மின்சார ரயில் பறக்கும் பாதை சீரமைக்கும் பணிகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வேளச்சேரியிலிருந்து சிந்தாதரிப்பேட்டை நிறுத்தம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையேயான பறக்கும் மின்சார ரயில் சேவைகள் நாளை முதல் துவங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்ததால் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இனி புறநகர் ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரெயில் அறிவித்துள்ளது.
அதைபோல அடுத்த முக்கிய அறிவிப்பு
அருப்புக்கோட்டையிலிருந்து காலை 6:45 மணிக்கு செல்லும்
விருதுநகர்- காரைக்குடி- வழி திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில். காரைக்குடி-திருச்சிராப்பள்ளி இடையே நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக இந்தத் தற்காலிக ரத்து. அதனால் இந்த ரயில் காரைக்குடி வரை மட்டுமே செல்லும்.
அதே வேலையில் மறுமார்கத்தில் இயங்கும் திருச்சிராப்பள்ளி-காரைக்குடி-விருதுநகர் பயணிகள் ரயில் வண்டி வழக்கம் போல் இயங்கும்.
கருத்துகள்