச்சயம். அதன் காரணமாக பல மாவட்டங்களில் ஆரஞ்சு கலர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு தமிழ்நாடு கடற்கரையை நெருங்கியதும் அது நிலைத்து நிற்கும் சாத்தியக்கூறுகள் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் இடைவேளையுடன் மழை பெய்யக்கூடும். இடையில் கடுமையாக பாண்டிச்சேரி - மஹாபலிபுரம்-சென்னை-புலிக்காட்-நெல்லூர்-காவாலி கடற்கரையில் கடக்கும் நிலையில் இருக்கும், அங்கு நான்கு நாட்களும் வெவ்வேறு தீவிரத்துடன் மழை பெய்யக்கூடும். எனவே சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
பருவமழை காலத்தில் விழாமல் காலம் கடந்த நிலையில் விவசாய மக்கள் பருவம் தப்பி விவசாயப் பணிகளைத் துவக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த மக்கள் இன்னும் சரியாக மழை பெய்து ஏரிகள் குளங்கள் நிரம்பாதா என கவலை கொள்ளும் நிலை எதார்த்தமாது ஆனால் பொது சிந்தனை இல்லாமல் சுயநலத்திற்காக ஆறு குளம் குட்டை, ஏரிகள், வாய்க்கால், ஊருணி போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கட்டிய ஊழல் மக்கள் ஏன் மழை வருகிறது என கவலை கொள்ளும் நிலை உள்ளது. சரியான இடத்தில் சரியான மழை தற்போது விழுகிறது.
கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி பலத்த மழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கல்லக்குறிச்சி, கடலூர், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் அடுத்த நான்கு நாட்களில் கனமழை பெய்யக்கூடும்.
இன்று திங்கட்கிழமை காலை அல்லது மதியம் மழை தொடங்கும், தொடங்கும் நேரத்தை சொல்வது சற்று கடினம். ஒட்டுமொத்தமாக செவ்வாய்க்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் மழை பெய்வதற்குக் காத்திருக்கிறது, ஏனெனில் குறைந்த / காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கில் மிகவும் அடர்த்தியான மேகங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அடர்த்தியான மேகங்கள் உள்ள பகுதியில் கணமழை விழும்,
சென்னைக்கு அருகிலுள்ள கடற்கரைகள் 30+C உடன் வெப்பம் மற்றும் தீவிரமடைவதற்கு ஏற்றது. இது பெயரிடப்பட்ட சூறாவளியாக மாறலாம் காற்று ஒரு கவலையாக இருக்காது, அது ஒரு புயலாக மாறினாலும், அது பலவீனமாக இருக்கும். மழை முக்கிய அச்சுறுத்தல்.
வாநிலை ஆய்வு நடுவம் மற்றும் அரசின் அமைப்பு அதிகாரப்பூர்வ ஏஜென்சி மூலம் மக்கள் பாதிப்புகள் ஏற்படாதவாறு நன்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.00-7.00 மணிக்கு மழை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.கனமழை பெய்யக்கூடும். அதாவது, இந்த மாவட்டங்களில், 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யும் என்பதால், 'ஆரஞ்ச்' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்களில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது
இதைத் தான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்