மியான்மர் அல்லது பர்மா அகதிகள் நம் நாட்டில் குடியேறிய பின்னர் பர்மா காலனி உருவானது, பர்மா எனும் மியான்மார் நாட்டில் ஒரு சாதாரணத் தொழிலாளியாக அவரது தந்தை குடும்பம் வாழ்க்கையைத் துவங்கியது.
மியான்மரில் அதாவது பர்மாவில் இருந்து அகதி பரதேசியாக நாடு திரும்பிய இவரது குடும்பம், கோயம்புத்தூரில் குடியேறியது. 13 வயதில் ஒரு தேநீர் கடையில் லாட்டரிச் சீட்டுகளை வாங்கி சில்லறையாக விற்க ஆரம்பித்த மார்ட்டின்,
விரைவிலேயே தனக்கென தனியாக ஒரு நெட்வர்க்கை உருவாக்கினார். இன்றோ தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது, 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் என பணபலம் உயர்ந்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனங்கள், நிதியைப் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து,
பாரத ஸ்டேட் வங்கி இந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு அளித்தது. அவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்தத் தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி அதன் இணையதளத்தில் வெளியிட்டதில் இருந்த தரவுகளின்படி,
அதிகபட்ச தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனம் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் எனத் தெரியவந்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு இடையில் இந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த நிறுவனம் 195 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இரண்டு முறை ரூபாய்.210 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களையும் வாங்கியது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூபாய்.63 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது.
பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 1991-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இதன் பதிவு அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் பணமோசடி வழக்கில் மறு விசாரணை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லாட்டரி சீட்டு விற்பனை மொத்த ஏஜன்டு மார்ட்டின் அவரது மனைவி லீமாரோஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கை கடந்த காலத்தில் ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தவறானதென கருத்துத் தெரிவித்த உயர் நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய்.7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பணம் லாட்டரிச் சீட்டு மொத்த விற்பனை ஏஜன்டு மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததன் மூலமாகத் திரட்டப்பட்ட தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்ததையடுத்து நாகராஜன், மார்ட்டின், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள் மீது மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச்சட்டம் (PMLA) ன் கீழ் வழக்குப் பதிவு செய்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதால் வழக்கை முடித்து வைக்கக் கோரி மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்நில் ஆலந்தூர் நீதிமனறத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையேற்ற நீதிமன்றம் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறையின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் அக்டோபர் மாதம்.28 ஆம் தேதி) விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த விவகாரத்தில் மோசடி நடைபெற்றதற்கான ஆதாரங்கள் வலுவாக இருந்த நிலையிலும், காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்திருப்பது தவறானது” என வாதிட்டார். மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினர் சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினரின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை” என ஊழல் செய்த நபர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வாதிட்டார். அதேபோல, லாட்டரி மார்ட்டின் தரப்பிலும் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவுக்கு அவரது வழக்கறிஞர் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ லாட்டரி மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினரே இந்த வழக்கை முடித்து வைக்கும் படி அறிக்கை தாக்கல் செய்திருப்பது ஊழல் நடந்துள்ளது என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். எனவே, இந்த வழக்கை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினரும் அமலாக்கத் துறையும் மீண்டும் விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர். மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் ஒரு ஊழல் வெளிச்சத்திற்கு வருகிறது.இதில் பொது நீதி யாதெனில்:- அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் எதிர்த்து நடத்தப்பட்ட வழக்கை, திமுக ஆதரித்து மூடியது. வி சி கட்சி பல கோடிகளில் வாங்கியதாக அந்த குடும்பத்தில் ஒருவருக்கு பொதுச் செயலாளர் பதவியைத் தந்தது.
கருத்துகள்